search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "products"

    • சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • உற்பத்தி செய்த பொருட்களை அரசு கூட்டுறவு விற்பனை பண்டகசாலை மூலம் விநியோகிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தாலுக்கா வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆத்மா திட்ட விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் மற்றும் தொழில்நுட்ப குழு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் ஆத்மா திட்ட வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் இளையபெருமாள் கலந்துகொண்டு இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும்.

    அதற்கான சந்தை வாய்ப்புகளை எளிமைப் படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர் வடவீரபா ண்டியன் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை இயற்கை சாகுபடியிலும் பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறவும் உற்பத்தி செய்த பொருட்களை அரசு கூட்டுறவு விற்பனை பண்டகசாலை மூலம் விநியோகிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய வேளாண்மை உதவி இயக்குனர் புதிய தொழில்நுட்பங்களையும் வேளாண்மை துறை சார்ந்த மானியங்களையும் விவசாயிகள் இடத்திலே கொண்டு சேர்ப்பதற்கு சுணக்கம் இல்லாமல் களப்பணியாற்றுவதற்கு அலுவலர்களுக்கு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    பின்னர் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும் மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் ஆலோசனை வழங்குவதற்கு வேளாண்மை துறை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    முதலில் ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகமணி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினர்.

    • புதிதாக சேரும் மாணவர்களின் குடும்பங்களுக்கான வீட்டு வரியை அறக்கட்டளை நிர்வாகமே செலுத்தும்.
    • விழாவில் மாணவ- மாணவிகளின் யோகா, நடன நிகழ்ச்சிகள் நடந்தது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு படிக்கும் மாணவ- மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர் ஒத்துழைக்க வேண்டியும் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் விளத்தூர் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்களை கவுரவித்து நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது.

    பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவிகளில் ஒருவரை குடவோலை முறைப்படி தேர்ந்தெடுத்து அவருக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. இந்த நாணயத்தை 2-ம் வகுப்பு படிக்கும் ஜெயஸ்ரீ என்ற மாணவி தட்டிச்சென்றார்.

    மேலும், வருகிற (2024-25) கல்வியாண்டில் விளத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களின் குடும்பங்களுக்கான வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி கட்டணங்களை ஜோதி அறக்கட்டளை நிர்வாகமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்திவிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்வில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன்,

    விளத்தூர் நடுநிலைப்பள்ளி முதல்வர் தையல் நாயகி தலைமையிலான பள்ளி ஆசிரியர்கள், விளத்தூர் ஊராட்சி தலைவர் ஜனனி, களத்தூர் ஊராட்சி தலைவர் பிரபு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் மாணவ- மாணவிகளின் யோகா, நடன நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • கடைக்கு பிளாஸ்டிக் பைப் வாங்குவது போல் ஒரு வாலிபர் வந்துள்ளார்.
    • கல்லாவில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி சென்றார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (61). இவர் சிதம்பரம் - சீர்காழி பிரதான சாலையில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இன்று இவர் கடைக்கு பிளாஸ்டிக் பைப் வாங்குவது போல் ஒரு டிப்டாப் வாலிபர் வந்துள்ளார் பொருளின் விலையை கேட்டு கடையில் அமர்ந்து உள்ளார்.

    அப்போது சேகர் வியாபாரம் வியா பாரம் செய்து கொண்டி ருந்தார். விற்பனை செய்த ரூ 20 ஆயிரத்து கல்லாவில் வைத்துவிட்டு, சிமெண்டு மூட்டை வாகனத்தில் ஏற்றுவதை சென்று கண்கா ணித்து கொண்டிருந்தார்.

    அப்போது பொருள் வாங்குவது போல் கடையில் அமர்ந்திருந்த டிப்டாப் வாலிபர் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூபாய் 20 ஆயிரத்தை திருடிக் கொண்டு தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

    சேகர் சிமெண்ட் மூட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு கடைக்கு வந்தபோது டிப் டாப் வாலிபரை காணவில்லை.

    உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டி திறந்து கிடந்தது அதிலிருந்து பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூம்புகார் விற்பனை நிலையத்தில் உள்ள பொருட்களை மேயர் பார்வையிட்டார்.
    • ரூ.75 முதல் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் இடம் பெற்றுள்ளன.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்களின் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. அதன்படி தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி, விற்பனையை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார் .

