என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐரோப்பிய நாடுகள்"

    • டிரம்ப்பின் பேச்சு நேட்டோ மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டையும் அவமதிப்பதாக உள்ளது.
    • நேட்டோ துருப்புக்களின் தியாகங்களைப் பற்றி உண்மையாகவும் மரியாதையுடனும் பேசப்பட வேண்டும்.

    டென்மார்க்கின் தன்னாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, நேட்டோ அமைப்பில் அமெரிக்காவை தவிர பிறநாடுகளின் படைகள் முக்கிய பங்காற்றவில்லை. ஆப்கானிஸ்தான் போரில் முன்களத்தில் அமெரிக்க படையினரே இருந்தனர், பிற நாடுகளின் படையினர் முன்களத்தில் இல்லை. நேட்டோ அமைப்பில் பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கவில்லை. அவர்கள் நமக்கு தேவையும் இல்லை என்றார்.

    டிரம்பின் கருத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறும்போது, டிரம்ப்பின் பேச்சு நேட்டோ மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டையும் அவமதிப்பதாக உள்ளது. அந்த கருத்து அவமானகரமானவை மற்றும் வெளிப்படை யாகவே அதிர்ச்சியூட்டு பவை. இதற்கு டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

    அதேபோல் இங்கிலாந்து இளவரசர் ஹாரி கூறும் போது, "ஆப்கானிஸ்தானில் நான் பணியாற்றினேன். அங்கு வாழ்நாள் முழுவதும் நண்பர்களை உருவாக்கினேன். அங்கு நண்பர்களை இழந்தேன். நேட்டோ துருப்புக்களின் தியாகங்களைப் பற்றி உண்மையாகவும் மரியாதையுடனும் பேசப்பட வேண்டும் என்றார்.

    • கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
    • எதிர்ப்பு தெரிவித்த நாடுகள்மீது கூடுதல் வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

    ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ், பின்லாந்து ஜெர்மனி உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதலாக 10% வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், கிரீன்லாந்தை ஒப்படைக்காவிட்டால், ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கும் என்றும், இதில் 100% உறுதியாக உள்ளதாகவும் டிரம்ப் மீண்டும் மிரட்டல் வைத்துள்ளார்.

    ராணுவ படையெடுப்பு மூலம் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுமா என்ற கேள்விக்கு, No Comments என டிரம்ப் பதில் அளித்தார்.

    • நாங்கள் நிச்சயமாக அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேசுவோம்.
    • ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் அவசர கூட்டம் நடக்கிறது.

    கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறும்போது, டிரம்ப் விதித்துள்ள வரிகள் அட்லாண்டிக் கடந்த உறவு களைப் பலவீனப்படுத்தும். ஒரு ஆபத்தான சரிவுப் பாதைக்கு வழிவகுக்கும். ஐரோப்பா ஒற்றுமையுடனும், ஒருங்கிணைப்புடனும் தனது இறையாண்மையைக் காப்பதில் உறுதியுடனும் இருக்கும் என்றார்.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரேன் கூறும்போது, 'வரி அச்சுறுத் தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இந்தச் சூழலில் அவற்றுக்கு இடமில்லை. ஐரோப்பிய இறையாண்மை நிலைநிறுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். இந்த மனப்பான்மையுடனேயே நான் எங்கள் நட்பு ஐரோப்பியப் நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவேன்' என்றார்.

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கூறும்போது, 'நேட்டோவின் கூட்டுப் பாதுகாப்பிற்காகச் செயல்ப டும் நட்பு நாடுகளின் மீது வரிகளை விதிப்பது முற்றிலும் தவறானது. இது குறித்து நாங்கள் நிச்சயமாக அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேசுவோம்.

    ஆர்க்டிக் பாதுகாப்பு முழு நேட்டோவிற்கும் முக்கியமானது என்பதையும், ஆர்க்டிக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நட்பு நாடுகள் அனைத்தும் இணைந்து மேலும் அதிகமாகச் செயல் பட வேண்டும்' என்றார்.

    சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் கூறும்போது, 'நாங்கள் எங்களை அச்சுறுத்த அனுமதிக்க மாட்டோம். தங்களைப் பாதிக்கும் விஷயங்கள் குறித்து டென்மார்க்கும் கிரீன்லாந்தும் மட்டுமே முடிவெடுக்கும். நான் எப்போதும் என் நாட்டையும் எங்கள் நட்பு அண்டை நாடுகளையும் பாதுகாப்பேன்' என்றார்.

    இதற்கிடையே டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் அவசர கூட்டம் நடக்கிறது.

    • ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷியா தெரிவித்தது.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    சமீபத்தில் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் புதின் சில நிபந்தனைகளை விதித்தார். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசினார்.

    இதற்கிடையே உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். இதில் போர் நிறுத்தப்பட்ட தருணத்தில் பாதுகாப்பை வழங்க உதவுவதற்காக உக்ரைனின் 26 நட்பு நாடுகள் நிலம், கடல் அல்லது வான் வழியாக துருப்புக்களை அனுப்ப உறுதியளித்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் தெரிவித்தார்.

