என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷியா போர்"

    • ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷியா தெரிவித்தது.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    சமீபத்தில் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் புதின் சில நிபந்தனைகளை விதித்தார். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசினார்.

    இதற்கிடையே உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். இதில் போர் நிறுத்தப்பட்ட தருணத்தில் பாதுகாப்பை வழங்க உதவுவதற்காக உக்ரைனின் 26 நட்பு நாடுகள் நிலம், கடல் அல்லது வான் வழியாக துருப்புக்களை அனுப்ப உறுதியளித்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் தெரிவித்தார்.

    இந்த நிலையில் வெளிநாட்டு ராணுவத்தால் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷியா தெரிவித்தது.

    இதனையடுத்து உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவாா்த்தைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷியா அறிவித்தது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு உதவ பல பில்லியன் டாலர் மதிப்புள்ள முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்துவதற்கான வழிகளை ஐரோப்பிய ஒன்றியம் தேடிவருவதாக செய்திகள் வெளியானது.

    இந்த தகவலால் கடுப்பான ரஷியா, தங்கள் சொத்துக்களை அபகரிக்கும் எந்த ஐரோப்பிய நாட்டையும் பழி தீர்ப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளது. மேலும், தங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது திருட்டுக்கு சமம் என ரஷ்யா காட்டமான கருத்தை தெரிவித்துள்ளது.

    • உக்ரைனின் 26 நட்பு நாடுகள் நிலம், கடல் அல்லது வான் வழியாக துருப்புக்களை அனுப்ப உறுதி.
    • ரஷியா ஏற்றுக்கொள்ளக் கூடிய உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதமாக இருக்க முடியாது.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    சமீபத்தில் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் புதின் சில நிபந்தனைகளை விதித்தார். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசினார்.

    இதற்கிடையே உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். இதில் போர் நிறுத்தப்பட்ட தருணத்தில் பாதுகாப்பை வழங்க உதவுவதற்காக உக்ரைனின் 26 நட்பு நாடுகள் நிலம், கடல் அல்லது வான் வழியாக துருப்புக்களை அனுப்ப உறுதியளித்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் தெரிவித்தார்.

    இந்த நிலையில் வெளிநாட்டு ராணுவத்தால் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷியா தெரி வித்து உள்ளது.

    இது தொடர்பாக ரஷிய அதிபர் புதின் கூறுகையில்," எந்தவொரு போர்நிறுத்தமும் நடைமுறைக்கு வந்த மறுநாளே, உக்ரைனில் படைகளை நிறுத்தும் மேற் கத்திய நாடுகளின் திட்டங்களை நாங்கள் நிராகரிக்கிறோம். உக்ரைனுக்கு அனுப்பப்படும் எந்தவொரு துருப்பும் சட்டபூர்வமான இலக்குகளாக இருக்கும்." என்றார்.

    கிரெம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, "உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதங்களை வெளி நாட்டு, குறிப்பாக ஐரோப் பிய மற்றும் அமெரிக்க, ராணுவங்களால் உறுதி செய்ய முடியாது. இது ரஷியா ஏற்றுக்கொள்ளக் கூடிய உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதமாக இருக்க முடியாது.

    மோதலைத் தீர்ப்பது குறித்து ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் விற்கும் இடையேயான உயர்மட்டக் கூட்டத்திற்கு முன் நிறைய பணிகள் செய்யப்பட வேண்டும்" என்றார்.

    • ரஷியாவின் திறன்களுக்கு மற்றொரு கடுமையான அடியாகும் என்று தெரிவித்தது.
    • ரஷியாவின் போர் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஷியாவின் உளவு-விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை கூறும்போது, அசோவ் கடலில் ரஷியாவின் ஏ-50 யூ உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    இது ரஷியாவின் திறன்களுக்கு மற்றொரு கடுமையான அடியாகும் என்று தெரிவித்தது. ஆனால் இதுகுறித்து ரஷியா அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    சமீபத்தில் ரஷியாவின் போர் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது.
    • நேட்டோ கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயலுக்கு பதிலடி நடவடிக்கையே இந்த போர் ஆகும்.

