search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "World Bank"

  • தெற்காசியாவின் வளர்ச்சி 2024-ல் 6.0 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
  • வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதன் மூலம் மக்களின் நுகர்வை அதிகரிக்க முடியும்.

  புதுடெல்லி:

  இந்திய பொருளாதாரம் 2023-2024-ம் நிதி ஆண்டில் 7.5 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. அதே நேரம் தெற்காசியாவின் வளர்ச்சி 2024-ல் 6.0 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையின்படி, தெற்காசியா அடுத்த 2 வருடங்களுக்கு உலகின் மிக வேகமாக வளரும் பிராந்தியமாக இருக்கும் என்றும், 2025-ல் வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  இதுகுறித்து தெற்காசியாவிற்கான உலக வங்கியின் துணைத்தலைவர் மார்ட்டில் ரைசர் கூறுகையில், வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதன் மூலம் மக்களின் நுகர்வை அதிகரிக்க முடியும். எனவே வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உற்பத்தி துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நிலம், தொழிலாளர், முதலீடு உள்ளிட்டவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும் என்றார்.

  • 2021ல் நடந்த விபத்துகளை விட 2022ல் 9.4 சதவீதம் அதிக விபத்துகள் நடந்துள்ளன
  • இந்தியாவில் ஒரு நாளில் சுமார் 460 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்

  உலக மக்கள் தொகையில் சுமார் 1 சதவீதம் மட்டுமே உள்ள இந்தியாவில்தான், சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

  2021-ஆம் ஆண்டு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், 2022ல் சாலை விபத்துகள் 9.4 சதவீதம் அதிகம் என்றும் இந்தியாவின் சாலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. உயிரிழந்த 10 பேரில் 7 பேர், வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கியதையும் இந்த ஆய்வு சுட்டி காட்டுகிறது.

  ஒவ்வொரு நாளும் 462 பேர் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 19 பேர் எனும் எண்ணிக்கையில் சாலை விபத்துகளில் இந்தியர்கள் உயிரிழக்கின்றனர்; சுமார் 4 லட்சத்து 43 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

  இந்த விபத்துகளில் பல, முன்னால் செல்லும் வாகனத்தின் மீது பின்னால் வரும் வாகனங்கள் மோதுவதாலும், "ஹிட் அண்ட் ரன்" (hit and run) எனப்படும் ஒரு வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விடும் விபத்துகளினாலும் நடைபெறுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

  இந்திய பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) இதன் காரணமாக 5லிருந்து 7 சதவீத இழப்பு ஏற்படுவதாகவும், சாலைகளில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் என்றும் 18லிருந்து 60 வயது வரை உள்ள அனைவருமே பாதிக்கப்படுகிறார்கள் என்றும் உலக வங்கியின் ஆய்வு ஒன்றும் தெரிவிக்கிறது.

  "குடிமக்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை. அவர்கள் குணம் மாற வேண்டும்" என சாலை விபத்துகள் குறித்து இந்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த மாதம் தெரிவித்தார்.

  கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • கடன் உதவி செய்யும் உலக நிதி நிறுவன அமைப்புகள் நிபந்தனைகளை விதிக்கின்றன
  • மாதாந்திர மின் கட்டணத்தை கூட செலுத்த பணமின்றி மக்கள் தவிக்கின்றனர்

  இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வறுமை குறியீடு 39.4 சதவீதத்தை தொட்டு அபாயகரமான அளவை எட்டியுள்ளது என்றும் இதனால் சுமார் 1 கோடியே 25 லட்சம் பேர் பாதிக்கப்பட போகின்றனர் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

  தற்போது காபந்து அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாத இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அந்நாடு எடுக்க வேண்டிய சில முக்கியமான கொள்கை முடிவுகள் குறித்து அந்நாட்டிற்கு கடன் உதவி செய்து வரும் உலக வங்கி, புதிய அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்க அறிக்கை தயாரித்து வருகிறது.

  அந்நாட்டிற்கு நிதி உதவி செய்ய பல நாடுகள் முன் வராத காரணத்தால், கடன் உதவி செய்யும் உலக வங்கி, தேசிய நாணய நிதியம் போன்ற நிதி நிறுவனங்கள் பல நிபந்தனைகளை அந்நாட்டிற்கு விதிக்கின்றன. விவசாயத்தையும், ரியல் எஸ்டேட் துறையையும் அந்நாடு வரி வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேவையற்ற செலவினங்களை குறைக்கவும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. ஆனால், இதற்கு அங்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

  பாகிஸ்தான், மனித வளத்திலும் பொருளாதார நிலையிலும் பெரும் நலிவை சந்தித்து வருவதாக கூறும் உலக வங்கி அதனை சீர் செய்ய அதிரடியாக சில முடிவுகளை எடுக்க அந்நாட்டை வலியுறுத்துகிறது.

