search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெல்மெட்"

    • ஐ.ஐ.எம். மாணவர்கள் உருவாக்கி கொடுத்துள்ள வித்தியாசமான ஹெல்மெட் பேட்டரியில் இயங்க கூடியது.
    • பொதுவாக நாம் அணியக்கூடிய ஹெல்மெட்டின் உள்ளே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமைப்பில் சிறிய வகையிலான மின்விசிறி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

    நாட்டின் பல நகரங்களிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெயிலுக்கு மத்தியிலும் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசார் வெயிலால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

    இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி.ஹெல்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை அணிவதன் மூலம் அவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். இந்த ஹெல்மெட்டை அணிந்து போக்குவரத்து போலீசார் பணியாற்றி வரும் காட்சிகள் வலைதளங்களில் பரவி வருகிறது. அங்குள்ள ஐ.ஐ.எம். மாணவர்கள் உருவாக்கி கொடுத்துள்ள இந்த வித்தியாசமான ஹெல்மெட் பேட்டரியில் இயங்க கூடியது.

    பொதுவாக நாம் அணியக்கூடிய ஹெல்மெட்டின் உள்ளே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமைப்பில் சிறிய வகையிலான மின்விசிறி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேன் பேட்டரி மூலம் இயங்கும். ஹெல்மெட்டின் உள்ளே பேன் இருக்கும் நிலையில் அதற்கான பேட்டரியை தனியாக போலீசார் இடுப்பில் அணிந்து கொள்வார்கள். பேட்டரிக்கும், ஹெல்மெட்டில் உள்ள பேனும் வயர் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஹெல்மெட்டின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் பயன்பாட்டில் இருக்கும்.

    முதற்கட்டமாக 450 போக்குவரத்து போலீசாருக்கு இந்த ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.


    • வீடியோவை பகிர்ந்த மேற்கு வங்க போலீசார், வெற்றி தோல்விகளை யார் கணக்கு வைப்பது? அரசரின் கிரீடம் அவரது தலையில் அப்படியே உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
    • ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை விளக்கும் வகையில் உள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.

    மேற்கு வங்க போலீசார் தனது சமூக வலைதள பக்கங்களில் ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    தற்போது ஐ.பி.எல். போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்க போலீசார் ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விராட் கோலி ஹெல்மெட் அணிந்து கொண்டு சிக்சர் விளாசும் ஒரு காட்சியுடன் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    அதில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிச்செல் ஸ்டார்க் பந்தில் விராட் கோலி சிக்சர் அடிக்கும் காட்சி உள்ளது. அப்போது கோலி சிக்சர் அடித்த பந்து மைதானத்தில் கூட்டத்தினரின் மத்தியில் விழுகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த மேற்கு வங்க போலீசார், வெற்றி தோல்விகளை யார் கணக்கு வைப்பது? அரசரின் கிரீடம் அவரது தலையில் அப்படியே உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

    அதாவது ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை விளக்கும் வகையில் உள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.

    • டி20 தொடரை கைப்பற்றிய போது இலங்கை அணி டைம் அவுட் Celebration செய்தனர்.
    • தற்போது ஒருநாள் தொடரை வங்காளதேசம் கைப்பற்றி ஹெல்மெட் Celebration கொடுத்துள்ளனர்.

    சட்டோகிராம்:

    இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்நிலையில் ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து வங்காளதேசம் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அனாமுல் ஹக் -தன்சித் ஹசன் ஜோடி 50 ரன்களை எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. அனாமுல் 12 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் 1, டவ்ஹித் ஹ்ரிடோய் 22, மஹ்முதுல்லாஹ் 1 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்சித் ஹசன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹீம்- ரிஷாத் ஹொசைன் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இதனால் வங்காளதேசம் 40.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்காளதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிய பிறகு கோப்பையுடன் டைம் அவுட் Celebration கொடுத்தனர்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வங்காளதேசம் அணி ஹெல்மெட் Celebration கொடுத்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • விரைவில் வெளியிடப்படும். இப்போது விஜய் சாருடன் G.O.A.T படத்தில் நடிக்கிறேன்.
    • கட்சி தொடங்கியுள்ள, விஜய்க்கு என் வாழ்த்துகள். அவரை என் சகோதரர் என்றே சொல்லலாம்.

    "பெரும் பொருட்செலவில் 'அந்தகன்' படம் பண்ணியிருக்கோம். கூடிய விரைவில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும்" என்று நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்ட நடிகர் பிரசாந்த் பொதுமக்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கினார்.

    அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "இன்னைக்கு ஜாலியாக நெல்லை பார்க்க வந்தேன், வந்த இடத்தில் வேலை செய்துவிட்டு மீண்டும் கிளம்புகிறேன். ஹெல்மெட் ஒரு லைஃப் ஜாக்கெட் என்கிறார்கள். இது லைஃப் ஜாக்கெட் மட்டுமல்ல, குடும்ப கோட். சாலை விபத்துகளால் பலர் உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் இல்லாததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது.

