search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanitation problem"

    • உடுமலை- பொள்ளாச்சி சாலையை ஒட்டிய பகுதியில் தங்கம்மாள் ஓடை உள்ளது.
    • 2 புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை நகரின் நுழைவுப்பகுதியில் உடுமலை- பொள்ளாச்சி சாலையை ஒட்டிய பகுதியில் தங்கம்மாள் ஓடை உள்ளது. இதில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற உபரிநீர் செல்கிறது. இந்த ஓடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரபட்டு அதன் 2 புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தூர் வாரும்போது எடுக்கப்பட்ட மண்ணை முழுமையாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முன் வர வில்லை. இதனால் அவை சரிந்து மீண்டும் ஓடையை ஆக்கிரமித்துக் கொண்டது. இதன் காரணமாக ஓடை தூர்வாரப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி உள்ளது. அத்துடன் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி வருகிறது. தூர்வார வேண்டும் இதனால் ஓடை முழுவதும் செடிகள், புற்கள் முளைத்து புதர் மண்டி உள்ளது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. அவை அருகில் வசித்து வருகின்ற பொதுமக்களை தாக்கியும் வருகிறது. ஏற்கனவே சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வரும் சூழலில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அதில் தேங்கியுள்ள தண்ணீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    இது குறித்து அதிகாரியிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தங்கம்மாள் ஓடையை முழுமையாக தூர்வாரி அதன் மண்ணை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×