search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "speaker dhanapal"

    சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்களது பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

    இதற்கிடையே, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோர் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்க சட்டசபை செயலகத்திடம் அ.தி.மு.க. தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.

    இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 9 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பத்விப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, வெய்ட் அண்ட் சீ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
    சென்னை:

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்ற பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- எதிர்க்கட்சியான தி.மு.க.வின் செயல்பாடு இனி சட்டசபையில் எப்படி இருக்கும்?

    பதில்:- சட்டமன்றம் கூடும்போது நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். தொலைக்காட்சியிலும் அதை ஒளிபரப்பத்தான் போகிறார்கள்.


    கேள்வி:- சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்திருக்கிறீர்கள். அதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?

    பதில்:- பொறுத்து இருந்து பாருங்கள்.

    கேள்வி:- அரசு மீது தி.மு.க.நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமா?

    பதில்:- சட்டசபையில் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அறிவித்த பிறகு அது குறித்து நாங்கள் முடிவு எடுப்போம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
    20 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்களது பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

    இதற்கிடையே, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோர் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்க சட்டசபை செயலகத்திடம் தி.மு.க. தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.



    இந்நிலையில், தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 13 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். சபாநாயகர் தனபால் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து தற்போது சட்டசபையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக, அண்ணா அறிவாலயம் சென்ற 13 எம்.எல்.ஏ.க்களும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  
    தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக சபாநாயகர் நடவடிக்கைக்கு உள்ளான தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வை முழுமையாக ஆதரிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக டி.டி.வி. தினகரன் தனியாக செயல்பட்டார். இவருக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகள் உள்பட 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. 13 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

    என்றாலும் 9 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. எனவே ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.


    சமீபத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ‘அனைவரும் தன்னலமின்றி கட்சியில் இணைந்து பணியாற்றுவோம்’ என்று அழைப்பு விடுத்து இருந்தனர்.

    அமைச்சர் ஜெயக்குமார் விடுத்த அழைப்பில், “அ.தி. மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்து பாதுகாக்கப்பட்ட இயக்கம். சசிகலா, தினகரன் குடும்பம் தவிர பிரிந்தவர்கள் அனைவரும் தாய் கழகத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வம், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் தனபால் இந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அதில், “உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு இருந்தார்.

    இதை தொடர்ந்து 3 பேரும், சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். இதையடுத்து சபாநாயகர் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக தடை விதித்துள்ளது. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறிய தினகரனின் முயற்சி வெற்றி பெறவில்லை. அவரது அ.ம.மு.க. கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.

    எனவே, சபாநாயகர் நடவடிக்கைக்கு உள்ளான தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் இனி அ.தி.மு.க.வை முழுமையாக ஆதரிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே, சபாநாயகர் தனது நடவடிக்கையை விலக்கிக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. #DMK #SpeakerDhanapal #NoConfidenceMotion
    lசென்னை:

    அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் 3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்க சபாநாயகர் தனபால் முடிவு செய்தார். கொறடா ராஜேந்திரன் அளித்துள்ள புகார் குறித்து விளக்கம் கேட்டு தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 



    இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு அளித்தார்.

    ஏற்கனவே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்தால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #DMK  #SpeakerDhanapal #NoConfidenceMotion
    தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #speakerdhanapal #dinakaransupportmlas
    சென்னை:

    தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு சபாநாயகரையும் சேர்த்து 114 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர்.

    டி.டி.வி.தினகரன் சுயேச்சை எம்.எல்.ஏ.வாக உள்ளார். 22 இடங்கள் காலியான தொகுதியாக உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேலும் 4 தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் கடந்த 1 ஆண்டாக டி.டி.வி. தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வந்தனர். நடந்து முடிந்த தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.



    அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக இவர்கள் 3 பேரும் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்துக்கு புகார்கள் சென்றன. இதனால் அரசு கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் சபாநாயகர் தனபாலை சந்தித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்தார். இதற்கு ஆதாரமாக 3 பேரும் தேர்தலின்போது தினகரன் கட்சிக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்த புகைப்படங்களையும் இணைத்திருந்தார்.

