என் மலர்
நீங்கள் தேடியது "தினகரன் ஆதரவாளர்கள் நீக்கம்"
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சபாநாயகர் விளக்க நோட்டீஸ் மீதான நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றத்தின் மூலம் தடை பெற்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. 13 இடங்களிலும், அ.தி.மு.க. 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆக உயர்ந்து ஆட்சியை காப்பாற்றி உள்ளது. அது போல் தி.மு.க. கூட்டணி கட்சியின் பலம் 110 ஆனது.
இவர்களில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தகுமார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து தி.மு.க. கூட்டணியின் பலம் 109 ஆகும்.
தி.மு.க. சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக கருதப்படும் பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி மற்றும் கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க. முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தற்போது நடந்து முடிந்து உள்ள பாராளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு காரணம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமரகுருதான். அ.தி.மு.க. தொண்டர்களை அவர் சரியாக வழிநடத்தவில்லை. இதன் காரணமாக தி.மு.க. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இனிமேலாவது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க. வெற்றிபெற முடியும். கட்சி தலைமையில் உள்ளவர்கள் இனியாவது தொண்டர்கள் விருப்பப்படி செயல்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக டி.டி.வி. தினகரன் தனியாக செயல்பட்டார். இவருக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகள் உள்பட 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. 13 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

அமைச்சர் ஜெயக்குமார் விடுத்த அழைப்பில், “அ.தி. மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்து பாதுகாக்கப்பட்ட இயக்கம். சசிகலா, தினகரன் குடும்பம் தவிர பிரிந்தவர்கள் அனைவரும் தாய் கழகத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வம், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் தனபால் இந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அதில், “உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு இருந்தார்.
இதை தொடர்ந்து 3 பேரும், சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். இதையடுத்து சபாநாயகர் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக தடை விதித்துள்ளது. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறிய தினகரனின் முயற்சி வெற்றி பெறவில்லை. அவரது அ.ம.மு.க. கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.
எனவே, சபாநாயகர் நடவடிக்கைக்கு உள்ளான தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் இனி அ.தி.மு.க.வை முழுமையாக ஆதரிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே, சபாநாயகர் தனது நடவடிக்கையை விலக்கிக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம், தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், வெற்றிவேல், தங்க தமிழச்செல்வன் உள்பட 18 பேர் கடந்த ஆண்டு மனு கொடுத்தனர்.
இதையடுத்து இந்த 18 பேரையும் தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம் செய்து கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 18ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாசரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கடந்த 14ந் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

இதையடுத்து இந்த வழக்கை கடந்த 4 ந்தேதி விசாரணைக்கு எடுத்த நீதிபதி சத்தியநாராயணன், 23-ந்தேதி முதல் தினந்தோறும் 5 நாட்கள் விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி இந்த வழக்கை நாளை முதல் நீதிபதி விசாரிக்க உள்ளார். முதல் நாள் 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் ராமன் வாதம் செய்ய உள்ளார். #18MLAs #MLAsDisqualification
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டசபை சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். அதில், சபாநாயகரின் உத்தரவை சரி என்று தலைமை நீதிபதியும், தவறு என்று நீதிபதி எம்.சுந்தரும் கூறியிருந்தனர்.
இதையடுத்து டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், வழக்கில் ஒரு மனுதாரருமான தங்க தமிழ்செல்வன், தலைமை நீதிபதியை கடுமையாக விமர்சனம் செய்து, ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்தார்.
இதையடுத்து அவர் மீது, ஐகோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பெண் வக்கீல் ஸ்ரீமதி என்பவர் தாக்கல் செய்தார். இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் இந்த வழக்கை பரிசீலித்துவிட்டு, தங்க தமிழ்செல்வனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.
அதன்படி, தங்க தமிழ்செல்வன் நேற்று மாலையில் வக்கீல்கள் தமிழ்மணி, டி.மோகன் ஆகியோருடன் ஆஜரானார். அப்போது தலைமை நீதிபதி குறித்து தெரிவித்த விமர்சனத்துக்கு, நிபந்தனையற்ற மன்னிப்பை அவர் கோரினார்.
இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல், நிபந்தனையற்ற மன்னிப்பை எல்லாம் ஐகோர்ட்டில் தான் கேட்கவேண்டும் என்று கருத்து கூறினார். இதையடுத்து, கோர்ட்டு அவமதிப்பு புகாருக்கு விளக்கம் அளிக்க தங்க தமிழ்செல்வன் தரப்பில் 6 வார காலஅவகாசம் கேட்கப்பட்டது. இந்த கோரிக்கையை அட்வகேட் ஜெனரல் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து ஐகோர்ட்டை விட்டு வெளியில் வந்த தங்க தமிழ்செல்வன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என் மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கு குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகும்படி அட்வகேட் ஜெனரல் உத்தரவிட்டார். அதன்படி இன்று (நேற்று) ஆஜரானேன். பின்னர் இந்த வழக்கிற்கு விளக்கம் அளிக்க காலஅவகாசம் கேட்டதால், ஆகஸ்டு 29-ந்தேதி நேரில் ஆஜராகும்படி அட்வகேட் ஜெனரல் உத்தரவிட்டார்.
தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவேன் என்று முன்பு கூறினேன். தற்போது வழக்கை வாபஸ் பெறவேண்டிய சூழ்நிலை இல்லை. இந்த வழக்கை தற்போது விசாரிக்கும் 3-வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் மீது நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கு விரைவாக முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், வழக்கை வாபஸ் பெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி கவர்னரிடம் மனு கொடுத்ததால் 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.
இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் கடந்த மாதம் தீர்ப்பு கூறப்பட்டது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு கூறினார். மற்றொரு நீதிபதியான சுந்தர் செல்லாது என்று கூறினார். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கு சென்றுள்ளது.
இதுபற்றி தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவிக்கையில் வழக்கு முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே செல்வதால் வழக்கை வாபஸ் பெறப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால் இன்னும் அவரால் வழக்கை வாபஸ் பெற முடியவில்லை.
இதுபற்றி தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
எங்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் நியமிக்கப்பட்டுள்ள 3-வது நீதிபதி தினமும் வழக்கை விசாரிக்க போவதாக கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
விசாரணை முடிந்ததும் தீர்ப்பையும் விரைந்து சொன்னால் தொகுதி மக்களுக்கு நல்லது.
தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறப் போவதாக ஏற்கனவே நான் கூறி இருந்தேன். ஆனால் எந்த நீதிபதியிடம் இதை கொடுப்பது என்பதில் சிக்கல் நிலவுகிறது.
இரு நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பு கூறி உள்ளதால் அவர்கள் இருவர் முன்னிலையில் மனு கொடுக்க வேண்டுமா? அல்லது 3-வது நீதிபதியிடம் வாபஸ் மனுவை கொடுக்க வேண்டுமா? என்ற சட்ட சிக்கல் ஏற்படுகிறது.
மனு கொடுத்தாலும் அதை நீதிபதிகள் ஏற்பார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே இதுபற்றி மூத்த வக்கீல்களுடன் ஆலோசித்த பிறகு தான் முடிவு செய்ய முடியும்.
தலைமை நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்ததற்காக எனக்கு அட்வகேட் ஜெனரல் நோட்டீசு அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்துக்கு பதில் அளிக்க நாளை மறுநாள் நான், ஐகோர்ட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விளக்கம் அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். #18MLAs #ThangaTamilSelvan
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 18 எம்.எல்.ஏ.க்களும் வழக்கு தொடர்ந்தனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு கூறப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.
18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்று இந்திராபானர்ஜி தீர்ப்பு வழங்கினார். அதே நேரத்தில் நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பு இதற்கு எதிராக இருந்தது. சபாநாயகர் தனபாலின் தகுதி நீக்க உத்தரவை கடுமையாக விமர்சித்து சுந்தர் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பு அளித்தார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக அமைந்த இந்த தீர்ப்பு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாறுபட்ட தீர்ப்புகளால் சர்ச்சை ஏற்பட்டதால் சுப்ரீம் கோர்ட்டு 3-வது நீதிபதியாக நீதிபதி சத்திய நாராயணாவை நியமித்தது. இந்த வழக்கு விசாரணையை தொடங்கி இருக்கும். அவர் இந்த மாதம் (ஜூலை) 23-ந்தேதியில் இருந்து 5 நாட்கள் தினமும் வழக்கு விசாரணை நடைபெறும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதன்மூலம் 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நீதிபதி சத்திய நாராயணா வழங்கப் போகும் தீர்ப்புக்காக அ.தி.மு.க.வினரும் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் மனைவி, மகளுடன் சுந்தர் வசித்து வருகிறார்.
அவரது வீட்டுக்கு மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது. பெயர் ஏதுமின்றி மொட்டை கடிதமாக உள்ள அதில் நீதிபதி சுந்தருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்திரா பானர்ஜி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் யார்? என்பதை கண்டுபிடித்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை ஏற்று கமிஷனரும் மிரட்டல் விடுத்த நபரை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி சுந்தரின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருடன் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நீதிபதி சுந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். சந்தேக நபர்கள் யாராவது நடமாடுகிறார்களா? என்பது பற்றி திவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மிரட்டல் கடிதத்தை எழுதியது யார்? என்பது தெரியவில்லை. இதன் பின்னணியில் அரசியல் தொடர்புடைய நபர்கள் தான் இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மிரட்டல் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனை வைத்து குற்றவாளியை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.
