என் மலர்
நீங்கள் தேடியது "sold"
- ஏலத்தில் 11, 036 தேங்காய்கள் வரத்து இருந்தன.
- ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சம்.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 5.70 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 11, 036 தேங்காய்கள் வரத்து இருந்தன.இவற்றின் எடை 4,743 கிலோ.தேங்காய் கிலோ ரூ.21.10 முதல் ரூ.27.25 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.24.65. 51 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 980 கிலோ.கொப்பரை கிலோ ரூ.61.15 முதல் ரூ.85.35 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.78.85.ஏலத்தில் 96 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
- தேவகோட்டையில் நாட்கணக்கில் வைத்து விற்கப்படும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 1 லட்சத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள இறைச்சி கடைகளில் விற்கப்படும் ஆட்டுக்கறி சுகாதாரமற்ற முறையிலும், நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுவதாகவும் புகார்கள் வந்தன.
இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் உதவியாளர் மாணிக் கம் ஆகியோர் தலைமையில் தேவகோட்டை பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னர்.
அப்போது நகைக்கடை பஜாரில் இறைச்சி கடை நடத்தி வரும் ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது. அவருக்கு சொந்தமாக அண்ணாநகர், ஆறாவயல், வெள்ளையன் ஊரணி ஆகிய பகுதி களிலும் இறைச்சி கடை கள் உள்ளன. இங்கும் கெட்டுப்போன இறைச்சி விற்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மேற்கண்ட 4 கடைகளில் இருந்தும் 1000 கிலோ ஆட்டுக்கறி பறிமுதல் செய்யப்பட்டு சாகுல் அமீதுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தேவகோட்டையில் இறைச்சி களுக்காக ஆடுகள் அறுக்கும் போது பரிசோதனை செய்து ரசீது வழங்கி கடைகளுக்கு இறைச்சிகளில் சீல் வைத்து அனுப்பப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த நடைமுறை கடந்த சிலமாதங்களாக பின்பற்றப்படுவது இல்லை. இதனால் சுகாதாரமற்ற நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி உட்கொள்ளும் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எனவே இனியாவது நகராட்சி நிர்வாகம் கடுமையாக கண்காணித்து ஆட்டு இறைச்சி விற்ப னைக்கு விதிகளை பின் பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- ஞாயிறுதோறும் முருங்கை க்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
- 85 விவசாயிகள் 25 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கை க்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது, இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். நேற்று 85 விவசாயிகள் 25 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.25 முதல் 30வரைக்கும், மரம் முருங்கை ரூ.25முதல் 30வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.45 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர், இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரிகள் தெரிவித்தனர்.
- கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் நடந்தது.
- ரூ.15 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகி இருந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முதலாவது புத்தக திருவிழா கண்காட்சி கடந்த 5-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடந்தது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ- மாணவிகள், பழங்குடியினர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் நடந்தது.
புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மிகவும் பழமை வாய்ந்த புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாபயணிகளிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.
புத்தக திருவிழா கடந்த 14-ந் தேதி நிறைவு பெறுவதாக இருந்தது. புத்தக ஆர்வலர்கள், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று 19-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. கடந்த 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 33,257 பார்வையாளர்கள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு இருந்தனர். இதில் ரூ.15 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகி இருந்தது.
பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் இனி ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.
- விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
- ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்ச ந்தை செயல்படுகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.10, கத்தரிக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.20, சின்ன வெங்காயம் ரூ. 30, உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.50, முட்டை கோஸ் ரூ.25, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டை க்காய் ரூ.60, இஞ்சி ரூ.100, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 30, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.
- 71 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
- சந்தையில் அதிகபட்சமாக ரூ. 71 ஆயிரத்துக்கு செவலை வகைப்பசு விற்பனையானது.
காங்கயம் :
திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 71 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 51 மாடுகள் மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கு விற்பனையாயின.
இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ. 71 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன செவலை வகைப் பசு விற்பனையானது.
- ஏற்காடு ஒண்டிகடை பகுதி யில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப் படுவதாக ஏற்காடு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
- தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம், ஏற்காடு ஒண்டிகடை பகுதி யில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப் படுவதாக ஏற்காடு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் சோதனை செய்ததில் வெள்ள கடை கிராமத்தை சேர்ந்த அசோக் குமார் (வயது 40), கோவில் மேடு பகுதியை சேர்ந்த பவுல்ராஜ் (49) ஆகிய இரு வரும் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஏற்காடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லாட்டரி விற்ற இருவரையும் கைது செய்தனர்.
- கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக 700 முதல் 800 மாடுகள் வந்தது.
- கன்றுகுட்டிகள் 12 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.
திருப்பூர் :
ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை திருப்பூர் கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. பாரம்பரியமான இச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் என 500க்கும் அதிகமானோர் வருகின்றனர்.கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக 700 முதல் 800 மாடுகள் வந்தது. இந்த வாரம் சந்தை துவங்குவதற்கு முன்பாக 8 மணிக்கே ஆட்டோக்கள் பெருந்தொழுவு ரோட்டில் நீண்ட வரிசையில் இரண்டரை கி.மீ., தூரத்துக்கு காத்திருந்தது.வழக்கமாக மதியத்துக்குள் வாகனங்கள் வருகை முடிந்து விடும். சந்தை முடிவு தருவாயை எட்டும் வரை தொடர்ந்து ஆட்டோ, வேன்களில் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
1,100 மாடுகள் வரத்தாக இருந்தது. சந்தை வியாபாரிகள், விவசாயிகள் கூட்டம் நிறைந்திருந்ததால் கடந்த வாரம் 8முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கன்றுகுட்டிகள் 12 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. 40 முதல் 42 ஆயிரம் விற்ற மாடுகள் 46 முதல் 48 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. மாடுகள் விலை 2,000 முதல் 4,000 வரை உயர்ந்ததால் சந்தை ஏற்பட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரே நாளில் ரூ. 1.90 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
- அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்தது.
