என் மலர்
நீங்கள் தேடியது "Jan suraaj"
- புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.
- பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவின் -ஜேடியுவின் என்டிஏ கூட்டணி பெரு வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 35 இடங்கள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தது.
இதற்கிடையே புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.
இதற்கிடையே தேர்தலுக்கு முன் என்டிஏ அரசு சுமார் ஒன்றரை கோடி பீகார் பெண்களின் வங்கிக்கணக்கில் தொழில் தொடங்கும் நிதிக்கான முன்பணம் என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அக்கூட்டணியில் வெற்றிக்கு காரணம் என ஜன் சுராஜ் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இன்று, ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் செய்தி தொடர்பாளர் உதய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது. அரசு கஜானா காலியாக இருக்கிறது. பொதுப் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் மக்களின் ஓட்டுக்களை வாங்கினார்கள்.
ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிப்பு வரையில் மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக நிதிஷ் குமார் அரசால் ரூ.40 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பணம், உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டது.
தேர்தல் ஒழுக்க நெறிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகத்தான் ரூ. 21,000 கோடியில் ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு, 1.25 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 தொகை விநியோகிக்கப்பட்டது. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொது நலனுக்காக செலவிட இப்போது பணம் இல்லை" என்று கூறினார்.
- பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்படுகின்றன.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷி பியூஷ் மொகமா தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக வாக்குகள் சேகரிக்க பிரசாரத்தில் ஈடுபடும் பணியில் துலார்சந்த் யாதவ் (75) ஈடுபட்டார். இவர் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தொண்டர் மற்றும் உள்ளூர் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், அரசியல் குழுக்கள் இடையே நடந்த மோதலில் துலார்சந்த் நேற்று படுகொலை செய்யப்பட்டார்.
விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். மேலும், அவருடைய உதவியாளர்கள் மணிகாந்த் தாக்குர் மற்றும் ரஞ்சித் ராம் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய பாட்னா போலீஸ் அதிகாரி கார்த்திகேய சர்மா, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.
- பீகாரின் கர்கஹார் சட்டசபைத் தொகுதியில் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம்பெற்றிருக்கிறது.
- மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் சட்டசபை தொகுதியான பபானிபூரிலும் இவரது பெயர் உள்ளது.
புதுடெல்லி:
இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக வாக்காளர் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பீகாரைத் தொடர்ந்து 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது.
சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முக்கியக் காரணமாக தேர்தல் ஆணையம் குறிப்பிடுவது, சில வாக்காளர்கள் ஒரு இடத்தில் பதிவு செய்து, பின்னர் தங்கள் வசிப்பிடத்தை மாற்றினால், தங்கள் பெயர்களை அந்த வசிப்பிடத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்காமல் வேறு இடத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்கிறார்கள். இது வாக்காளர் பட்டியலில் மீண்டும் மீண்டும் உள்ளீடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது என தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, ஜன் சுராஜ் கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோரின் பெயர் பீகார் மற்றும் மேற்கு வங்கம் என இரு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் சட்டசபை தொகுதியான பபானிபூர் மற்றும் பீகாரின் கர்கஹார் சட்டசபைத் தொகுதியிலும் உள்ள வாக்காளர் பட்டியல்களில் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம்பெற்றிருக்கிறது.
இந்நிலையில், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்கும்படி ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது. அதில், அடுத்த 3 நாட்களுக்குள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
- பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
- பிரசாந்த் கிஷோர், தனது கட்சி மக்கள் அரசாங்கத்தை அமைக்கும்.
தேர்தல் வியூக நிபுணர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர், பீகார் மாநில ரோஹ்தாஸ் மாவட்டத்தை சேர்ந்த "பிகே" என அழைக்கப்படுபவர் பிரசாந்த் கிஷோர்.
பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதைமுன்னிட்டு, அம்மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு ஜன் சூராஜ் கட்சி என பெயர் சூட்டியுள்ளார்.
அதன்படி, பீகார் தலைநகர் பாட்னாவில் தனது அமைப்பான ஜன் சூராஜ் அபியான் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "புதிய கட்சி வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி தொடங்கப்படும். தனது கட்சி மக்கள் அரசாங்கத்தை அமைக்கும். கட்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு கோடி உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக ஜன் சூராஜ் கட்சி இருக்கும். புதிய கட்சி வரலாற்றில் இடம் பிடிக்கும்.
இந்தக் கட்சி எந்தவொரு குறிப்பிட்ட சாதி, குடும்பம் அல்லது சமூகத்துக்குள் நின்றுவிடாது. இது பீகார் மக்களின் கூட்டு முயற்சி" என்றார்.
- பிரசாந்த் கிஷோர், ஜன சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.
- மற்ற கட்சிகளைப் போல், கள்ளச்சாராயம், மணல் குவாரி ஆகிய வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள மாபியாக்களிடம் நாங்கள் நன்கொடையை எதிர்பார்க்கவில்லை.
பாட்னா:
தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர், ஜன சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு நடக்கும் பீகார் சட்டசபை தேர்தலில் அக்கட்சி போட்டியிடுகிறது.
இந்நிலையில், தனது கட்சிக்கான நிதி தேவை குறித்து பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-
மற்ற கட்சிகளைப் போல், கள்ளச்சாராயம், மணல் குவாரி ஆகிய வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள மாபியாக்களிடம் நாங்கள் நன்கொடையை எதிர்பார்க்கவில்லை.
பொதுமக்களிடம் நன்கொடை கேட்போம். பீகார் முழுவதும் 2 கோடி பேர் தலா ரூ.100 வீதம் நன்கொடை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வோம். மக்களும் ஏற்றுக்கொள்வார்கள். இந்த விதத்தில் ரூ.200 கோடி எளிதாக திரட்டலாம். தேர்தல் நெருங்கும்போது இன்னும் அதிகமாக கூட கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