    தொடர்ந்து அவர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் உள்ள பொருட்களை பார்வையிட்டார். கலைத்தட்டுக்களில் நுணுக்கமான முறையில் கருணாநிதி உருவம் பதிக்கப்பட்டதை பார்வையிட்டார். இந்த கண்காட்சி மற்றும் விற்பனையில் கலைத்தட்டுக்கள், சுவாமி மலையில் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட கடவுளின் சிலைகள், நாச்சியார் கோவில், மதுரை, வாகைக்குளத்தில் செய்யப்படும் பித்தளை விளக்குகள், காகிதக்கூழ் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நவரத்தின கற்கள், கருங்காலி மாலைகள், ஸ்படிக மாலைகள், சந்தற மாலைகள், வாசனை திரவியங்கள், வெள்ளை மரம் , செம்மர கூலினால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள், காட்டன் புடவைகள் உள்பட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

    இக்கண்காட்சியில் ரூ. 75 முதல் ரூ. 2,00,000 வரை மதிப்பிலான பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் இடம் பெற்றுள்ளன. வருகிற 19ஆம் தேதி வரை இந்த சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனை நிலையம் மேலாளர் சக்திதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தில், கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தது.
    • கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளிட்ட இதர பொருட்களில் கலப்படமாக விற்ற 13 வழக்கில் ரூ. 75 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில், கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தது.

    இதை யடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, இடைப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்ட னர்.

    அதில், போலியானது, உணவுக்கு ஒவ்வாத கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில் 13 வழக்குகளில் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்து, வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டார்.

    அதில், கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளிட்ட இதர பொருட்களில் கலப்படமாக விற்ற 13 வழக்கில் ரூ. 75 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

    • பள்–ளி–யில் கணினி அறை–யில் இருந்த இன்–டர்–நெட் ரிசீ–வர் கருவி உள்–ளிட்ட கணினி பொருட்–கள் கடந்த சில நாட்–க–ளுக்கு முன்பு காணா–மல் போனது.
    • அதை மர்ம நபர்–கள் திரு–டி–விட்–ட–தாக கூறப்–ப–டு–கிறது.

    சேலம்:

    சேலம் கோட்–டை–யில் மாந–க–ராட்சி மேல்–நி–லைப்–பள்ளி உள்–ளது. இந்த பள்–ளி–யில் கணினி அறை–யில் இருந்த இன்–டர்–நெட் ரிசீ–வர் கருவி உள்–ளிட்ட கணினி பொருட்–கள் கடந்த சில நாட்–க–ளுக்கு முன்பு காணா–மல் போனது. அதை மர்ம நபர்–கள் திரு–டி–விட்–ட–தாக கூறப்–ப–டு–கிறது. இது–கு–றித்து பள்ளி தலைமை ஆசி–ரியை நளினி, டவுன் போலீஸ் நிலை–யத்–தில் புகார் செய்–தார். அதன்–பே–ரில் போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி

    வரு–கின்–ற–னர்.

    • கலை நிகழ்ச்சிகளில் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
    • கைவினை கலைஞர்களின் பொருட்கள் கண்காட்சியும், உணவு திருவிழாவும் 5 நாட்கள் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் இந்த ஆண்டு கோடை விழா நேற்று மாலை தொடங்கியது.

    இந்த விழா வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதன் தொடக்க விழாவில் தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோடைவிழாவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், முரசு கொட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர்களை அனைத்து மாநில கலைஞர்களும் வரிசையாக நின்று தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி வரவேற்றனர்.

    பின்னர் கலை விழா தொடங்கியதும் குஜராத் மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் திரைப்பட பாடகி சின்ன பொண்ணுவின் நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    இந்த கலைவிழாவில் இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். மேலும் கோடை விழாவையொட்டி பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில் கைவினை கலைஞர்களின் பொருட்கள் கண்காட்சியும், உணவு திருவிழாவும் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கலை விழா தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. முடிவில் நிர்வாக அலுவலர் சீனிவாசன் அய்யர் நன்றி கூறினார்.

