

மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன்.
இருசக்கர வாகனம் மெக்கானிக்கான இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா என்று மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இன்று காலை செங்கோட்டையன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் போலீசார் செங்கோட்டையனின் உடலை மீட்டு, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செங்கோட்டையன் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.