என் மலர்

  நீங்கள் தேடியது "kp munusamy"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்.
  • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

  சென்னை:

  அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார். அந்த அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெற்று மாவட்ட அளவில் இருக்கின்ற மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் செயல்படக்கூடிய உத்வேகத்தை அவர்களுக்கு அளித்திருக்கிறார்.

  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். தேர்தலில் கடுமையாக பாடுபட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

  கூட்டணி கட்சிகளுக்குள் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் தேசிய நலன் கருதி இந்த கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அதன்படி அவர் செயல்படுவார். அவருக்கு பின்னால் நாங்கள் இருப்போம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிலர் தர்ம யுத்தம் நடத்தினர். ஆனால் உண்மையாக தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்.
  • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தார்களோ அதை எடப்பாடி செய்து காட்டுவார்.

  ஈரோடு:

  அ.தி.மு.க. சார்பில் ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடுகின்றனர்.

  ஈரோட்டில் அ.தி.மு.க. தேர்தல் பணிமனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, கருப்பணன், கே.வி.ராமலிங்கம், நத்தம் விஸ்வநாதன் அக்ரிகிருஷ்ணமூர்த்தி, கோகுல் இந்திரா, கே.பி.முனுசாமி உட்பட பலர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

  பின்னர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

  உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது. அ.தி.மு.க. மாபெரும் இயக்கம் எம்.ஜி.ஆர். ஆல் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இயக்கம். 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளோம். அப்படிப்பட்ட இயக்கத்தை போராடி எடப்பாடி பழனிசாமி இன்று மீட்டு உள்ளார். இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் மத்தியில் சட்டப் போராட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி மீட்டு உள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

  சிலர் தர்ம யுத்தம் நடத்தினர். ஆனால் உண்மையாக தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தார்களோ அதை எடப்பாடி செய்து காட்டுவார். இந்த தீர்ப்பு நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் நமது வேட்பாளர் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ஓ.பி.எஸ். மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் முனுசாமி, நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்திருப்பது என்றால் ஓ.பி.எஸ். நீக்கப்பட்டது செல்லும் என்று தானே அர்த்தம். விரைவில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு முறைப்படி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவதாக கிருஷ்ணமூர்த்தி எச்சரித்தார்.
  • கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்

  சென்னை:

  ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமி 1 கோடி ரூபாய் கேட்டதாக கூறியதுடன், பணம் கேட்பது தொடர்பான ஆடியோவை வெளியிட்டார்.

  ஓபிஎஸ் அண்ணனை தரம் தாழ்ந்து பேசுவதால் அவர் பேசிய ஆடியோவை தற்போது வெளியிடுகிறேன். கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவன் என்றும் கிருஷ்ணமூர்த்தி எச்சரித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  இதுபற்றி விளக்கம் அளித்துள்ள கே.பி.முனுசாமி, "கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான்" என்றார். ஆனால் தேர்தல் செலவுக்காக கடனாக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுவதாகவும், ஆடியோ, வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்
  • ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபடுகின்றனர்.

  சென்னை:

  அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு அரசியல் அரங்கில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கட்சி தலைமைக்காக சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  இதற்கிடையே பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். தேர்தல் முடியும்வரை இரு தரப்பினரும் அமைதியாக இருப்பார்கள் என்று தொண்டர்கள் நினைத்தனர். ஆனால் இரு தரப்பினரும் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபடுகின்றனர்.

  சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்வது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். சாதாரண தொண்டன் போன்று ஓ.பன்னீர்செல்வத்தால் உண்மையாக உழைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

  இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள கே.பி.முனுசாமி மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியதுடன், அவர் தொடர்பான ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதில், கே.பி.முனுசாமியிடம், ரூ.50 லட்சம் இப்போது ரெடி, 50 லட்சம் பின்னர் தருகிறேன் என கிருஷ்ணமூர்த்தி பேசுகிறார்.

  இதுபற்றி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

  2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமி என்னிடம் 1 கோடி ரூபாய் கேட்டார். பணம் கொடுப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வேண்டாம் என்று கே.பி.முனுசாமி கூறினார். என்னைப்போல் பலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

  ஓபிஎஸ் அண்ணனை தரம் தாழ்ந்து பேசுவதால் அவர் பேசிய ஆடியோவை தற்போது வெளியிடுகிறேன். கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவன்.