    • திருச்சுழி அருகே புகையிலை பொருள் பதுக்கி விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
    • கோர்்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சித்தலக்குண்டு பகுதியில் உள்ள மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் உத்தரவின் பேரில் திருச்சுழி இன்ஸ் பெக்டர் மணிகண்டன் தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் அடங்கிய தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள மளிகைக்கடையில் கணேஷ் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 20 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் மளிகை கடை உரிமையாளர் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்த முருகேசனை(42) கைது செய்தனர். பின்னர் அவர் கோர்்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
    • 130 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தன

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள ஈஞ்சார் மேற்கு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 58). இவர் ஈஞ்சார் விலக்கு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    அந்தப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் இவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது 137 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    அங்கிருந்து புகையிலை பாக்கெட்டுகள், ரூ.5 ஆயிரத்து 300-யை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    சிவகாசி அருகேயுள்ள முருகையாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சிவகாசி-விஸ்வநத்தம் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் போலீசார் சோதனையிட்டபோது, 130 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தரமற்ற உணவு பொருட்களை கண்டுபி டித்து நடவடிக்கை எடுக்கின்ற னர்.
    • மேலும் இது தொடர்பாக, சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையாள ருக்கு அபராதமும் விதிக்கப்ப டுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவ லர் கதிரவன் தலைமையி லான குழுவினர் ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதி களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தரமற்ற உணவு பொருட்களை கண்டுபி டித்து நடவடிக்கை எடுக்கின்ற னர். மேலும் இது தொடர்பாக, சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையாள ருக்கு அபராதமும் விதிக்கப்ப டுகிறது.

    அதன்படி கடந்த மாதத்தில் மட்டும் 13 வழக்கு களில் ரூ.1.27 லட்சம் அபராதம் விதித்து வருவாய் அலுவ லர் மேனகா உத்தரவிட்டார். அதில், தரமற்ற உணவு பொருள் விற்றது, தரமற்ற ஜவ்வரிசி விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளட்ட 13 வழக்குகளில் ரூ.1.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்களில் கலப்படம் செய்து, விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கடைகளில் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றனர்.

    எடப்பாடி அருகே 30 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
    சேலம்:

    எடப்பாடி அருகேவுள்ள ஒட்டப்பட்டி கிராமத்தில் ரமேஷ் என்பவரின் குடோனில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை சப்ளை செய்வதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. 

    இதையடுத்து குடோனில் ஆய்வுசெய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விற்பனைக்காக பாக்கெட்டுகளில் பொட்டலங்களாக  தயார் செய்து வைக்கப்பட்டிருந்த 30 டன் புகையிலை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கதிரவன், கூறுகையில் கடந்த மாதம் இதே குடோனில் புகையிலையை பாக்கெட் செய்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

     உடனடியாக ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்து சென்றோம். தற்போது மீண்டும் அதே தவறை செய்து வந்ததால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் புகையிலையை பறிமுதல் செய்தோம் என்றார்.
    பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.40.63 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனையானது.
    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் அருகே உள்ள சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டுவருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. 

    இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். 

    அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணை நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 40.77 ½ குவிண்டால் எடை கொண்ட 11ஆயிரத்து 97  தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.25.69-க்கும், குறைந்த விலையாக ரூ.22.15-க்கும், சராசரி விலையாக ரூ.24.55-க்கும் என்று ரூ 95ஆயிரத்து 12-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 165.68½ குவிண்டால் எடை கொண்ட 376மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.84.19-க்கும், குறைந்த விலையாக ரூ.83.05-க்கும், சராசரி விலையாக ரூ.84.05-க்கும் மற்றும் 2-ம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.95-க்கும், குறைந்த விலையாக ரூ.70.89-க்கும், சராசரி விலையாக ரூ.77.89க்கும் என்று ரூ.13லட்சத்து 37ஆயிரத்து 129க்கு விற்பனை ஆனது. 254.80குவிண்டால் எடை கொண்ட 343 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. 

    இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.110.79-க்கும், குறைந்த விலையாக ரூ.97.49-க்கும், சராசரி விலையாக ரூ.101.99க்கும் மற்றும் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.112.59-க்கும், குறைந்த விலையாக ரூ.94.42-க்கும், சராசரி விலையாக ரூ. 109.42-க்கும் என ரூ.26 லட்சத்து 31ஆயிரத்து 765க்கும், தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவை அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மொத்தமாக ரூ.40லட்சத்து 63 ஆயிரத்து 906-க்கு விற்பனை ஆனது.
    ×