    இதன் அடிப்படையில் 3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்க சபாநாயகர் தனபால் முடிவு செய்தார். சட்ட விதிகளை ஆராய்ந்த அவர் 3 எம்.எல்.ஏ.க்களும் என்னென்ன விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிந்தார். இதையடுத்து, 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் தயாரிக்கப்பட்டது. அதில், “அ.தி.மு.க. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொறடா சமர்பித்துள்ளார். இதுகுறித்து நீங்கள் தரும் விளக்கம் என்ன? இக்கடிதம் கண்ட ஒரு வாரத்துக்குள் இதற்கு நீங்கள் விளக்கம் தரவேண்டும். இல்லை என்றால் கட்சி தாவல் விதிப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று கூறப்பட்டு இருந்தது. 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் இந்த கடிதத்தை ரிஜிஸ்டர் தபாலில் அனுப்ப சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் அளித்துள்ள புகார் குறித்து விளக்கம் கேட்டு தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #speakerdhanapal #dinakaransupportmlas
    தமிழக சட்டசபை இன்று தொடங்கும் முன் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #TNAssembly #Rajendran #Dhanapal
    சென்னை:

    பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கிறார். இதையடுத்து இன்று சட்டசபை தொடங்கும் முன் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


    தற்போது அ.தி.மு.க.வின் பலம் 115-ல் இருந்து 114 ஆக குறைந்தது. என்றாலும் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மெஜாரிட்டி பலம் உள்ளது. இதுதொடர்பாகவே இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    கோர்ட்டு தீர்ப்பு பற்றி சட்டசபை செயலாளரிடம் கேட்டபோது, எங்களுக்கு இன்னும் தீர்ப்பு நகல் வரவில்லை. தீர்ப்பு நகல் கிடைத்ததும் எம்.எல்.ஏ. பதவி காலியானது பற்றி முறைப்படி அறிவிக்கப்படும் என்றார். #TNAssembly #Rajendran #Dhanapal

    தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு இணையாக கவர்னரின் செயலாளர் அமர்வதா? என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வியெழுப்பியுள்ளார். #TNAssembly #DuraiMurugan #Dhanapal
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து ஒரு பிரச்சனையை எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த சட்டமன்றம் கண்ணியம் மிக்க சபையாகும். இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் நுழைந்து விட முடியாது.

    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவும் ஊழியர்கள் கூட தலையில் தொப்பி அணிந்துதான் உள்ளே வருவார்கள். சிறப்பு நேரமாக கவர்னர் வந்து செல்வார். சபாநாயகரால் அனுமதிக்கப்படும் விருந்தாளிகளும் வந்து அமரலாம். இவர்களை மீறி யாரும் உள்ளே வரமுடியாது.

    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமல்ல தலைமை செயலாளர் கூட உள்ளே வந்து இருக்கையில் அமர முடியாது. அதையும் மீறி யார் வந்தாலும் அவர்களை கண்டிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. ஏன் சிறைக்கு அனுப்பும் அதிகாரம் கூட உங்களுக்கு (சபாநாயகருக்கு) உண்டு. அந்த அளவுக்கு தாங்கள் சர்வ வல்லமை படைத்தவர். எந்த கோர்ட்டும் உங்களை அழைக்க முடியாது. கட்டளையிட முடியாது.

    இப்படிப்பட்ட நிலையில் கவர்னர் உரை நிகழ்த்திய அன்று அவருடன் வந்த செயலாளர் தங்கள் சபாநாயகர் இருக்கை அருகே இணையாக நாற்காலியில் அமர்ந்து இருந்தார். பொதுவாக கவர்னர் வரும்போது அவருடன் வரும் செயலாளர் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று தலைமை செயலாளர் அருகே அமர்வதுதான் வழக்கம்.

    ஆனால் இப்போது சட்டமன்றத்தின் உள்ளேயே உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். எனவே இந்த மன்றத்தின் கவுரவத்தை காப்பாற்றும் வகையில் நான் இதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.

    அந்த செயலாளர் எனக்கும் நண்பர் தான். ஆனாலும், இனி எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை கூறுவதாக இதை சொல்லவில்லை.


    இவ்வாறு கூறிவிட்டு அதிகாரி சட்டமன்றத்தில் அமர்ந்திருந்த போட்டோவையும் காண்பித்தார். இதற்கு சபாநாயகர் கூறுகையில், எனது தனி அதிகாரம் பற்றி துரைமுருகன் கூறினார். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கவர்னர், சட்டசபைக்கு வரும் போது அவருடன் உதவியாளர்கள் வருவது மரபாக இருந்துள்ளது.

