தி.மு.க கொடி... மு.க.ஸ்டாலின் படம்... ஓபிஎஸ் கார்..- திகைத்துப் போன தொண்டர்கள்..!

ஓ.பி.எஸ் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.ஐயப்பன் எம்.எல்.ஏ.வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தி.மு.க கொடி... மு.க.ஸ்டாலின் படம்... ஓபிஎஸ் கார்..- திகைத்துப் போன தொண்டர்கள்..!
Published on

சென்னை அண்ணா அறிவாலயம் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்தரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதை தொடர்ந்து அவர் தலைமை செயலகம் சென்று சட்டசபை செயலாளரிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார். இவருடன் ஐயப்பன் எம்.எல்.ஏ.வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த நிலையில், அவரது காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படமும், காரின் முன்பகுதியில் திமுக கொடியும் பொருத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com