search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என்று பா.ஜ.க. ஒருபோதும் சொல்லவில்லை: கே.பி.முனுசாமி
    X

    அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என்று பா.ஜ.க. ஒருபோதும் சொல்லவில்லை: கே.பி.முனுசாமி

    • சுய லாபத்திற்கு கொள்கையை விற்று ஆதாயம் தேடும் இரு தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து உள்ளனர்.
    • தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் அ.தி.முக. கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை அ.தி.முக. இணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.க. முயன்ற காரணத்தால் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளது உண்மையில்லை. அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என்று பா.ஜ.க. ஒருபோதும் சொல்லவில்லை. அப்படி சொல்வது அபத்தமானது.

    30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. ஆட்சி செய்து பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கி உள்ள நிலையில் பா.ஜ.க. தேசிய தலைமை எப்படி தமிழகத்தில் பா.ஜ.க. முதலமைச்சர் பதவி வேண்டும் என கேட்பார்கள் கேட்கமாட்டார்கள் அப்படி எல்லாம் பேசி அ.திமு.க என்ற கட்சியை பலவீனப்படுத்த முடியாது.

    பண்ருட்டி ராமச்சந்திரன் வயதுக்கு ஏற்றவாறு பேசவேண்டும், பதிலுக்கு நாங்களும் பேசலாம் ஆனால் எங்களுக்கு நாகரிகம் உள்ளது. காவிரி பிரச்சனையில் பண்ருட்டி ராமசந்திரன் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. என சென்ற இடங்களில் எங்கும் விசுவாசமாக இல்லை. நம்பிக்கை துரோகத்துக்கு பெயர் போன பண்ருட்டி ராமச்சந்திரன் நம்பிக்கை துரோகியுடன் அமர்ந்துகொண்டு அவரை நம்பிக்கை உரியவர் என கூறுகிறார். அ.தி.மு.க.வை கபளீகரம் செய்த சசிகலா இந்த இயக்கத்தில் இருக்கக்கூடாது என நான் போராடினேன்.

    அந்த சமயம் தர்ம யுத்தம் செய்கிறேன் என என்னுடன் வந்து சசிகலாவை விமர்சனம் செய்தார் ஓபிஎஸ். தற்போது கால சூழல் மாறிய உடன் சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார். தன்னுடைய சுய லாபத்திற்கு கொள்கையை விற்று ஆதாயம் தேடும் இரு தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து உள்ளனர். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரி நதிநீர் பிரச்சினை நீண்டகாலமாக உள்ள பிரச்சினை. இதில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அடுத்த கட்டமாக அ.தி.மு.க. போராட்டம் நடத்துவது குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

    தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று. அதே நேரத்தில் தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாது. சமுக வலைத்தளங்களில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து தவறாக விமர்சனம் செய்கிறார்கள். இதை பார்த்து கொண்டு அ.தி.மு.க., சும்மா இருக்காது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×