    அதனால்தான் இந்த ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எனது ஆதரவாளர்கள் சார்பாக நிறைய வேலைகளைச் செய்துள்ளோம். விரைவில் வெளியிடப்படும். இப்போது விஜய் சாருடன் G.O.A.T படத்தில் நடிக்கிறேன். இரண்டு மூன்று புதிய அழைப்புகள் வந்தன. விரைவில், நானும் இந்த பகுதியில் ஏதாவது செய்வேன். G.O.A.T படம் சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது. தியேட்டர் வந்து ஜாலியாக எஞ்சாய் பண்ணுங்க எல்லோரும் என்று கூறினார்.

    கட்சி தொடங்கியுள்ள, விஜய்க்கு என் வாழ்த்துகள். அவரை என் சகோதரர் என்றே சொல்லலாம். மக்களுக்கு சேவை செய்யும் பணி என்பதற்கு ஹார்ட் வொர்க் உட்பட பல கமிட்மெண்ட் இருக்க வேண்டும். விஜய் சாரிடம் அது அதிகம் உள்ளது. எனக்கெல்லாம் அது ரொம்ப கஷ்டம், அதற்கு தைரியம் வேண்டும்.நான் நடிகனா நடித்துக் கொண்டிருக்கிறேன். நடிகன் மட்டுமே இப்போதும். என்னால் மக்களுக்கு என் மூலமாக என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன். மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு நான் அவர்களுக்கு கைமாறாக இதுபோன்ற பணிகளை செய்கிறேன். அரசியல் நோக்கம் எதுவுல்லை ஏன்னு தெரிவித்துள்ளார்.

    • வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
    • கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன். வார்டு உறுப்பினர் வானதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்போரூர்

    கேளம்பாக்கம் சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் கேளம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிகிருஷ்ணன். வெங்கடேசன், கங்காதரன், சுற்றுச்சூழல் பொது மேலாளர் லாரன்ஸ். கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன். வார்டு உறுப்பினர் வானதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கும், சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டியவர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி பாராட்டினர்.

    • குற்றாலம் போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்து வாலிபரை தேடிவந்தனர்.
    • சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசியை அடுத்த குற்றாலம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் அபாயகரமான முறையில் வாலிபர் ஒருவர் சென்று வந்துள்ளார். மேலும் அந்த நபர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்தபடி சுற்றித்திரிந்து உள்ளார்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், மேற்கொண்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அந்த வாலிபரை போலீசார் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் குற்றாலம் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்து அந்த நபரை தேடி வந்த நிலையில், தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுஜித் (வயது 23) என தெரியவந்தது.

    இதுகுறித்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • மோட்டார் சைக்கிள்களில் வரும் பலர் ஹெல்மெட் அணியாமல் உள்ளனர்.
    • வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கபட்டது

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிக அளவில் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களில் பொருட்கள் வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வரும் பலர் ஹெல்மெட் அணியாமல் சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் செல்கின்றனர். இதனால் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மயிலாடுதுறை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், முருகன் மற்றும் போலீசார் கிட்டப்பா அங்காடி பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர்.

    அப்போது விளம்பர வாகனத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களையும் போக்குவரத்து போலீசார் வழங்கி கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரையாற்றினார்.
    • பேரணியானது திருமருகலில் தொடங்கப்பட்டு திட்டச்சேரியில் முடிவடைந்தது.

    நாகப்பட்டினம்:

    பெருகிவரும் வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மோட்டார் சைக்கிளிலில் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

    திட்டச்சேரி(ப.கொந்தகை) கடை வீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ் சிங் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர் திட்டச்சேரி (ப.கொந்தகை) கடைவீதியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி திருமருகல் கடைவீதியில் முடிக்கப்பட்டு பின்பு பொது மக்கள் மத்தியில்தலை க்கவசம் உயிர்க்கவசம் என்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் விழிப்புணர்வு உரையாற்றினார்.

    மீண்டும் பேரணியானது திருமருகல் கடைவீதியில் இருந்து தொடங்கப்பட்டு திட்டச்சேரி காவல் நிலை யத்தில் முடிக்கப்பட்டது.

    • சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாததின் விளைவாக விபத்துகள் ஏற்படுகிறது.
    • நூதன முறையில் வாகன ஓட்டிகளுக்கு சிக்கன் மற்றும் வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மாவட்ட காவ ல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை மாநகர போக்குவரத்து பிரிவு சார்பில் நூதன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதில் தஞ்சை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எம் .ஜி. ரவிச்சந்திரன் தலைமையி லான போக்குவரத்து போலீசார் மற்றும் ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்கள் ஒவ்வொரு வருக்கும் தலா 1 கிலோ சிக்கன் பிரியாணி , முட்டை, பிரெட் அல்வா உள்ளிட்ட வைகளை சுடச்சுட வழங்கி அசத்தினர்.

    இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் எம். ஜி. ரவிச்சந்திரன் கூறுகையில் , சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாததின் விளைவாக விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது .

    இதை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடம் சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் .

    அதன்படி உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து வந்த 50 இருசக்கர வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சுவையான சிக்கன் பிரியாணி மற்றும் வெஜிடபிள் பிரியாணி வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி னோம்.