    கவர்னரின் உதவியாளர்கள் அமர்வதை இனிவரும் காலங்களில் சரியாக எப்படி கையாள வேண்டுமோ? அதை இனி கையாளுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #DuraiMurugan #Dhanapal
    சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து பேசினர். #TNAssembly #Dhanapal #Congress
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து பேசினர்.

    சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.எல்.ஏ.க்கள் வசந்த குமார், விஜயதாரணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகரை அவரது அறையில் இன்று சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்தனர்.

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் பற்றி முழுமையாக விவாதிப்பதற்கு வசதியாகவும், மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை முறைப்படி கேட்டுப் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையிலும் தமிழக சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இது தொடர்பான மனு ஒன்றையும் அவர்கள் சபாநாயகரிடம் அளித்தனர்.


    மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகா அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் வகையில் மத்திய அரசை வலியுறுத்தவதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றியும் சட்டசபை கூட்டத்தில் விவாதிக்கலாம் என்றும் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். #TNAssembly #Dhanapal #Congress
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சபாநாயகர் தனபாலுடன் அவரது அறையில் ஆலோசனை நடத்தினார். #TNCM #Edappadipalaniswami #Dhanapal

    சென்னை, நவ. 1-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 12.30 மணி அளவில் சபாநாயகர் தனபாலை அவரது அறைக்கு சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர்களுக்கு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அது குறித்து இருவரும் ஆலோசித் ததாக கூறப்படுகிறது.

    சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும் எனக்கோரி சட்டப்பேரவை செயலாளருக்கு கருணாஸ் எம்எல்ஏ கடிதம் எழுதி உள்ளார். #KarunasMLA #SpeakerDhanapal

    சென்னை:

    சாதி மோதலைத்தூண்டும் வகையிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகளை கடுமையாக தாக்கிப் பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. கைதாகி ஜாமீனில் விடுதலை ஆனார்.

    கருணாஸ் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றவர் என்பதால் அவர் மீது கட்சிதாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார். இதற்காக அரசு கொறடா ராஜேந்திரன் சபா நாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதை ஏற்று கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளார்.

    இந்தநிலையில் சபா நாயகர் தனபாலை நீக்க கோரி கருணாஸ் சார்பில் சட்டசபை செயலாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சட்ட சபை விதிகளை மீறி சபா நாயகர் செயல்படுகிறார்.

    ‘‘நான் தமிழக சட்ட சபையில் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. வாக இருக்கிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட பிரிவு 68 மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்ட 179 (சி) விதியின் கீழ் சபாநாயகர் தனபாலை பதவிநீக்கம் செய்ய வேண்டும்.


    மேற்கண்ட சட்ட பிரிவுகளின்படி அவருக்கு 14 நாட்களில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

    சட்டசபையை உடனே கூட்டி சபா-நாயகரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    கடிதத்தின் நகல் சபாநாயகருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. கருணாஸ் சார்பில் அவரது வக்கீல்கள் சட்டசபை செயலாளரிடம் மனுவை அளித்துள்ளனர்.#KarunasMLA #SpeakerDhanapal

    எம்.எல்.ஏ. கருணாஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சபாநாயகர் தனபாலுடன், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். #Karunas
    சென்னை:

    சமீபத்தில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக எம்.எல்.ஏ. கருணாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

    கருணாசின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், அவர் எம்.எல்.ஏ.வாக நீடிக்க வேண்டுமா? என பலரும் கேள்வி எழுப்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. பதவியில் உள்ள கருணாஸ் முதல்வரை அவதூறாக பேசியது குறித்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபாலுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    சபாநாயகர் தனபாலுடன் தற்போது சட்டத்துறை மந்திரி சி.வி.சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஆலோசனை செய்துள்ளனர்.

    இதுகுறித்து கருணாசுக்கு விரைவில் பதிலளிக்கப்படும் எனவும், அதன் பிறகு அவர் மீதான நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்.எல்.ஏ. கருணாசின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அதே சமயம், கூவத்தூர் ரகசியங்களை தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க தயார் என கருணாஸ் கூறிவரும் நிலையில், ஒருவேளை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் விரைவில் கூவத்தூர் ரகசியம் குறித்து அவர் வெளியிடும் சூழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. #Karunas
    ×