search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CT Ravi"

    • ஹெப்பல்கருக்கு எதிராக சி.டி.ரவி பலமுறை இழிவான வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
    • கைதுக்கு ஒத்துழைக்காத சி.டி.ரவியை சட்டசபை வளாகத்தில் வைத்து கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச்சென்றது.

    பெண் அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

    மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துகள் குறித்து கர்நாடக சட்டசபையில் வாதங்கள் நடைபெற்றது.

    சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தின் போது, அமைச்சர் ஹெப்பல்கருக்கு எதிராக முன்னாள் பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி பலமுறை இழிவான வார்த்தையை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. லட்சுமி ஹெப்பால்கரின் நடத்தை மற்றும் கற்பை குறை கூறும் கடுஞ்சொல்லை சிடி ரவி தனது  பேசியதாக கூறப்படுகிறது.

    அமைச்சரின் புகாரின் பேரில் சி.டி.ரவி மீது சட்டப்பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் சட்டப்பிரிவு79 (பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை அல்லது செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதுக்கு ஒத்துழைக்காத சி.டி.ரவியை சட்டசபை வளாகத்தில் வைத்து கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச்சென்றது.

    கைது செய்யப்பட்டதற்குப் பின் வெளியான வீடியோ பதிவு ஒன்றில், காங்கிரஸ் அரசு தன்னை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், போலீஸ் காவலில் சித்திரவதைக்கு உள்ளானதாகவும் சி.டி.ரவி கூறினார்.

    சி.டி.ரவி கைது செய்யப்பட்டதற்கு எதிராக பெங்களூரு, சிக்மகளூர், பெலகாவி ஆகிய இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் அவருக்கு நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வெளியே வந்த அவர், சிறையில் தன்னை பயங்கரவாதி போல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

     

    • பெண் மந்திரிக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார்.
    • எம்.எல்.ஏ., எம்.பி.க்கான நீதிமன்றம் இந்த வழக்கு விசாரிக்க இருக்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. தலைவர் சி.டி. ரவி. இவர் மேலவை உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு எதிராக கர்நாடக மாநில பெண் மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது சி.டி. ரவி "அவர்கள் (அரசு) சர்வாதிகாரிகளைப் போல நடந்து கொண்டுள்ளன. எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி உள்ளது. சர்வாதிகாரம் நீண்ட காலம் நீடிக்காது. அரசியல் தூண்டுதல் காரணமாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இரவு முழுவதும் உணவு வழங்காமல் போலீசார் எராளமான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இதை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்வேன்" என்றார்.

    சி.டி. ரவி வழக்கை எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த இருக்கிறது.

    நேற்று கர்நாடக மாநில சட்டசபை ஒத்திவைக்கப்பட்டபோது சி.டி. ரவி லட்சுமி ஹெப்பால்கருக்கு எதிராக அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நேற்று சி.டி. ரவியை கைது செய்தனர்.

    • பெண் மந்திரியை நோக்கி பா.ஜ.க. மேலவை உறுப்பினர் சி.டி.ரவி அவதூறாகப் பேசியதாக புகார் அளித்தார்.
    • கர்நாடக பா.ஜ.க. தலைவர் சி.டி.ரவியை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

    பெங்களூரு:

    பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறிய கருத்துகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அம்பேத்கரை அமித்ஷா இழிவுபடுத்தியதாகச் சொல்லி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

    கர்நாடக சட்டசபையிலும் இதுதொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது, பா.ஜ.க. மாநில தலைவரும், மேலவை உறுப்பினருமான சி.டி.ரவி, ராகுல் காந்தியை விமர்சித்துப் பேசினார்.

    இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெபால்கர் பதிலடி கொடுத்தார். அப்போது, பெண் மந்திரியை நோக்கி சி.டி.ரவி அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொட்ரபாக, லட்சுமி ஹெபால்கர் அவைத்தலைவரிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், லட்சுமி ஹெபால்கர் அளித்த புகாரின் பேரில் சி.டி.ரவி மீது புதிய சட்டப்பிரிவு 75 மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சி.டி.ரவியை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அதற்கு ரவி மறுப்பு தெரிவித்ததால் சட்டசபை வளாகத்தில் வைத்தே குண்டுக்கட்டாக அவரை போலீசார் கைதுசெய்தனர். இதனால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அயோத்தி ராம் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.
    • அன்றைய தினம் கர்நாடக மாநில கோவில்களில் சிறப்புபூஜைக்கு ஏற்பாடு செய்ய சுற்றறிக்கை அனுப்பப்படும் என மந்திரி அறிவிப்பு.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. வருகிற 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி வருகிற 22-ந்தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்படும் என தெலுங்கானா மாநில மந்திரி ராமலிங்கா ரெட்டி அறிவித்திருந்தார்.

    இதுகுறித்து பா.ஜனதா தலைவர் சி.டி. ரவி கூறுகையில் "இந்த முடிவு சிறந்தது. நாங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர்கள் சிறந்த முடிவை எடுத்துள்ளனர். பல ஆண்டுகள் கழித்து காங்கிரஸ்க்கு ஞானம் உதித்துள்ளது. கடவுள் ராமர் எல்லோருக்கும் சொந்தமானவர். காங்கிரஸ் ராமரை விட்டுவிட்டது. தற்போது அவரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இது நல்லது, நாட்டிற்குள் நல்லது" என்றார்.

    • மக்கள் பிரச்சனையை வைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறி இருந்தார்.
    • முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு, பா.ஜ.க. முன்னாள் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார்.

    சென்னை:

    2024 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். அண்ணா குறுகிய காலத்தில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தவர். நாங்கள் ஒரு போதும் ஒரு கட்சியின் மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று கூற மாட்டோம்.

    அண்ணாமலையை மாற்ற கோருவது எங்கள் நோக்கமல்ல. இனி ஒரு போதும் பா.ஜ.க. உடன் கூட்டணி என்பதே கிடையாது.

    2026ம் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்போம். நாங்கள் மக்கள் பிரச்சனையை வைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறி இருந்தார்.

    இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு, பா.ஜ.க. முன்னாள் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார். அவரது பதிவில், "புனிதமான திருவள்ளுவர் மண்ணில் தாமரை பெரும் வெற்றி பெறும்" என்று கூறி உள்ளார்.

    • விசாரணை என்ற பெயரில் அரசியல் செய்ய காங்கிரஸ் முயற்சி செய்கிறது.
    • நாங்கள் ஊழல் செய்திருந்தால் தானே எங்களுக்கு பயம் இருக்கும்.

    பெங்களூரு :

    பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்த குறுகிய காலத்திலேயே மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இன்று தேர்தல் நடைபெற்றால் அக்கட்சி தோல்வி அடையும். பா.ஜனதா ஆட்சியில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதாக சொல்கிறார்கள். மலையை குடைந்து பார்த்தால் எலி கூட கிடைக்காது. அது போல் தான் பா.ஜனதா ஆட்சி மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டை கூறினார்கள்.

    நாங்கள் ஊழல் செய்திருந்தால் தானே எங்களுக்கு பயம் இருக்கும். ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினார். அதற்கு அவர் ஏதாவது ஆதாரங்களை கொடுத்தாரா?. விசாரணை என்ற பெயரில் அரசியல் செய்ய காங்கிரஸ் முயற்சி செய்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் தவறு செய்தவர்களை பா.ஜனதா அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

    நாங்கள் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுத்ததால் தான் இன்றும் 50-க்கும் மேற்பட்டோர் சிறையில் உள்ளனர். பிட்காயின் முறைகேடு நடந்திருந்தால் அதுபற்றி நடவடிக்கை எடுக்கட்டும். அரசு அதிகாரிகள் பணி இடமாறுதலுக்கு லஞ்சம் கைமாறுகிறது. ஒரே பணிக்கு ஒரே மாதத்தில் 4 முறை நியமனம் நடந்துள்ளது. இதில் சந்தேகம் எழவில்லையா?.

    இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிலம், நீர், காற்றில் ஊழல் செய்தவர்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
    • நாட்டை பா.ஜனதா உடைக்கவில்லை.

    பெங்களூரு :

    பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி ஊழலின் பிதாமகன். ஊழல் விதையை விதைத்ததே அக்கட்சி தான். எங்கள் அரசு மீது ஊழல் புகார்களை கூறுவதை காங்கிரஸ் தலைவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஊழல் புகார்களுக்கு ஏதாவது ஆதாரம் இருந்தால், அவர்கள் கோர்ட்டுக்கு செல்லலாம். எங்கள் அரசு மீது 40 சதவீத கமிஷன் புகார் கூறினர்.

    அதன்பிறகு என்ன நடந்தது. நிலம், நீர், காற்றில் ஊழல் செய்தவர்கள் காங்கிரஸ் தலைவர்கள். பா.ஜனதா ஆட்சியில் ஊழல் இல்லை என்று கூறவில்லை. நிர்வாக அமைப்பிலேயே ஊழல் சேர்ந்து கொண்டுள்ளது. நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறாத பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளோம். பூத் மட்டத்தில் நாங்கள் கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    இது எங்களுக்கு வெற்றியை தேடித்தரும். மார்ச் முதல் வாரத்தில் யாத்திரைகளை தொடங்க உள்ளோம். இதன் மூலம் பா.ஜனதா மேலும் பலமடையும். நாட்டை பா.ஜனதா உடைக்கவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதை உடைத்ததே காங்கிரஸ் தான். நாங்கள் சாதி, மதங்களை வைத்து அரசியல் செய்யவில்லை.

    இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

    • நாளுக்கு நாள் பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
    • அண்ணாமலையை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர். அவருடைய நடவடிக்கைகள், செயல் திட்டங்களை பார்த்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பயப்படுகிறார்கள்.

    திருச்சி:

    பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி‌.ரவி திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க.வின் இலக்கு என்பது இந்தியாவை வல்லரசு ஆக்குவதாகும். அதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலிமையுடன் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வில் உள்ள ஒவ்வொருவரின் கடமையும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வளர்ச்சி தான்.

    அண்ணாமலை தலைமையின் கீழ் நாங்கள் எல்லா மக்களின் கைகளைப் பிடித்து நடந்து கொண்டிருக்கின்றோம். மக்கள் சேவை மட்டும்தான் எங்களது ஒரே நோக்கம். நாளுக்கு நாள் பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலையை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர். அவருடைய நடவடிக்கைகள், செயல் திட்டங்களை பார்த்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பயப்படுகிறார்கள்.

    இதன் அடிப்படையில் பா.ஜ.க. தமிழகத்தில் வலுவாக இருக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்து வலிமையான தமிழகத்தை உருவாக்குவோம். முன்னாள் பிரதமர் நேரு ஒரு முறை சொன்னார், நாலு பேரை வைத்துக்கொண்டு பா.ஜ.க. இயங்கி கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது மொத்த நாடும் எங்களுக்கு பின்னால் உள்ளது.

    5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக தி.மு.க., காங்கிரஸ் குற்றம் சாட்டுகின்றது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் இருந்தால் காட்டச் சொல்லுங்கள். தி.மு.க., காங்கிரசின் நோக்கம் அவர்களது குடும்பத்தை வளர்ப்பது தான்.

    தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் முழு நேர வேலையே ஊழல் செய்வது மட்டும்தான். ஆனால் எங்களுடைய வேலை மக்களுக்கான திட்டம், திட்டம், திட்டம் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த அவர், நாங்கள் கட்சியை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

    ஒவ்வொரு இடத்திலும் பா.ஜ.க.வை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.

    ×