    இது போன்ற நூதன சாலை போக்குவரத்து நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார் .

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்ததற்கு பரிசாக தஞ்சை போக்குவரத்து போலீசார் விலையில்லா பிரியாணி வழங்கியதை பார்த்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஆச்சர்யமடைந்தனர் .

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி , மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் .

    • பள்ளி செல்லும் நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது.
    • பிடாரி வடக்கு வீதியில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி நகரில் கொள்ளிட முக்கூட்டு, பழைய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி ,கடைவீதி கரிக்குளம் முக்கூட்டு, காமராஜர் வீதி , உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி நகரில் போக்குவரத்துக்கு இடையூராக நின்ற வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தக்கூடாது என அறிவுரை வழங்கினர். மேலும் பள்ளி செல்லும் நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது. இதே போல் மாலையில் 4 மணி முதல் 6 மணி வரை கனரக வாகனங்கள் வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடைவீதியில் ஒரு வழி பாதையாக இருப்பதை முழுமையாக வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வலியுறுத்த ப்பட்டுள்ளது. இதுபோல் பிடாரி வடக்கு வீதியில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • பயனிப்பவர் தலைகவசம் அணிவது 9.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
    • போக்குவரத்து காவல், கூடுதல் கமிஷனர்சுதாகர், இணை கமிஷனர் மயில்வாகனன், துணை கமிஷனர் சமய் சிங் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    "உங்கள் பாதுகாப்பே எங்கள் முக்கியத்துவம்" என்ற குறிக்கோளுடன், சென்னை போக்குவரத்து போலீசார் செயல்பட்டு வருகிறார்கள். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து விதிமீறல்களில், ஹெல்மெட் அணிவதை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது, ஏனெனில் இது உயிரைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டை விட, இருச்சக்கர வாகன ஓட்டுனர்கள் தலைகவசம் அணிவது 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது மற்றும் உடன் பயனிப்பவர் தலைகவசம் அணிவது 9.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    இதன் ஒரு பகுதியாக, "நம்ம ஹெல்மெட்" விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை போக்குவரத்து போலீசாரால் கடந்த 19-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக, ' சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று காலை, அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பில் ''நம்ம ஹெல்மெட்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் 150 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், உடன் பயணித்தவர்களுக்கு ஹெல்மெட் வழங்கினார்.

    போக்குவரத்து காவல், கூடுதல் கமிஷனர்சுதாகர், இணை கமிஷனர் மயில்வாகனன், துணை கமிஷனர் சமய் சிங் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சாலை விபத்துக்கள் பெரும்பாலும் தலை கவசம் அணியாமலும், அதிக வேகம்
    • 3 நபர்கள் இரு சக்கர வாகனத்தில் பயணித்ததாக ரூ.31 லட்சத்து 21 ஆயிரம் அபராதம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்தாவது:-

    கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விபத்து நடை பெற்ற பகுதிகளில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலை விபத்துக்கள் பெரும்பாலும் தலை கவசம் அணியாமலும், அதிக வேகம் மற்றும் விதிமீறி இயக்கப்பட்டு வருவதாலும், சில நேரங்களில் மனிதர்களின் கவனமின்மையாலும் சாலை யினை கடந்து போவதாலும் ஏற்பட்டுள்ளது ஆய்வு கூட் டத்தின் மூலம் கண்ட றியப்பட்டுள்ளது. 18 வய திற்குட்பட்டவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கு வதை பெற்றோர் தவிர்த்திட வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செ ல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டு ம். கடந்த மாதம் ஏற்பட்ட 2 விபத்துகள் 17 வயதிற்குட்பட்ட உரிமம் இல்லாத வாகனம் ஒட்டியதால் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் (ஜூன்) ஹெல்மெட் அணியாமலும், 3 நபர்கள் இரு சக்கர வாகனத்தில் பயணித்த தற்காகவும் அபராதமாக ரூ.31 லட்சத்து 21 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை அந்தந்த அலுவலக பணி காவலர்கள் உறுதி செய்திட வேண்டும். சாலையோரங்களில் மின் விளக்கு இல்லாத இடங்களில் மின்விளக்குகளை பொருத்திடுமாறு அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி இயக்குநர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    தொடர் விபத்து நடக்கும் பகுதிகளை வட்டார போக்குவரத்து அலுவலர் அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர், போக்கு வரத்து இன்ஸ்பெக்டர், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கொண்ட குழுவினரால் ஆய்வு செய்து விபத்தினை தடுப்பதற்கான மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை துரிதமாக செயல்படுத்திட அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பள்ளிக்கூ டங்களிலும் ஏற்படுத்தப்பட்ட சாலை பாதுகாப்பு குழுக்க ளை தொடர்ந்து செயல் படுத்திடவும் மாதந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலை விதிகளை பின்பற்றியும், மிதமான வேகத்துடனும், கவனமாகவும் விபத்தின்றி இயக்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் பத்மனாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பையா, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் ஜெரால்டு ஆன்றனி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×