- தமிழ்நாடு அரசு 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
குடிமங்கலம்:
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு 60 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்தது.
மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறைந்த வட்டி கடன் திட்டங்கள், மானியத் திட்டங்கள் போன்றவற்றையும் செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் மிக எளிதாக மளிகைக் கடை, பெட்டிக்கடைகளில் கூட கிடைக்கும் எலி மருந்தைப் பயன்படுத்தி பல தற்கொலைகள் நிகழ்வது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடோல்) பூச்சி மருந்துக்கு தமிழக அரசு தடை விதித்தது.அதேநேரத்தில் தடையை மீறி இந்த எலி மருந்தை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எலிகளைக் கட்டுப்படுத்த தோட்டம் மற்றும் வீடுகளில் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது.மஞ்சள் பாஸ்பரஸ்க்கு எதிர்வினை மருந்து இல்லாததால் சில நேரங்களில் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகிறது.இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
எனவே 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் மருந்தை பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்கள் போன்றவற்றில் விற்பனை செய்யக் கூடாது.மீறி விற்பனை செய்யும் பூச்சிக்கொல்லி மருந்து வினியோகஸ்தர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.
குடிமங்கலம் வட்டாரத்தில் உள்ள கடைகளில் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்து விற்பனை செய்தால் குடிமங்கலம் வட்டார வேளாண்மை அலுவலரை 9788425208 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- 6 உழவர் சந்தைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி விலை உச்சத்தை எட்டி உள்ளது. அங்கு ஒரு கிலோ ரூ.120 முதல் 140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி, மேட்டுப்பாளையம், சுந்தராபுரம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்து, பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது என்று தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆகியவை முடிவு செய்தன.
அதன்படி கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளிடம் சுமார் 1800 கிலோ தக்காளிப் பழங்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன. அதன்பிறகு இவை உழவர் சந்தைக்கு கொண்டுவரப் பட்டது. அங்கு உள்ள கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோவை மாவட்ட வெளிமார்க்கெட் சந்தைகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், அங்கு உள்ள 6 உழவர் சந்தைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு தக்காளிப்பழங்களை குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர். இதனால் ஒரே நாளில் 1800 கிலோ தக்காளிப்பழங்கள் விற்று தீர்ந்து உள்ளன.
கோவை மாவட்ட உழவர் சந்தைகளில் இன்றும் தக்காளி விற்பனையில் ஈடுபடுவது என்று தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
- இருக்கூர் செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சுமார் 4 கிலோ எடையுள்ள பான் மசாலா,குட்கா, ஹான்ஸ் , பான்பராக் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செஞ்சுடையாம்பாளை யத்தில் உள்ள பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்டுள்ள மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கிலோ எடையுள்ள பான் மசாலா,குட்கா, ஹான்ஸ் , பான்பராக் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் பிரேம்குமார் (29) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏராளமான விவசாயிகள் தக்காளியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
- விவசாயிகள் தற்போது நிலையான விலை இருந்தால் போதும் என்று கருதுகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தக்காளியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி விலை உச்சத்தில் இருந்த போது, அறுவடை செய்த விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து பலர் லட்சத்தில் சம்பாதித்தனர்.
இந்நிலையில் ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் தக்காளி விளைச்சல் அதிகரிக்கவே இங்கிருந்து ஏற்றுமதியான தக்காளி குறையத்தொடங்கிய நிலையில் தற்போது 15 கிலோ கொண்ட ஒரு டிப்பர் தக்காளி ரூ. 400-க்கு விற்கப்படுகிறது.
திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த தக்காளி மொத்த வியாபாரி எஸ்.ஆர்.எம். ரவி கூறும்போது, தக்காளி விலை படிப்படியாக குறைந்துள்ளது. தற்போது ஒரு டிப்பர் தக்காளி நல்ல ரகம் ரூ. 400-க்கு விற்பனையாகிறது. ரூ. 28 முதல் ரூ. 30 வரை கொள்முதல் செய்யப்படும் தக்காளி, தற்போது வெளிச்சந்தையில் ரூ. 40-க்கு விற்கப்படுகிறது. 2 மற்றும் 3-ம் ரக தக்காளிகள் ஒரு டிப்பர் ரூ. 200க்கு கொள்முதல் செய்யப்பட்டு, வெளிச்சந்தைகளில் ரூ. 20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் விலை உச்சத்தில் இருந்தபோது, விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு இங்கிருந்து சென்ற தக்காளி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு அறுவடை தொடங்கிவிட்டதால், இங்கு பற்றாக்குறை இல்லை. ஆகவே விவசாயிகள் தற்போது நிலையான விலை இருந்தால் போதும் என்று கருதுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.