என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    நாளை முதல் அமல்- புதுவையில் ஹெல்மெட் கட்டாயம் சாத்தியமா?
    X

    நாளை முதல் அமல்- புதுவையில் ஹெல்மெட் கட்டாயம் சாத்தியமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பலமுறை ஹெல்மெட் அணிவது கட்டாயம், இல்லாவிட்டால் அபராதம் என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
    • மக்களின் எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

    புதுச்சேரி:

    விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க இருசக்கர வாகனங்களை ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

    சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நகர பகுதியில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கினாலும், கிராமப்பகுதியில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க முடியவில்லை.

    ஹெல்மெட் கட்டாயத்தை அமலுக்கு கொண்டுவந்தாலும், பல மாநிலங்களில் அதை தீவிரமாக கண்காணிப்பதில்லை. இந்தநிலையில் புதுவையில் கடந்த சில ஆண்டாக ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    பலமுறை ஹெல்மெட் அணிவது கட்டாயம், இல்லாவிட்டால் அபராதம் என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. ஆனால் மக்களின் எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

    இப்போது மீண்டும் நாளை முதல் (செவ்வாய்க்கிழமை) ஹெல்மெட் அணிவது கட்டாயம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல முறை அறிவிப்புகள் வெளியிட்டாலும், புதுவையில் ஹெல்மெட் கட்டாயம் சாத்தியமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. புதுவை நகரபகுதி சிறிய பகுதி. இங்கு காலையிலும், மாலையிலும் அரசு பணிக்கு செல்வோர், பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச்செல்லும் பெற்றோர் என போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது.

    இதுமட்டுமின்றி விடுமுறை நாட்கள், பண்டிகை காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகையால் நகரம் முழுவதும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. பல நேரங்களில் நகர பகுதியில் அதிகபட்சமாக 40 கி.மீ. வேகத்தில் வாகனங்களை இயக்குவதே கடினமான செயலாக உள்ளது.

    இது மட்டுமின்றி சாலை ஆக்கிரமிப்புகள், குண்டும், குழியுமான சாலைகள் என வாகனங்களை இயக்க பல சிரமங்களும் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கடும் எதிர்ப்புகள் கிளம்புகிறது. நாளை விடுதலை நாள் என்பதால் அரசு விடுமுறை. இதனால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும்.

    நாளை மறுநாள் கல்லறை திருநாள் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை. 3-ந்தேதி முதல் வழக்கமான போக்குவரத்து நகர் முழுவதும் இருக்கும். அரசு பணி, பள்ளிக்கு செல்வோரை மறித்து ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதிக்க நிறுத்துவது பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

    பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், மோதலை ஏற்படுத்தும். ஏற்கனவே அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு சுற்றறிக்கை அனுப்பியும் பயனில்லை. இதனால் இந்த முறையும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு எத்தனை நாள் நீடிக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Next Story
    ×