என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்துங்கள்
    X

    ராமநாதபுரம் சுவாட்சுஸ் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த செறிவூட்டப்பட்ட உணவு கண்காட்சியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டார்.

    செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்துங்கள்

    • செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்துங்கள் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி சத்து நிறைந்துள்ளதால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவு பொருள்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மண்டலத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் செறிவூட்டப்பட்ட அரிசிகள் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு அதன் அடிப்படையில் விநியோகிக்கப்படுகிறது.

    இந்த பொருட்களில் வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி சத்து நிறைந்துள்ளதால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது. தற்போது தமிழக அரசு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியினை பொது விநியோகத் திட்டத்திற்கும் வழங்குகிறது.

    மாணவர்கள் பெற்றோர்களிடம் இதன் பயன் குறித்து எடுத்து சொல்லி அனைவரும் செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருள்களை பயன்படுத்தி உடல் ஆரோக்கியமுடன் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் அவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மண்டல மேலாளர் ஜோதிபாசு, துணை மண்டல மேலாளர் மேகவர்ணம், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் முத்துக்குமார், தர கட்டுப்பாட்டு அலுவலர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்கம் இணை பதிவாளர் கோவிந்தராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×