பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சேலத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தாய் ஓமலூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்றிருந்தபோது மாணவி தூக்குபோட்டு கொண்டார்.
பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி ரம்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சித்தேஸ்வரன். இவரது மகள் சிந்துஜா (வயது 17).

இவர் பிளஸ்-1 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தட்டச்சு கற்று வந்தார். சிந்துஜாவின் தாய் நேற்று ஓமலூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்றிருந்தார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த சிந்துஜா திடீரென நேற்று இரவு சேலையை கழுத்தில் மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலின் பெயரில் கன்னங்குறிச்சி போலீசார் சம்பவத்திற்கு சென்று சிந்துஜாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிந்துஜா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் ? என்பது குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com