  அவர் பணம் சம்பாதிப்பதற்காகவே எடப்பாடி அணியில் இருக்கிறார். கே.பி.முனுசாமிக்கு பதவி கொடுத்ததே ஓ.பன்னீர்செல்வம்தான். நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கு அவர் பணம் கேட்கிறார். தொண்டர்களிடமும் பணம் வசூலிக்கிறார்.

  இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • அ.தி.மு.க. சிதைந்து கிடப்பதாக சிலர் பேசுகிறார்கள்.
  • அ.தி.மு.க. வலிமையான கட்சியாக இருக்கிறது என்பதை வருகிற பாராளுமன்ற தேர்தலின் மூலம் தெரியப்படுத்துவோம்.

  சென்னை:

  புதுச்சேரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க. பிளவுபட்டு கிடப்பதாகவும், பா.ம.க.வுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

  இதற்கு கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க. என்ற கட்சியே வெளியில் தெரிந்து இருக்காது. அ.தி.மு.க. தயவால்தான் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்தது" என்று கூறி இருந்தார்.

  இதற்கு பதில் அளித்து பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் கே.பாலு நிருபர்களிடம் கூறுகையில், "அ.தி.மு.க. 4 பிரிவாக பிரிந்து இருக்கிறது என்று குழந்தைகளுக்கு கூட நன்றாக தெரியும். 1996-ம் ஆண்டு அ.தி.மு.க. பலவீனப்பட்டு கிடந்தபோது அதற்கு உயிரூட்டியதே பா.ம.க.தான்.

  1998-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் அ.தி.மு.க. மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கும். பா.ம.க. வுடன் கூட்டணி அமைத்தப் பின் தான் 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்" என்று கூறி இருந்தார்.

  இந்த நிலையில் இதற்கு பதில் அளித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:-

  பா.ம.க.வின் கருத்துக்கு பதில் சொல்லி எங்கள் சக்தியையும், நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.வின் லட்சியமே வேறு. நாங்கள் எங்கள் லட்சியத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.

  வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே ஜெயலலிதா கைப்பற்றியது போல 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம்.

  அ.தி.மு.க. சிதைந்து கிடப்பதாக சிலர் பேசுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. வலிமையான கட்சியாக இருக்கிறது என்பதை வருகிற பாராளுமன்ற தேர்தலின் மூலம் தெரியப்படுத்துவோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கே.பி.முனுசாமி மறுத்தாலும் பத்து நாட்களுக்கும் மேலாக ஒதுங்கி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
  • சீனியர் என்பதால் கொஞ்சம் முரண்டு பிடித்தால் தேடி வருவார்கள் என்று முனுசாமி நினைத்திருக்கிறார்.

  அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக புகைந்து கொண்டிருப்பது கே.பி.முனுசாமி அந்தப் பக்கத்தில் இருந்து இந்தப் பக்கம் (ஓ.பி.எஸ்) பக்கம் வரப்போகிறார் என்பதுதான்.

  உண்மையில்லை என்று கே.பி.முனுசாமி மறுத்தாலும் பத்து நாட்களுக்கும் மேலாக ஒதுங்கி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

  இப்படி திடீரென்று புகைவதற்கு காரணம் சி.வி.சண்முகத்துடன் ஏற்பட்ட புகைச்சல் தானாம். பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதற்கான தீர்மானத்தை சி.வி.சண்முகம் வாசிக்க தயாராக இருந்த நிலையில் கே.பி.முனுசாமி வாசித்து விட்டார். அன்று தொடங்கிய பிரச்சினைதான். இதுவரை அவர்கள் ராசியாகவில்லை.

  அதன்பிறகு அடுத்தடுத்து நடந்த சில நிகழ்ச்சிகளிலும் எடப்பாடி பழனிசாமி சி.வி.சண்முகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது முனுசாமியை முணுமுணுக்க வைத்திருக்கிறது.

  சீனியர் என்பதால் கொஞ்சம் முரண்டு பிடித்தால் தேடி வருவார்கள் என்று முனுசாமி நினைத்திருக்கிறார். ஆனால் 'கொஞ்சம் விட்டுப்பிடிப்போம்' என்று எடப்பாடி பழனிசாமியும் இருந்து விட்டார்.

