என் மலர்
நீங்கள் தேடியது "jewelry snatch"
மதுரை:
மதுரை அனுப்பானடி வாசுகி தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி லட்சுமி (28). இவர் கீழ வெளி வீதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே நடந்து சென்றார்.
அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் லட்சுமி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தார்.
அதிர்ச்சியடைந்த லட்சுமி நகையை கெட்டியாக பிடித்துக் கொண்டார். ஆனாலும் திருடன் பெண்ணை தாக்கி நகையை பறித்துக்கொண்டு தப்பினான்.
அந்த வழியாக ரோந்து வந்த கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் திருடனை விரட்டினர்.
போலீசாரிடமிருந்து தப்பிக்க திருடன் அங்கு சுவர் ஏறி குதித்தார். இதில் அவர் காயமடைந்தார்.
போலீசார் திருடனை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த முனியாண்டி மகன் பரத் என்பது தெரியவந்தது.
வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்த பரத் செலவுக்காக நகையை திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அண்ணா காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது57). சம்பவத்தன்று இவர் மளிகை கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடைக்கு வந்தனர். அவர்கள் பொருட்கள் கேட்பது போல் கேட்டனர். இதனை நம்பிய தாமரைச்செல்வி அவர்கள் கேட்கும் பொருட்களை எடுத்துவைத்து கொண்டிருந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென அந்த இரண்டு பேரும் சேர்ந்து தாமரைச்செல்வியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை சட்டென்று பறித்தனர். அதிர்ச்சி அடைந்த தாமரைச்செல்வி திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில்:
கொல்லங்கோடு அருகே உள்ள நெல்லிமூட்டு பாலவிளை பகுதியை சேர்ந்தவர் மரிய எப்ரோஸ் (வயது 70). இவர் தனது மகள் ஜொலினின் மகள்கனான 2 மகள்கள் பிறிசா டிரினிட், பிறிசா ஆன்டிரிட் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இவர் நேற்று தனது 2 பேத்திகளுடன் காட்டுக்கடை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு சென்று விட்டு சாலையோரமாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். வீட்டின் அருகே சென்ற பொது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் 2 பேர் இவரிடம் கொல்லங்கோடு செல்ல வழி கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பேத்தி பிறிசா ஆன்டிரிட் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மரிய எப்ரோஸ் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
புது விளாங்குடி ராம மூர்த்தி நகர், சர்ச் தெருவை சேர்ந்தவர் உஷா (வயது 35). இவரது கணவர் சதீஷ் குமார், சமையல் எண்ணை வியாபாரி.
உஷா குடும்பத்துடன் இரவில் வீட்டில் படுத்து தூங்கினார். அவர் முன் கதவை சரியாக தாழிடவில்லை என்று தெரிகிறது. நள்ளிரவில் மர்ம நபர் கதவைத்திறந்து வீட்டுக்குள் புகுந்தான். உஷா படுக்கை அறையில் அசந்து தூங்கி கொண்டு இருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையன், அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை நைசாக கழற்ற முயன்றான்.
அப்போது உஷா திடுக்கிட்டுக் கண் விழித்தார். வீட்டுக்குள் திருடன் நிற்பதை பார்த்து ‘திருடன், திருடன்’ என்று சத்தம் போட்டார்.
இருப்பினும் கொள்ளையன் உஷா கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டான்.
இது குறித்து உஷா கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர்:
தஞ்சை திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் தனபாலன் (வயது 63). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி சாந்தி (53). இவர்கள் 2 பேரும் கீழவாசலில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு தனபாலன் தனது மனைவி சாந்தியுடன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் முகமூடி அணிந்து கொண்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்தனர். தஞ்சை-வல்லம் சாலையில் ஒரு தனியார் கம்பெனி அருகே வந்தபோது திடீரென மர்ம நபர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து சாந்தியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை சட்டென்று இழுத்து பறித்தனர்.
பின்னர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். மர்ம நபர்கள் செயினை இழுத்ததில் சாந்தி நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது கணவர் அதிர்ச்சியடைந்து உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சாந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுப்பற்றி தனபாலன் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்று சாந்தியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்த காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து கொள்ளையர்கள் யார்? அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையில் நேற்று முன்தினம் இரவு ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு தாயுடன் ஸ்கூட்டியில் சென்ற சங்கவி தாரணி என்ற இளம்பெண்ணிடம் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் செயினை பறித்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் அதுபோல் செயின் பறிப்பு நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பெண்களை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபடுகின்றனர். எனவே தஞ்சையில் முக்கிய இடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை:
கோவை வடவள்ளி நவவூர் பிரிவை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர