search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drumsticks"

    • 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது.
    • கத்தரிக்காய், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் அதிகளவில் தேக்கமடைந்து உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் காய்கறி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. நள்ளிரவில் வழக்கம் போல் விறு விறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை பின்னர் அதிகாலையில் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள், காய்கறி மற்றும் மளிகை கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்ததால் மந்தமாகி போனது.

    இதனால் கத்தரிக்காய், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் அதிகளவில் தேக்கமடைந்து உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். வரத்து குறைவால் முருங்கைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.120-க்கு விற்கப்படுகிறது.

    மொத்த விற்பனை விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    தக்காளி-ரூ.22, நாசிக் வெங்காயம்-ரூ.30, ஆந்திரா வெங்காயம்-ரூ.20, சின்ன வெங்காயம்-ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.25, பீன்ஸ்-ரூ.25, அவரைக்காய்-ரூ.20, வெள்ளரிக்காய்-ரூ.10, பன்னீர் பாகற்காய்-ரூ.50, உஜாலா கத்தரிக்காய்-ரூ.25, வரி கத்தரிக்காய்-ரூ.15, கொத்தவரங்காய்-ரூ.50, வெண்டைக்காய்-ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.40, முருங்கைக்காய்-ரூ.120, கோவக்காய்-ரூ.30, முட்டை கோஸ்-ரூ.12, புடலங்காய்-ரூ.25, ஊட்டி கேரட்-ரூ.35, பீட்ரூட்-ரூ.25, சுரக்காய்-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.30, முள்ளங்கி-ரூ.25, நூக்கல்-ரூ.25, இஞ்சி-ரூ.100.

    • தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன.
    • வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதிப்பு அண்டை மாநிலமான கேரளாவிலும் எதிரொலித்துள்ளது. அங்கு அத்தியாவசிய தேவை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக காய்கறிகள் கடும் ஏற்றத்தை சந்தித்துள்ளது. தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கேரளாவுக்கு செல்வது குறைந்துள்ளதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் இருந்து செல்லும் முருங்கைக்காய் வரத்து குறைவு காரணமாக கேரளாவில் ஒரு கிலோ ரூ.170-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் இதன் விலை ரூ.90 ஆக இருந்தது.

    பச்சை மிளகாய் விலையும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.80 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரம் இஞ்சியின் விலை ரூ.240-ல் இருந்து கிலோ ரூ.140 ஆக குறைந்துள்ளது. வயநாட்டில் இருந்து இஞ்சியின் வரத்து அதிகமாக உள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது.

    ஆலப்புழா மார்க்கெட்டுகளுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன. வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது
    • 105 விவசாயிகள் 60 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்

    வெள்ளகோவில் : 

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள். அந்த வகையில் நேற்று 105 விவசாயிகள் 60 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 6 க்கும், மரம் முருங்கை ரூ.5 க்கும், கரும்பு முருங்கை ரூ. 8 முதல் ரூ.10 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை குழம்பு.
    • முருங்கைக்கீரை சாம்பார், பொரியல், என்று விதவிதமாக செய்து சாப்பிடலாம்.

    முருங்கைக்கீரையை வைத்து முருங்கைக்கீரை கடையல், முருங்கைக்கீரை சாம்பார், பொரியல், என்று விதவிதமாக செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் நாவிற்கு ருசியாக செய்து கொடுத்தால் தானே நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள். ஒருமுறை முருங்கைக்கீரையில் இப்படி குழம்பு வைத்து சுடச்சுட சாதத்தில் இந்த குழம்பை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். அற்புதமான ருசி. சொல்லும்போதே மணக்க மணக்க வாசம் வீசுது.

    தேவையான பொருட்கள்

    மசாலா அரைக்க:

    மிளகு - 2 டீஸ்பூள்

    சீரகம் - 2 டீஸ்பூன்

    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)

    காய்ந்த மிளகாய்

    கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூஸ்

    குழம்பு தயாரிக்க:

    பாசிப்பருப்பு - 100 கிராம்

    முருங்கைக்காய் -1

    கத்தரிக்காய் - 3

    முருங்கைக்கீரை - இரண்டு கைப்பிடி அளவு

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    கடுகு- ஒரு டீஸ்பூன்

    உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

    பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை

    கறிவேப்பிலை - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அதில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு மிதமான தீயில் சிவக்க வறுத்து ஆற வைக்க வேண்டும். பின்பு இவற்றுடன் தேங்காய் சேர்த்து மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பசைபோல அரைத்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். பாதி அளவு வெந்ததும் அதனுடன் முருங்கைக்காய், சுத்தரிக்காய் ஆகியவற்றை சேர்த்து வேக வைக்க வேண்டும். அவை முக்கால் பதத்துக்கு வெந்ததும், முருங்கைக்கீரையை அதனுடன் சேர்த்து வேகவைக்க வேண்டும். பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா, மஞ்சள்தூள், உப்பு சேர்ந்து கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் கொத்தமல்லித் தழையை அதன்மேலே தூவ வேண்டும்.

    சிறிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும், இதை தயாரித்து வைத்திருக்கும் குழம்பில் ஊற்றி கலக்கவும், இப்போது சுவையான "முருங்கைக்கீரை குழம்பு' தயார்.

