search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAMPLE EXAM"

    • சேலத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
    • இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணை யத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

    மேலும் தேர்வு நாளன்று தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். சேலம் மாவட்டத்தை குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இந்த மாதிரித்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மைய நூலகத்தில் குரூப்-4 மாதிரித் தேர்வு நடைபெற உள்ளது.
    • ஓஎம்ஆர் தேர்வுத்தாளில் நடத்தப்படுகிறது.

    கரூர்:

    கரூர் மாவட்ட மைய நூலகத்தில் 16, 17ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முழு மாதிரித்தேர்வு நடைபெறுவதாக மாவட்ட மைய நூலகர் செ.செ.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ளது. கரூர் மாவட்ட நிர்வாகத்தின் கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ், இத்தேர்வுக்கான முழு மாதிரித்தேர்வு கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நாளை (16-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (17-ந் தேதி) ஆகிய இரு நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கொள்குறி முறையில் ஓஎம்ஆர் தேர்வுத்தாளில் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் கரூர் மாவட்ட மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் கரூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்படும் மாதிரித் தேர்வுகளில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    ×