    பியாங்யாங்:

    நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவை ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகின்றன. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாக உள்ளது. அதன்படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது.

    இரு நாடுகளுக்கிடையே கடுமையான போர் நிலவுவதாகல், 3ம் உலகப்போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை மற்றும் பல நாடுகள் கவலை தெரிவித்தன. இந்தநிலையில் ரஷிய ராணுவ மந்திரி ஆண்ட்ரே பெலோசோவ் தலைமையிலான குழுவினர் வடகொரியா சென்று அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசினர்.

    அப்போது கிம் ஜாங் அன் கூறியதாவது, நேட்டோ கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயலுக்கு பதிலடி நடவடிக்கையே இந்த போர் ஆகும். எனவே உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா எப்போதும் ரஷியாவுக்கு தனது ஆதரவை அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.
    • குர்ஸ்க் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் முனைப்பில் ரஷிய படைகள் ஈடுபட்டு இருந்தன.

    நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் படையெடுத்தது. இந்நிலையில், போர் தொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் இருதரப்பிலும் அமைதி பேச்சுவார்த்தையில் பலன் ஏற்படவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.

    உக்ரைனுக்கு எதிரான போரில் 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷியா திட்டமிட்டு உள்ளது என அமெரிக்கா குற்றச்சாட்டாக கூறியிருந்தது. அது உண்மை என அடுத்தடுத்து தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இந்த போரில் ரஷிய படை வீரர்களை, அதன் கூட்டணி நாடான வடகொரியாவின் வீரர்களே தவறான புரிதலால் சுட்டு கொன்ற அவலம் நடந்துள்ளது.


     குர்ஸ்க் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் முனைப்பில் ரஷிய படைகள் ஈடுபட்டு இருந்தன. ஆனால், அதனால் எதிரி படைகளை எளிதில் வெற்றி கொள்ள முடியவில்லை.

    இந்நிலையில், ரஷிய படையினரின் உத்தரவுகளை சரியாக புரிந்து கொள்ள முடியாத சூழலில் வடகொரியா வீரர்கள் இருந்துள்ளனர். இதனால், ரஷிய வீரர்களை தவறுதலாக எதிரிகள் என அவர்கள் நினைத்துள்ளனர். அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ரஷிய வீரர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    ரஷியாவுக்கு இந்த ஒரு விசயம் மட்டுமே முக்கிய சவால் என்றில்லாமல், உக்ரைனுக்கு வடகொரிய வீரர்களை அழைத்து வந்ததில் பல சவால்களை சந்தித்து வருகிறது. அதில், உத்தரவுகளை வீரர்கள் சரியாக புரிந்து கொள்ளாத இந்த விசயமும் அடங்கும்.

    • வடகொரியா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு அனுப்பியது.
    • குர்ஸ்க் எல்லையில் இருந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீதான ரஷியா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அந்த நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகின்றன.

    அதேபோல் நட்பு நாடான வடகொரியா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு அனுப்பியது. ரஷியா அந்த வீரர்களை உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள குர்ஸ்க் பிராந்திய எல்லை அருகே நிறுத்தியது.

    ஆனால் உக்ரைனின் தாக்குதல் மற்றும் மோசமான வானிலையை அவர்களால் தாக்குப்பிடித்து நிற்க முடியவில்லை. இதனால் சுமார் 4 ஆயிரம் வடகொரிய வீரர்கள் காயம் அடைந்தனர். எனவே குர்ஸ்க் எல்லையில் இருந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

    உக்ரைனின் சரமாரி தாக்குதலில் பலர் இறந்ததால் வடகொரியா வீரர்களை பின்வாங்கும் கட்டாயம் ரஷியாவுக்கு ஏற்பட்டு இருக்கலாம் என உக்ரைன் ராணுவ செய்தித்தொடர்பாளர் அலெக்சாண்டர் கிண்ட்ராடென்கோ தெரிவித்துள்ளார்.

    ×