    இந்த நிலையில் வெளிநாட்டு ராணுவத்தால் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷியா தெரிவித்தது.

    இதனையடுத்து உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவாா்த்தைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷியா அறிவித்தது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு உதவ பல பில்லியன் டாலர் மதிப்புள்ள முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்துவதற்கான வழிகளை ஐரோப்பிய ஒன்றியம் தேடிவருவதாக செய்திகள் வெளியானது.

    இந்த தகவலால் கடுப்பான ரஷியா, தங்கள் சொத்துக்களை அபகரிக்கும் எந்த ஐரோப்பிய நாட்டையும் பழி தீர்ப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளது. மேலும், தங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது திருட்டுக்கு சமம் என ரஷ்யா காட்டமான கருத்தை தெரிவித்துள்ளது.

    • பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 105 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் வீசியது.
    • ஜெர்மனியில், வறட்சி மற்றும் வெப்பம் காட்டுத்தீ உருவாகி அதில் பல ஏக்கர் விளைநிலங்கள் தீயில் கருகி நாசமாகின.

    பாரீஸ்:

    ஐரோப்பா நாடுகளில் கடந்த மாதம் கோடைக்காலம் தொடங்கியது. அதில் இருந்து ஐரோப்பா நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் தொடங்கி சுவிட்சர்லாந்து, பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் இயல்பை காட்டிலும் கடுமையான வெப்ப அலை வீசுகிறது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 105 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் வீசியது. ஸ்பெயினில் 106 டிகிரிவரை வெப்பம் வாட்டி வதைத்தது. குறிப்பாக ஐரோப்பா நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் ஸ்பெயின் அருகே லிஸ்பனில் உள்ள மோரா நகரில் அதிகபட்சமாக 138 டிகிரிவரை வெப்பம் பதிவானது.

    வெப்ப அலைவீச்சை சமாளிக்க இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக பிரான்சின் மெட்டியோ நகரம், ஜெர்மனியின் முனிச் ஆகிய நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

    மேலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக வளாகங்கள் ஆகியவை பகுதிநேரமாகவே செயல்பட்டு வருகின்றன. நகரில் உள்ள பூங்காக்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தற்காலிக தண்ணீர் பம்புகள், செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இளைப்பாற அனுமதிக்கப்பட்டனர்.

    ஜெர்மனியில், வறட்சி மற்றும் வெப்பம் காட்டுத்தீ உருவாகி அதில் பல ஏக்கர் விளைநிலங்கள் தீயில் கருகி நாசமாகின. தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட ஐரோப்பா ஏற்கனவே சுமார் 30 டிகிரி செல்சியல்வரை வெப்பம் உயர்ந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

    புவி வெப்பமயமாதல், அதிகரித்து வரும் தொழில்புரட்சி, புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வெப்ப அலைவீச்சு உயர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஐரோப்பா நாடுகளில் 2,300 பேர் உயிரிழந்ததாக அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

    • கொரோனா தொற்று பல்வேறு திரிபுகளாக மாறி பரவி வருகிறது.
    • தடுப்பூசிகள் மூலம் இதை தடுக்க முடியும்.

    கொரோனா தொற்று பல்வேறு திரிபுகளாக மாறி தொடர்ந்து பரவி வருகிறது. தற்போது புதிய வகை கொரோனாவான 'எக்ஸ்.இ.சி.' 27 நாடுகளில் பரவி வருகிறது.

    ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவும் இந்த வகை கொரோனா, ஏற்கெனவே வந்த ஒமைக்ரான் திரிபுகள் கே.எஸ்.1.1 மற்றும் கே.பி.3.3 ஆகியவை இணைந்த கலவையாக உள்ளது. இது விரைவில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய கொரோனா திரிபாக மாறலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


    இந்த புதிய வகை கொரோனா ஜெர்மனியில் கடந்த ஜூன் மாதம் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் இங்கிலாந்து, அமெரிக்கா, டென்மார்க் உள்பட பல நாடுகளில் பரவ தொடங்கியது. இது குளிர்காலத்தில் வேகமாக பரவலாம் எனவும், தடுப்பூசிகள் மூலம் இதை தடுக்க முடியும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    இதுவரை போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுக்கல் மற்றும் சீனா உள்பட 27 நாடுகளில் 500 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் எக்ஸ்.இ.சி. வகை புதிய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    லண்டன் பல்கலைக்கழகத்தின் மரபியல் மைய இயக்குனர் பிரான்காயிஸ் பாலக்ஸ் கூறுகையில், 'எக்ஸ்.இ.சி. எனப்படும் புதிய வகை கொரோனா வேகமாக பரவும் திறனுடையது. ஆனால் இதை தடுப்பூசி மூலம் தடுக்க முடியும்' என்றார்.

    ×