search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Insure"

    • தமிழ்நாட்டில் 2023-2024 -ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சம்பா மற்றும் கோடை பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் (www.pmfby.gov.in) நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-

    தமிழ்நாட்டில் 2023-2024 -ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சம்பா மற்றும் கோடை பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் பியூச்சர் ஜெனரலி காப்பீடு நிறுவனத்தால் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாமக்கல் மாவட்டத்தில் நெல்-II, சிறியவெங்காயம்-II சம்பா (சிறப்பு) பருவத்திலும் உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பருத்தி, கரும்பு, , வாழை, மரவள்ளி, மற்றும் தக்காளி பயிர்கள் கோடை (ரபி) பருவத்திலும் பிரிமியத் தொகை காப்பிடு செலுத்த வேண்டும்.

    விவசாயிகள் பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்க ளிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ மற்றும் கடன் பெற விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் (www.pmfby.gov.in) நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம்.

    இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ (www.pmfby.gov.in) அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவல ரையோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களையோ அல்லது இத்திட்டத்தை செயல்ப டுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விவசாயிகள் கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய சேலம் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளர்.
    • காப்பீடு திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 பசு, எருமைகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கால்நடை காப்பீடு செய்ய 3,600 குறியீடு நிா்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவா்களுக்கு ரூ. 50 மானியத்திலும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், தாழ்த்தப்பட்டவா் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.70 மானியத்திலும் காப்பீடு செய்யப்படும்.

    இத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 பசு, எருமைகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம். இத் திட்டத்தில் இரண்டரை வயது முதல் 8 வயது உடைய பசு மற்றும் எருமைகளுக்கும் மற்றும் 1 முதல் 3 வயதுடைய வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

    ஓராண்டு காப்பீடு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 2 சதவீதமும், மூன்றாண்டு காப்பீடு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 5 சதவீதமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரூ. 35, 000-க்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்பிற்கான காப்பீடு கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளா்ப்போா் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி பயன்பெறலாம் என சேலம் கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியத்தொகை ரூ.559.50 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும்.
    • பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியத்தொகை ரூ.559.50 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும்.

    இந்த திட்டத்தில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது இ-சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். வருகிற 15-ந் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் நெல் சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை இணைத்து பதிவு செய்து ரசீதை பெற வேண்டும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு.
    • தோட்டக்கலை பயிர்கள், காப்பீடு தொகை, காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2022-23 (ராபி பருவம்) தோட்டக்கலைபயிர்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவதுடு-

    திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்தல் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நடைபெற்று வருகிறது.தோட்டக்கலைப் பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதிகள் கீழ்கண்டவாறு தோட்டக்கலை பயிர்கள், காப்பீடு தொகை, காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொத்தமல்லி- ரூ.620-31.12.2022, வெங்காயம்-ரூ.2217, மிளகாய்-ரூ.1220, தக்காளி-1487.50, தேதி-31-1-2023. வாழை-ரூ.4875.50,மரவள்ளி-1712.50, 28-2-2023 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    எனவே இதுவரை ராபி பயிர்களை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி இத்திட்டத்தில் காப்பீடு தொகை செலுத்தி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஏற்றுமதியாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது.
    • இ.சி.ஜி.சி., கிளைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பகிரப்படும்.

    திருப்பூர் :

    இ.சி.ஜி.சி., எனப்படும் ஏற்றுமதி காப்பீடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடந்தது. சங்க செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் சங்க தலைவர் ராஜாசண்முகம் பேசியதாவது:-சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், இன்று மாவட்டமாக அந்தஸ்து பெற்றுள்ளது.நாட்டின் பின்னலாடை நகராகவும் மாறியுள்ளது.

    தமிழகத்தின் ஏற்றுமதியில், மூன்றாமிடத்தை எட்டிப்பிடித்துள்ளது. பின்னலாடை தொழில் வளர்ச்சியே இதற்கு காரணம்.தொழிலாளராக பணியில் இணைவோர், ஆடை உற்பத்தி நுட்பங்களை கற்றறிந்து, எதிர்காலத்தில் தொழில்முனைவோராக மாறுகின்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்பத்தி, அனைத்து நுணுக்கங்களையும் நன்கு தெரிந்துவைத்துள்ளனர்; ஆனால் ஏற்றுமதி ஆவண தயாரிப்பு, இ.சி.ஜி.சி., போன்ற காப்பீடு அவற்றின் அவசியம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

    இ.சி.ஜி.சி., சார்பில் மாதம் ஒரு குறைகேட்பு கூட்டம் நடத்தி ஏற்றுமதியாளர் பிரச்னைகளை கேட்டறியவேண்டும். காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இ.சி.ஜி.சி., தென்மண்டல துணை பொதுமேலாளர் சுபாஷ்சாகர் பேசியதாவது:- ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிய பொருட்களுக்கான தொகை, பல்வேறு காரணங்களால், குறித்த நாட்களுக்குள் வர்த்தகர்களிடமிருந்து கிடைக்காமல் போகவாய்ப்பு உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழல்களில், ஏற்றுமதியாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது, இ.சி.ஜி.சி., காப்பீடு.உலக அளவில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் குறித்த முழு விவரங்கள் இ.சி.ஜி.சி., வசம் உள்ளது. குறிப்பிட்ட ஒரு வர்த்தகர் தொகை வழங்காமல் இழுத்தடிக்கும்பட்சத்தில், அவ்விவரங்கள் இ.சி.ஜி.சி., கிளைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பகிரப்படும்.

    இ.சி.ஜி.சி., குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காப்பீடு சார்ந்த குறைகள், சிக்கல்களை கண்டறிந்து களையும் வகையிலும், ஏற்றுமதியாளர் சங்கத்துடன் இணைந்து மாதம்தோறும் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தங்கள் அனைத்து ஆர்டர்களுக்கும், இ.சி.ஜி.சி.,ன் காப்பீடு மூலம் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

    வர்த்தகரிடமிருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் தொகை கிடைக்காவிட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும். உரிய ஆவணங்களுடன் அணுகினால் வர்த்தகரிடமிருந்து கிடைக்கவேண்டிய தொகை, இ.சி.ஜி.சி., மூலம் சுலபமாக கிடைத்துவிடும்.இவ்வாறு அவர் பேசினார்.இ.சி.ஜி.சி., முடிவில் திருப்பூர் கிளை மேலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று காப்பீடு சார்ந்த தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

    ×