பனைக்குளம்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக்கில் உள்ள ஏ.பி.சி. திருமண மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தங்க தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கி பேசினார்.
இதில் மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், முன்னாள் அமைச்சர்கள் வது.நடராஜன், ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் முனியசாமி, சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் ஆர்.கே. ரம்லி, நகர் செயலாளர் ரஞ்சித், திருவாடானை இரவுசேரி முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், முன்னாள் நகரசபை தலைவர் கவிதா சசிகுமார், தொகுதி பொறுப்பாளர்கள் பரமக்குடி சுப்பிரமணியன், முதுகுளத்தூர் முத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் சோமாத்தூர் சுப்பிரமணி யன், மாவட்ட இணை செயலாளர் இந்திரா மேரி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்து பேசினர்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மண்டபம் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், ராமநாதபுரம் முத்தீசுவரன், போகலூர் ராஜாராம் பாண்டியன், திருப்புல்லாணி முத்துச்செல்வம், நகர் செயலாளர்கள் கீழக்கரை சுரேஷ், மண்டபம் களஞ்சியம் ராஜா உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்டத்துக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு அ.ம.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டது குறித்து பத்திரிகையில் செய்தி படித்தேன். தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து என்னுடைய உணர்வை வெளிப்படுத்தினேன். ஸ்ரீமதி என்பவர் என் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த பெண்ணை பாராட்டுகிறேன். நீதிமன்றத்தை அவமதித்ததற்காக குடிமகன் என்ற முறையில் அவர் வழக்கை தொடர்ந்து இருக்கிறார். அவரிடம் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சகநீதிபதிகள் 4 பேர் நேரடியாக குற்றம் சாட்டி பேட்டி அளித்தனர். உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது.
இந்த பேட்டியை அடிப்படையாக வைத்து அந்த 4 பேர் மீதும் இந்த பெண்மணி ஏன் வழக்கு தொடுக்கவில்லை. அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் வக்கீல் பதவி போய்விடும் என்ற பயமா, நான் சாதாரணமானவன் என்பதால் என் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறாரா, இந்த கேள்விகளை அவரிடம் கேட்க விரும்புகிறேன்.
தகுதிநீக்க வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக சத்திய நாராயணாவை நியமித்துள்ளனர். அவரை சந்தித்து தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக மனு கொடுக்க இருக்கிறேன். அதை அவர் ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan
மதுரை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயக நாட்டில் போராட்டம் என்பது அறவழியில் நடத்தப்படுவதாகும். மகாத்மா காந்திகூட அறவழியில் போராட்டம் நடத்தியவர்தான்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுகாதாரகேடு காரணமாக போராட்டம் ஏற்பட்டது. சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இவர்கள் என்ன சமூக விரோதிகளா?
தமிழக அரசு காவல் துறை மூலமாக மாநிலம் முழுவதும் அராஜகத்தை கட்டவிழ்த்துள்ளது. மத்திய அரசு, தாய் கோழிக்குஞ்சை பாதுகாப்பது போல தமிழக அரசை காப்பாற்றி வருகிறது.
எங்கள் கட்சிக்காரர்களை தீவிரவாதி போல கைது செய்யும் தமிழக காவல் துறை, எஸ்.வி.சேகரை கைது செய்ய பயப்படுகிறது.
இரண்டு மந்திரிகள் உள்பட எம்.எல்.ஏ.க்கள் சிலர் எங்களிடம் வருவதாக வரும் தகவல் காற்றில் வரும் செய்தியாகும். இதற்கு நான் பொறுப்பல்ல.
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை பொறுத்தவரை தமிழக அரசு முதலில் நில உரிமையாளர்களிடம் பேசவேண்டும். இந்த திட்டத்தால் அவர்களுக்கு பாதிப்பு இல்லையென்றால் தாராளமாக திட்டத்தை செயல்படுத்தலாம். அதற்குள் ஏன் இந்த அவசரம்?
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக அறவழியில் போராடிய நடிகர் மன்சூர்அலிகான், சமூக ஆர்வலர்கள் வளர்மதி, பியூஸ்மானுஷ் ஆகியோரை கைது செய்ததில் என்ன நியாயம் இருக்கிறது?
குட்கா விஷயத்தில் விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும். இதற்காக அந்த வழக்கை துரிதப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.
