என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: இதுதான் காரணம்
    X

    பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: இதுதான் காரணம்

    • பீகாரின் கர்கஹார் சட்டசபைத் தொகுதியில் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம்பெற்றிருக்கிறது.
    • மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் சட்டசபை தொகுதியான பபானிபூரிலும் இவரது பெயர் உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக வாக்காளர் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    பீகாரைத் தொடர்ந்து 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது.

    சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முக்கியக் காரணமாக தேர்தல் ஆணையம் குறிப்பிடுவது, சில வாக்காளர்கள் ஒரு இடத்தில் பதிவு செய்து, பின்னர் தங்கள் வசிப்பிடத்தை மாற்றினால், தங்கள் பெயர்களை அந்த வசிப்பிடத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்காமல் வேறு இடத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்கிறார்கள். இது வாக்காளர் பட்டியலில் மீண்டும் மீண்டும் உள்ளீடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது என தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே, ஜன் சுராஜ் கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோரின் பெயர் பீகார் மற்றும் மேற்கு வங்கம் என இரு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறது.

    மேற்கு வங்கத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் சட்டசபை தொகுதியான பபானிபூர் மற்றும் பீகாரின் கர்கஹார் சட்டசபைத் தொகுதியிலும் உள்ள வாக்காளர் பட்டியல்களில் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம்பெற்றிருக்கிறது.

    இந்நிலையில், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்கும்படி ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது. அதில், அடுத்த 3 நாட்களுக்குள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×