search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் நடந்த புத்தக திருவிழாவில் ரூ.16 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
    X

    ஊட்டியில் நடந்த புத்தக திருவிழாவில் ரூ.16 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

    • கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் நடந்தது.
    • ரூ.15 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகி இருந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முதலாவது புத்தக திருவிழா கண்காட்சி கடந்த 5-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடந்தது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ- மாணவிகள், பழங்குடியினர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் நடந்தது.

    புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மிகவும் பழமை வாய்ந்த புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாபயணிகளிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

    புத்தக திருவிழா கடந்த 14-ந் தேதி நிறைவு பெறுவதாக இருந்தது. புத்தக ஆர்வலர்கள், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று 19-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. கடந்த 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 33,257 பார்வையாளர்கள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு இருந்தனர். இதில் ரூ.15 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகி இருந்தது.

    பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் இனி ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

    Next Story
    ×