தமிழக சட்டசபையில் அம்மாவின் படத்தை முனிசிபாலிட்டியில் திறந்து வைத்தது போன்று திறந்து வைத்தனர். இது அம்மாவை இழிவுபடுத்துவது போன்றதாகும். எனவேதான் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தை பொறுத்தவரை நான் நீதிமன்றத்தை நம்புகிறேன். கமல்ஹாசன் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.
ஆர்.கே. நகர் தேர்தலில் நான் (தினகரன்) தோற்று விடுவேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொன்னார். அது நடந்துவிட்டதா என்ன?

விவசாயி மகன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மகாத்மா காந்தி உயிரோடு இருந்திருந்து அறவழியில் போராட்டம் நடத்தியிருந்தால் தமிழக அரசு அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக டி.டி.வி. தினகரன் மதுரை கீரைத்துறையில் கொலையுண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வட்ட செயலாளர் முனியசாமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். #18mlasdisqualified #dinakaran #edappadipalanisamy
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன். இவரிடம் தற்போது தினகரன் அணியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டபோது கூறியதாவது:-
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா என்னை நேரடியாக விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்ததால்தான் எம்.எல்.ஏ.வாக தேர்வானேன். நான் அ.தி.மு.க.வில்தான் இருந்து வருகிறேன். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன்.
ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. அரசை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்-அமைச்சராக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால் நாங்கள் அவருக்கு வாக்களித்து முதல்-அமைச்சராக தேர்வு செய்தோம்.
தற்போது டி.டி.வி.தினகரனுடன் நட்பு ரீதியாகதான் இருந்து வருகிறேன். மேலும் அவர்தான் என்னை அவரது அணிக்கு மாவட்ட செயலாளராக நியமித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க.வில்தான் இருப்பதாக கூறுகிறீர்கள், ஆனால், தமிழக அரசை மட்டும் குறை கூறி வருகிறீர்களே ஏன் என்று கேட்டபோது, தமிழக அரசுக்கும், எனக்கும் மாற்று கருத்துதான் உள்ளது. அதனால்தான் எங்கள் பகுதியில் உள்ள குறைகளை சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறினேன். அதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது நியமித்துள்ள சத்துணவு பணியாளர்கள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட தி.மு.க. தொகுதிக்கு சுமார் 10 கோடி அளவில் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், எனது தொகுதி முழுவதும் புறக்கணிக்கப்பட்டு அடிப்படை வசதியான குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட எந்தவித வசதியும் செய்து கொடுக்காமல் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் செயல்பட்டு வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்ற நான் வலியுறுத்தி வருகிறேன். கேள்வி கேட்பது என்னுடைய உரிமை, அதை செய்து வருகிறேன். ஆனால், அ.தி.மு.க. கட்சிக்கும், எனக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார். #dinakaran #kalaiselvanmla #admk
கோவில்பட்டி:
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தேவேந்திரர் குல வேளாளர் சங்கம் சார்பில் ஜூலை 15-ல் தஞ்சாவூரில் மாநாடு நடக்கிறது. இதுதொடர்பான பிரசாரத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கோவில்பட்டிக்கு வந்தார். அவர் சங்கரலிங்கபுரம், அரசு போக்குவரத்து கழகம் முன், புளியம்பட்டி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், அகில இந்திய தேவேந்திரர் குல வேளாளர் சங்கம் சார்பில் அடுத்த மாதம் 15-ம் தேதி தஞ்சாவூரில் மாநாடு நடக்கிறது. இதுதொடர்பாக நெல்லை, திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பிரசார சுற்றுப்பயணம் முடித்துள்ளேன். தற்போது தூத்துக்குடி, தேனி, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு செல்கிறேன். தேவேந்திரர் குல வேளாளர்களுடைய பல உட்பிரிவுகளை உள்ளடக்கி, தேவேந்திரர் குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என முன்னிறுத்தி மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.
18 சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் வழக்கில் சரியான தீர்ப்பு அல்ல. இது தவறான சட்டத்துக்கு முன் உதாரணமாகும். சட்டத்தை தவறாக பயன்படுத்தினார்கள் என்பது தான் எங்கள் கருத்து. தலைமை நீதிபதியும், நீதிபதியும் சேர்ந்து வெவ்வேறு கருத்துகளை பரிமாற்றம் செய்து, அது 3-வது பெஞ்சுக்கு போனால், மக்களை திசை திருப்புவதற்காக முடிவு செய்யா முடியாத நிலையில் சட்டம் இருக்கும் என்றால், மக்கள் எப்படி நீதிமன்றத்தை நாடுவது என்பது எங்கள் கேள்வி. நீட் என்பது இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. நீட் தேர்வுக்காக உயிரை மாய்த்து கொள்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார். #johnpandian #18mlas #chennaihighcourt