  சி.வி.சண்முகம் தாராளமாக மடியை அவிழ்க்கிறார். ஆனால் கே.பி.முனுசாமி துட்டு அவிழ்க்க யோசிக்கிறார். அப்போ இ.பி.எஸ். இப்படித்தானே இருப்பார் என்று கட்சிக்காரர்கள் வெளிப்படையாகவே கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 2 வாரங்களாக இ.பி.எஸ். வீட்டுப் பக்கம் கே.பி.முனுசாமி எட்டிப்பார்க்க கூட இல்லை. சொந்த ஊரில் இருக்கிறார்.
  • சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.

  சென்னை:

  அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கிறார்.

  அதே அணியில் இருக்கும் சி.வி.சண்முகத்துடன் கருத்து வேறுபாடு இருக்கிறது. அவர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினை பொதுக்குழு மேடையிலேயே வெடித்தது.

  இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு வந்தபோது அவருடன் அமர கே.பி.முனுசாமிக்கு இருக்கை போடவில்லை.

  இதனால் கோபத்தில் வெளியேறிய கே.பி.முனுசாமியை சமாதானப்படுத்தி செய்தியாளர் சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி தன் அருகில் அவரை வைத்துக் கொண்டார்.

  இந்த நிலையில் சமீபத்தில் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றபோதும் கே.பி.முனுசாமியை அழைத்து செல்லவில்லை. இது கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியது. சி.வி.சண்முகத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தன்னை புறக்கணிப்பதாகவும் ஆதங்கப்பட்டார்.

  கடந்த 2 வாரங்களாக இ.பி.எஸ். வீட்டுப் பக்கம் கே.பி.முனுசாமி எட்டிப்பார்க்க கூட இல்லை. சொந்த ஊரில் இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.

  இதனால் அவர் அதிருப்தியில் இருப்பது கட்சியினர் மத்தியில் வெளிப்படையாக தெரிந்தது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கே.பி.முனுசாமியை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக இறங்கி உள்ளது.

  அவர் விரைவில் ஓ.பி.எஸ். அணிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

  இதுபற்றி கே.பி.முனுசாமியை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது:-

  வைரஸ் காய்ச்சல் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். என்னைப்பற்றி தவறாக வதந்தி பரப்பப்படுகிறது. எப்போதும் அணி மாறி கொண்டிருக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போகவில்லை. நான் ஓ.பி.எஸ். அணிக்கு செல்ல மாட்டேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர்.
  • ஓ.பன்னீர்செல்வம் சுய சிந்தனை இல்லாதவர்.

  கிருஷ்ணகிரி :

  கிருஷ்ணகிரி மாவட்டம் புளியஞ்சேரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  ஓ.பன்னீர்செல்வம், எங்களை ஒன்றாக செயல்படலாம் வாருங்கள் என அழைக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. இந்த இயக்கத்தில் ஒரு சாதாரண தொண்டனாக இருந்தவர். இந்த இயக்கத்திற்கு எந்தவிதமான தியாகமும் செய்யாதவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர் என கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

  சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எந்தவித சூழ்நிலையிலும் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட கூடாது. நான் உயிருள்ள வரை அவர்களை சேர்க்க விடமாட்டேன்.

  இதேபோல் டி.டி.வி.தினகரன் ஒரு மாயமான், அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். பல்வேறு காலக்கட்டங்களில் தன்நிலையை மாற்றி பேசி சுயநலவாதியாகவும், சந்தர்ப்பவாதியாகவும் அவர் இருந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் ஒரு இயக்கத்தில் கடுமையாக போராடி, பல சோதனைகளை சந்தித்து, பல அவமானங்களை சந்தித்து, அவற்றை வென்றெடுத்து இந்த நிலைக்கு வந்திருந்தால் அவர் தெளிவான முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது. அவர் ஒருவர் பின்னாலே இருந்து வந்தவர். அவர் சொல்வதை கேட்டு செயல்பட்டவர். சுய சிந்தனை இல்லாதவர்.

  அ.தி.மு.க.வில் உள்ள ஒரு தலைவர் நாட்டின் பிரதமர் சொன்னார் என்பதற்காகதான் நான் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என சொன்னால், அவர் எவ்வளவு சந்தர்ப்பவாதியாக இருக்க வேண்டும். அவருக்கு சுயமாக சிந்திக்க தெரிகிறதோ இல்லையோ, சுய நலக்காரராக இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சுய நலத்திற்காக கட்சியையும், கட்சி தலைமையையும் பயன்படுத்தி உள்ளார்.

  அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நபரை விமர்சிக்க கூட நாங்கள் வெட்கப்படுகிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
  • அரசு தவறும் பட்சத்தில் மக்கள் பிரச்சினையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் ஈடுபடுவோம் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

  வேலூர்:

  வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு காட்பாடியில் ரெயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

  இதையடுத்து அவர் மீது 6 பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

  முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று வேலூர் ஜெயிலில் உள்ள எஸ்.ஆர்.கே.அப்புவை நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;-

  காட்பாடியில் நீண்ட காலமாக ரெயில்வே பாலத்தை திறக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்‌. அவரை வேண்டுமென்றே ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

  வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பொதுக்குழுவிற்கு ஏற்கனவே அனுமதி அளித்து விட்டார்.

  பணம் கொடுத்து மாவட்ட செயலாளர்களை ஈபிஎஸ் வளைப்பதாக டிடிவி தினகரன் கூறிவருகிறார். அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம், அவர் இந்த கட்சியால் ஆதாயம் பெற்று சுபயோகத்தை அனுபவித்து கொண்டிருப்பவர் அவருக்கு கட்சியை பற்றி பேச அருகதை கிடையாது. தொடர்ந்து இதுபோல் அவர் பேசினால் வழக்கு போட்டு அவரை நீதிமன்றத்தில் நிற்க வைப்போம்.

  சசிகலா பாவம் நானும் இருக்கிறேன் என பேசி வருகிறார். அவரை பற்றி பேச அவசியம் இல்லை. உண்மையாக உழைத்தவர்களை உயிர்தொண்டர்களை பிரிக்க முடியாது கட்சியினால் ஆதாயம் அடைந்த சந்தர்ப்பவாதிகள், விரக்தியில் பேசி வருகிறார்கள்.

  தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்காக போராடும் அ.தி.மு.க.வினரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது.

  தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது, அரசு தவறும் பட்சத்தில் மக்கள் பிரச்சினையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், முன்னாள் எம்.பி. ஹரி, வேலூர் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், தாஸ், பி.எஸ்.பழனி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • தற்போதைய தி.மு.க. அரசை எதிர்க்க ஒற்றை தலைமை இருந்தால் தான் அ.தி.மு.க. வலுவான எதிர்கட்சியாக செயல்படும்.
  • பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சியின் பொருளாளர் யார்? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

  கிருஷ்ணகிரி:

  கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

  உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கு கையெழுத்திடுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

  பி.பார்மில் கையெழுத்திடுவது தொடர்பாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது உள்ள சூழ்நிலையில் எந்த கையெழுத்தையும் போடக்கூடிய தார்மீக பொறுப்பை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார்.

  காரணம் ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு பொதுக்குழு, செயற்குழு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அந்த கூட்டத்திற்கு எதிராக செயல்படக்கூடாது.

  குறிப்பாக அந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் 23 தீர்மானங்களுக்கு மேல் வேறு எதையும் விவாதிக்க கூடாது என்றும் காவல்துறையையும், நீதிமன்றத்தையும் அவர் அணுகியது, கட்சி கட்டுபாட்டை மீறிய செயல்.

  அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு என்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது என்பதை கவனித்து ஆலோசனை வழங்க வேண்டும். எதிராக செயல்படக்கூடாது. கட்சியின் பொதுக்குழு அதே நாளில் திட்டமிட்டப்படி நடைபெறும்.

  கட்சியில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 70 பேரும், 66 எம்.எல்.ஏ.க்களில் ஓ. பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகிய 3 பேர் தவிர 63 பேரும், தலைமை கழக நிர்வாகிகளில் 74-ல் 70 பேரும், பொதுக்குழு உறுப்பினர்களில் 2685 பேரில் 2582 பேர் உள்பட 99 சதவீதம் பேர் ஒற்றை தலைமையை ஆதரிக்கிறார்கள்.

  எதிர்கட்சியாக இருந்து கொண்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். தி.மு.க.வை பரமவிரோதி என்று ஜெயலலிதா கூறினார்.

  ஆனால் பன்னீர்செல்வத்தின் தற்போதைய செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமே வலுவான கட்சிகள்.

  தற்போதைய தி.மு.க. அரசை எதிர்க்க ஒற்றை தலைமை இருந்தால் தான் அ.தி.மு.க. வலுவான எதிர்கட்சியாக செயல்படும்.

  பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சியின் பொருளாளர் யார்? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.