    • 1 கிலோ ரூ.10-க்கு கூட வாங்க ஆள் இல்லை.
    • பல விவசாயிகள் காய்களை பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம், சிவவிடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மானாவாரி நிலங்களாக இருப்பதால் ஆண்டுதோறும் விவசாயிகள் 100 ஏக்கருக்கு மேல் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு காய்க்கும் முருங்கைகள் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களின் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

    இந்த ஆண்டு முருங்கைக் காய்கள் நன்றாக காய்த்துள்ளன. ஒரு ஏக்கருக்கு சுமார் 1 டன் அளவுக்கு முருங்கை காய்த்துள்ளது. ஆனால் உரிய விலை இல்லாததால் வியாபாரிகள் வாங்க வரவில்லை. 1 கிலோ ரூ.10-க்கு கூட வாங்கவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள்

    கூறும்போது:-

    தற்போது ஆடி மாதம் என்பதால் முகூர்த்த நாட்கள் இல்லை. இதனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருப்பதால் முருங்கையின் பயன்பாடு பெருமளவில் குறைந்துள்ளது. வியாபாரிகளும் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பல விவசாயிகள் காய்களை பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். தற்போது தக்காளி உள்பட சில காய்கறிகளின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது வேதனையாக உள்ளது என்றனர்.

    இது பற்றி தோட்டக்கலை அதிகாரிகள் கூறும்போது, விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து மதுரை, திண்டுக்கள், திருச்சியில் உள்ள வியாபாரிகளின் தொடர்பு எண்களை விவசாயிகளிடம் கொடுத்துள்ளோம். அவர்களும் முருங்கைக்காய் வாங்குவது தொடர்பாக பேசி வருகின்றனர். அரசு சார்பில் விவசாயிகளுக்கு என்ன செய்ய முடியுமோ அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்போம் என்றனர்.

    • ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • ஒரு கிலோ முருங்கை ரூ.20 - 35 கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். நேற்று 50 விவசாயிகள் 5 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 25 க்கும், மரம் முருங்கை ரூ.20க்கும், கரும்பு முருங்கை ரூ. 35க்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்,இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • ஒரு கிலோ முருங்கை ரூ.15முதல் 35 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
    • 40 விவசாயிகள் 5டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 40 விவசாயிகள் 5டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.20 முதல் 25 வரைக்கும், மரம் முருங்கை ரூ.15முதல் 20வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.30முதல் 35வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • 65 விவசாயிகள் 15டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்
    • ரூ.15முதல் 35 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது, இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று 65 விவசாயிகள் 15டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.20 முதல் 25 வரைக்கும், மரம் முருங்கை ரூ.15முதல் 20வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.30முதல் 35வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • ஒரு கிலோ முருங்கை ரூ.6 முதல் 13 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
    • 100 விவசாயிகள் 45 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,

    நேற்று 100 விவசாயிகள் 45 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.10க்கும், மரம் முருங்கை ரூ.6முதல் 7வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.12 முதல் 13வரைக்கும் கொள்முதல் செய்தனர்,

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.40 மற்றும் ரூ.50 என்று விலை இருந்தது.
    • தற்போது விலை கிடுகிடு என குறைந்து கிலோ ரூ.4 க்கு விற்பனை ஆகிறது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தற்போது முருங்கைகாய் கொத்துக்கொத்தாய் காய்க்கும் சீசன் தொடங்கி உள்ளது.

    பல இடங்களில் திரும்புகின்ற திசைகளில் எல்லாம் பூவும் ,பிஞ்சுமாக முருங்கை மரம் காட்சி தருகிறது. ஆனால் விலை இல்லை. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.4-க்கு தான் கமிஷன் கடையில் தற்போது கொள்முதல் செய்கின்றனர். தினசரி 500 கிலோ முதல் 800 கிலோ வரை உடன்குடியில் இருந்த வெளியூர்களுக்கு ஏற்றுமதி ஆகுகிறது. மதுரை, சென்னை போன்ற வெளியூர்களுக்கு தினசரி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.40 மற்றும் ரூ.50 என்று விலை இருந்தது. தற்போது விலை கிடுகிடு என குறைந்து விட்டது. முருங்கைக்காய் நன்றாக காய்க்கும் நேரத்தில் விலை இல்லையே என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர். இது பற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    தற்போது முருங்கை காய்க்கு விலை இல்லை. ஒரு கிலோ ரூ.4-க்கு கொள்முதல் செய்கின்றனர். தற்போது கோடை காலமாக இருப்பதால், மக்கள் அதிகமாக ஆடு, மாடு, கோழிகளை தான் வாங்கி சாப்பிடுகிறார்கள். அதனால் சைவ பொருளான முருங்கைக்காய்க்கு விலை இல்லை. ஆனால் இப்போது முருங்கைமரத்தை பார்த்தால் பூவும், பிஞ்சுமாக தொங்கு கிறது. முருங்கைக் காயை மரத்தில் பறிக்கும் கூலி கூட கட்டுபடி ஆகவில்லை. அதனால் பலர் முருங்கைக்காய் பறிக்காமல் மரத்தில் அப்படியே போட்டு விட்டனர் என்று கூறினார்.

    • 110 விவசாயிகள் 50 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • முருங்கை ரூ.5 முதல் 12 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறு தோறும் முரு ங்கைக்காய் கொள் முதல் நிலையம் செயல் பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்மு தல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கை க்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று 110 விவசாயிகள் 50 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியா பாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ செடி முருங்கை ரூ.10க்கும், மரம் முருங்கை ரூ.5முதல் 7வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.10 முதல் 12 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்ட ன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெ ட்டுகளுக்கு அனுப்பி வைத்த னர்,இத்தகவலை முருங்கை க்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • ஒரு கிலோ முருங்கை ரூ.10 முதல் 35 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,

    நேற்று 95 விவசாயிகள் 50 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியா பாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.12க்கும், மரம் முருங்கை ரூ.10முதல் 35வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.20 முதல் 25 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.கொள்முதல் செய்த முருங்கை காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    ×