என் மலர்

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    கொல்லங்கோடு அருகே தாத்தாவுடன் நடந்து சென்ற பேத்தியிடம் நகை பறிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொல்லங்கோடு அருகே தாத்தாவுடன் நடந்து சென்ற பேத்தியிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு அருகே உள்ள நெல்லிமூட்டு பாலவிளை பகுதியை சேர்ந்தவர் மரிய எப்ரோஸ் (வயது 70). இவர் தனது மகள் ஜொலினின் மகள்கனான 2 மகள்கள் பிறிசா டிரினிட், பிறிசா ஆன்டிரிட் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    இவர் நேற்று தனது 2 பேத்திகளுடன் காட்டுக்கடை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு சென்று விட்டு சாலையோரமாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். வீட்டின் அருகே சென்ற பொது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் 2 பேர் இவரிடம் கொல்லங்கோடு செல்ல வழி கேட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பேத்தி பிறிசா ஆன்டிரிட் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து மரிய எப்ரோஸ் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×