search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பாட்டுக்கு வந்தது
    X

    தஞ்சை காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பாட்டுக்கு வந்ததை மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டார்.

    தஞ்சை காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பாட்டுக்கு வந்தது

    • வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்கள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக காய்கறிகள் லாரிகளில் கொண்டுவந்து இறக்கி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்டப்பட்டது.

    ரூ.20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் கட்டப்பட்டன. இது தவிர வாகனங்கள் நிறுத்துமிடம், ஏ.டி.எம். மையம், கழிவறை வசதிகளும் கட்டப்பட்டுள்ளன.

    இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கடைகள் ஏலம் விடப்பட்டன. தொடர்ந்து ஏலம் எடுத்த கடை வியாபாரிகளுக்கு, சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்கள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டான இன்று முதல் மார்க்கெட் செயல்பாட்டுக்கு வந்தது. காலை முதலே வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் காய்கறிகளை குவித்து வைத்து விற்பனையில் ஈடுபடத் தொடங்கினர்.

    மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக காய்கறிகள் லாரிகளில் கொண்டுவந்து இறக்கி வைக்கப்பட்டது. காய்கறிகள் விற்பனை நடைபெறுவதை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏராளமான பொதுமக்கள் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க வந்தனர்.

    Next Story
    ×