search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accident deaths"

    • 2021ல் நடந்த விபத்துகளை விட 2022ல் 9.4 சதவீதம் அதிக விபத்துகள் நடந்துள்ளன
    • இந்தியாவில் ஒரு நாளில் சுமார் 460 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்

    உலக மக்கள் தொகையில் சுமார் 1 சதவீதம் மட்டுமே உள்ள இந்தியாவில்தான், சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    2021-ஆம் ஆண்டு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், 2022ல் சாலை விபத்துகள் 9.4 சதவீதம் அதிகம் என்றும் இந்தியாவின் சாலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. உயிரிழந்த 10 பேரில் 7 பேர், வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கியதையும் இந்த ஆய்வு சுட்டி காட்டுகிறது.

    ஒவ்வொரு நாளும் 462 பேர் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 19 பேர் எனும் எண்ணிக்கையில் சாலை விபத்துகளில் இந்தியர்கள் உயிரிழக்கின்றனர்; சுமார் 4 லட்சத்து 43 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

    இந்த விபத்துகளில் பல, முன்னால் செல்லும் வாகனத்தின் மீது பின்னால் வரும் வாகனங்கள் மோதுவதாலும், "ஹிட் அண்ட் ரன்" (hit and run) எனப்படும் ஒரு வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விடும் விபத்துகளினாலும் நடைபெறுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    இந்திய பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) இதன் காரணமாக 5லிருந்து 7 சதவீத இழப்பு ஏற்படுவதாகவும், சாலைகளில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் என்றும் 18லிருந்து 60 வயது வரை உள்ள அனைவருமே பாதிக்கப்படுகிறார்கள் என்றும் உலக வங்கியின் ஆய்வு ஒன்றும் தெரிவிக்கிறது.

    "குடிமக்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை. அவர்கள் குணம் மாற வேண்டும்" என சாலை விபத்துகள் குறித்து இந்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த மாதம் தெரிவித்தார்.

    கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×