search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் கலெக்டர் உமா வேண்டுகொள்
    X

    விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் கலெக்டர் உமா வேண்டுகொள்

    • தமிழ்நாட்டில் 2023-2024 -ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சம்பா மற்றும் கோடை பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் (www.pmfby.gov.in) நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-

    தமிழ்நாட்டில் 2023-2024 -ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சம்பா மற்றும் கோடை பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் பியூச்சர் ஜெனரலி காப்பீடு நிறுவனத்தால் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாமக்கல் மாவட்டத்தில் நெல்-II, சிறியவெங்காயம்-II சம்பா (சிறப்பு) பருவத்திலும் உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பருத்தி, கரும்பு, , வாழை, மரவள்ளி, மற்றும் தக்காளி பயிர்கள் கோடை (ரபி) பருவத்திலும் பிரிமியத் தொகை காப்பிடு செலுத்த வேண்டும்.

    விவசாயிகள் பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்க ளிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ மற்றும் கடன் பெற விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் (www.pmfby.gov.in) நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம்.

    இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ (www.pmfby.gov.in) அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவல ரையோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களையோ அல்லது இத்திட்டத்தை செயல்ப டுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×