என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண் பானை தண்ணீர்"

    • மண் பானையின் மேற்பரப்பில் காற்று வெளியேறுவதற்கான சிறிய துளைகள் இருக்கின்றன.
    • மண் பானையின் உள்ளே உள்ள தண்ணீர் மெதுவாக வெளியேறி காற்றில் ஆவியாகிறது.

    கோடை வெயிலுக்கு குளிர்ந்த நீரை குடிக்க விரும்புவோம். அந்த வகையில் மண் பானையில் குளிர்ந்த நீரை குடித்த அனுபவம் இருக்கிறதா?

    அப்படி குடிக்கிறபோது எந்தவித செயற்கை செயல்பாடும் இன்றி இயற்கையாக மண் பானையில் உள்ள நீர் எப்படி குளிர்ச்சியாக உள்ளது என்ற கேள்வி எழுந்திருக்கிறதா? வாருங்கள் அதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணத்தை அறிந்து கொள்வோம்.

    மண் பானையில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அதன் இயற்கையான வடிவமைப்பு ஆகும். மண் பானையின் மேற்பரப்பில் காற்று வெளியேறுவதற்கான சிறிய துளைகள் இருக்கின்றன. அதனால் பானையின் உள்ளே உள்ள தண்ணீர் மெதுவாக வெளியேறி காற்றில் ஆவியாகிறது. இந்த ஆவியாக்க செயல்முறையினால் பானையின் மேற்பரப்பில் இருந்து வெப்பம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் பானையின் உள்ளே இருக்கும் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சியாகிறது. இது 'ஆவியாக்கக் குளிர்ச்சி' என அழைக்கப்படுகிறது.

    மண்பானை ஒரு இயற்கை குளிரூட்டி. இது மின் சக்தி இல்லாமலே குளிர்ந்த தண்ணீரை வழங்கும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. அதை அருந்துவது உடலுக்கு ஆரோக்கியமானது.

    பிளாஸ்டிக் அல்லது உலோக பானைகளுடன் ஒப்பிடுகையில், மண் பானையில் தண்ணீர் எப்போதும் புதியதாகவும், சுவையாகவும் இருக்கும். எனவே மண் பானையில் தண்ணீர் குடிப்போம். இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!

    ×