  கடும் விலைவாசி உயர்வாலும், வேலையில்லா திண்டாட்டத்தாலும் மாதாந்திர மின் கட்டணத்தை கூட செலுத்த முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

  "சந்திரயான்-3 சாதனை மூலம் இந்தியா நிலவுக்கே விண்கலன் அனுப்பி பெருமையடைகிறது. ஆனால் நாம் இந்தியாவை விட அனைத்திலும் பின் தங்கியுள்ளோம்" என அந்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவரே சமீபத்தில் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

  • நிதியில் சுமார் 500 மில்லியன் டாலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காக ஒதுக்கப்படும்.
  • 200 மில்லியன் டாலர்கள் நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நலன்புரி ஆதரவிற்காக ஒதுக்கப்படும்.

  கொலராடோ:

  1948-ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாததைத் தொடர்ந்து, இலங்கை மிக மோசமான நிதி நெருக்கடியுடன் போராடி வருகிறது.

  உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய பலதரப்பு முகவர்களிடமிருந்து இலங்கை எதிர்பார்க்கும் 4 பில்லியன் டாலர்கள் வரை கூடுதல் நிதியை IMF கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் பிணை எடுப்பிற்கு மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது.

  மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) செய்த ஒப்பந்தத்திற்குப் பிறகு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான வரவு-செலவு மற்றும் நலன்புரி ஆதரவாக 700 மில்லியன் டாலர்களை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

  நிதியில் சுமார் 500 மில்லியன் டாலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காக ஒதுக்கப்படும் என்றும் மீதமுள்ள 200 மில்லியன் டாலர்கள் நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நலன்புரி ஆதரவிற்காக ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான இயக்குனர் பாரீஸ் ஹேடட்- செர்வோஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், " ஒரு கட்ட அணுகுமுறையின் மூலம், உலக வங்கி குழுவின் மூலோபாயம் ஆரம்பகால பொருளாதார ஸ்திரப்படுத்தல், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

  இந்த சீர்திருத்தங்கள் நாட்டை மீண்டும் பசுமையான, நெகிழ்ச்சியான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பாதையில் கொண்டு செல்ல முடியும்" என்றார்.

  • அதிகரித்து வரும் கடன் சுமை, வருமானத்தில் மெதுவான வளர்ச்சி ஆகியவற்றால் தனியாரின் நுகர்வு குறைந்து விடும்.
  • கொரோனாவுக்காக அளிக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் வாபஸ் பெறப்பட்டதால், அரசின் நுகர்வும் மெதுவாகவே இருக்கும்.

  புதுடெல்லி:

  உலக வங்கி தனது அறிக்கையில், ''அதிகரித்து வரும் கடன் சுமை, வருமானத்தில் மெதுவான வளர்ச்சி ஆகியவற்றால் தனியாரின் நுகர்வு குறைந்து விடும். கொரோனாவுக்காக அளிக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் வாபஸ் பெறப்பட்டதால், அரசின் நுகர்வும் மெதுவாகவே இருக்கும். குறைவான பொருளாதார வளர்ச்சிக்கு இதுவே காரணங்கள்'' என்று கூறியுள்ளது.

  அதே சமயத்தில், நடப்பு கணக்கு பற்றாக்குறை 3 சதவீதத்தில் இருந்து 2.1 சதவீதமாகவும், பணவீக்கம் 6.6 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாகவும் குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

  • 1000 பஸ்களை "கிராஸ் காஸ்ட் ஒப்பந்த" அடிப்படையில் தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது.
  • உலக வங்கி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

  சென்னை:

  சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3436 பஸ்கள் தினமும் 625 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 29.50 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள்.

  8 அரசு போக்குவரத்து கழகத்திலேயே சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் தான் பெரியது. இங்கு 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

  இந்நிலையில் மேலும் 1000 பஸ்களை "கிராஸ் காஸ்ட் ஒப்பந்த" அடிப்படையில் தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான பஸ்களை இயக்கவும் அதற்கான செலவை ஒரு கிலோ மீட்டர் அடிப்படையில் நிர்ணயம் செய்து வழங்கவும் போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.

  "உலக வங்கி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 500 பஸ்களும் 2025-ம் ஆண்டில் 500 பஸ்களும் தனியார் இயக்க அனுமதிக்கப்பட உள்ளது.

  'கிராஸ் காஸ்ட்' ஒப்பந்தத்தின் அடிப்படையில் பஸ்களை தனியார் வழங்கவும், டிரைவர், கண்டக்டர் மற்றும் பராமரிப்பு செலவு, உதிரிபாகங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

  சென்னையில் பஸ்களை அதிகரிப்பதன் மூலம் பயணிகள் அதிகளவில் பயணம் செய்யவும் போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்தவும் இத்திட்டம் வழி வகுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

  இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் ஆலோசனை குழு அமைக்க டெண்டர் விடப்படுகிறது. இக்குழு இத்திட்டத்தில் உள்ள சாதக-பாதகங்களை ஆய்வு செய்து போக்குவரத்து கழகத்திற்கு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

  இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, இத்திட்டம் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்த உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

  விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும். அதன்பிறகு தான் எந்த அடிப்படையில் இத்திட்டத்தை செயல்படுத்துவது என்பது தெளிவாக தெரியவரும் என்றனர்.

  இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறுகையில், தனியாருக்கு போக்குவரத்து கழகத்தை கொடுப்பதற்கு ஒரு முன்னோட்டமாக இதனை கருதுகிறோம். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மும்பை உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு கொடுத்து நாசப்படுத்திவிட்டனர். அந்நிலை தமிழகத்தில் வேண்டாம் என்றார்.

  • உலக வங்கி தலைவர் பதவிக்கு அஜய் பங்காவை பரிந்துரைத்தார் அதிபர் பைடன்.
  • இதுதொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  வாஷிங்டன்:

  உலக வங்கியின் தலைவராக பதவி வகித்து வருபவர் டேவிட் மல்பாஸ். இவர் தனது பதவி முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

  இந்நிலையில், உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அதிகாரி அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  அஜய் பங்கா மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.

  • 2023-ல் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது.
  • உலக பொருளாதாரம் மெதுவாகவே வளர்ந்து வருகிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

  வாஷிங்டன்:

  2023-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. இது கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3 சதவீத வளர்ச்சி என்பதை விட குறைவாகும். மேலும் கடந்த 30 ஆண்டுகளில் 3-வது முறையாக உலக பொருளாதார வளர்ச்சி மிக குறைந்த அளவை எட்டியுள்ளது.

  கடும் பணவீக்கம், வட்டி விகித உயர்வு, முதலீடு குறைவு, ரஷியா-உக்ரைன் போரால் ஏற்பட்ட நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரம் மெதுவாகவே வளர்ந்து வருவதாக உலக பொருளாதார வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உலக பொருளாதாரம் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் முறையே 1.7 மற்றும் 2.7 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் உலக பொருளாதாரத்திற்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை களைவதற்கு மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

  • விவசாயிகள் ஒற்றை நெல் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்
  • நீரினை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு

  நெமிலி:

  ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கரிவேடு ஊராட்சியில் உலக வங்கி நிதியின் வாயி லாக வேகவதி உபவடி நில பகுதியில் நீர்வளத்துறையின் முலம் செயல்படுத்தப்பட்டு வரும் கரிவேடு ஏரி, தாமல் கால்வாய், கட்டுமானங்கள், தாமல் கசக்கால்வாய் புனரைமைப்பு பணிகளை உலக வங்கியின் நீர்வள வளர்ச்சி நிபுணர் யூப் நேற்று ஆய்வு செய்தனர்.

  இந்த ஆய்வின் போது ஏரிகள் மற்றும் கால்வாய்களில் நடைபெறும் பணிகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

  பல ஆண்டுகளுக்கு பிறகு ஏரிகள் சிறப்பாக தூர்வாரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் ஏரிகளின் கீழ் செல்லும் பாசன கால்வாய்களை அதிகாரிகள் உடனிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டுத் தரவும் கோரிக்கை வைத்தனர்.

  ஏரிகளில் புதிதாக செயல்பாட்டிற்கு வந்துள்ள நீர் பாசன சங்கங்கள் வாயிலாக நிதி ஆதாரம் திரட்டி பாசன கால்வாய்களை சீரமைத்து கொள்ளவும், பணிகள் முடிக்கப்பட்டவுடன் ஏரிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், ஒற்றை பயிர் சாகுபடி போன்ற பயிர்கள் செய்து நீரினை சிக்கனமாக பயன்படுத்தவும் விவசாய ஏரி நீர்பாசன சங்கங்களுக்கு அறிவுரை வழங்கினார்.

  இந்த ஆய்வின் போது மேல் பாலாறு வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், கோட்ட செயற்பொறியாளர் ராஜேஷ், உட்கோட்ட உதவி செயற் பொறியாளர் பிரபாகர் மற்றும் காவேரிப்பாக்கம் பாசன பிரிவு உதவி பொறியாளர் மெய்யழகன், பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் செபஸ்டின் ரகோத்தமன் மற்றும் வே ளாண்மை தோட்டக்கலை உதவி இயக்குனர் சண்முகம் மற்றும் சார்பு துறை அலுவ லர்கள் விவசா யிகள்ஆகியோர் உடன் இருந்தனர்.

  • நடப்பு நிதிஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
  • இ்ந்திய பொருளாதார வளர்ச்சியை உலக அமைப்பு உயர்த்தி கணித்திருப்பது இது முதல்முறை ஆகும்.

  புதுடெல்லி:

  நடப்பு நிதிஆண்டில் (2022-2023) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்து இருந்தது. அதை கடந்த அக்டோபர் மாதம் 6.5 சதவீதமாக குறைத்தது.

  இந்நிலையில், நேற்று வெளியிட்ட அறிக்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.9 சதவீதமாக இருக்கும் என்று உயர்த்தி கணித்துள்ளது.

  கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2-வது காலாண்டில் இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக மீண்டு எழுந்ததுதான் இதற்கு காரணம் என்று உலக வங்கி கூறியுள்ளது.

  இ்ந்திய பொருளாதார வளர்ச்சியை உலக அமைப்பு ஒன்று உயர்த்தி கணித்து இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.