என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை"

    • ரத்த சோகை தடுப்புக்கு உதவுகிறது.
    • கருவேப்பிலையில் உள்ள இரும்புசத்து மற்றும் போலிக் அமிலம் ஹீமோகுேளாபின் அளவை உயர்த்த உதவுகின்றன.

    கோடை வரப் போகின்றது வழக்கம் போல் வெயில் கொளுத்தும். நாம் வாடி வதங்கி வெயிலால் தவிப்போம். இது வருடம் தவறாது நடக்கும் நிகழ்வுதான். கோடைக் கால பராமரிப்பு, கோடைக்கால நோய்கள் என கோடையை சமாளிக்க பல வழிகளை பின்பற்றுவோம். நன்கு அறிந்தனவற்றினைக் கூட மீண்டும் ஞாபகப்படுத்தி செயல்படுத்துவோம். அந்த வகையில் உடலின் நீர் தன்மை வற்றாது இருக்கவும், கூடவே நீருடன் சில பொருட்களை பயன்படுத்தி உடலுக்குத் தேவையான சில தாதுக்கள் மற்றும் பல நன்மைகளைப் பெறும் வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.

    நமது உணவு முறையில் நீரே சிகிச்சை தன்மை கொண்டதாக முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. தினமும் 2 முதல் 3 லிட்டர் நீர் பருகுவது அவசியம் என வலியுறுத்தப்படுகின்றது. இத்துடன் இயற்கை மூலிகைகள், பழ சாறுகள் சேரும் போது அது மருந்தாக, ஊட்டச் சத்தாக பயன்படுகின்றது. பல தலைமுறைகளாக நம் நாட்டில் பயன்படுத்தப்படும் முறைகள் இவை. குறைந்த செலவு, நிறைந்த பலன் என்ற முறையிலே பலன் தருபவை. பாதுகாப்பானவை. எளிமையானவை. ஆரோக்கியமானவை.

    எலுமிச்சை நீர்- ஒரு கிளாஸ் வெகு வெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம். சிலர் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்வர்.

    எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம், பிளாவரைய்டுகள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன.

    நன்மைகள்- செரிமானத்தினை மேம்படுத்தும். அஜீரணம், வயிற்று வீக்கம் போன்ற பிரச்சினைகள் குறைய உதவுகிறது.

    * நோய் எதிர்ப்பு சக்தி கூடுகின்றது. சளி, இருமல், தொண்டை வலி என்பவர்களுக்கு சிறந்த பலன் அளிக்கும்.

    * உடல் நச்சுகளை நீக்கும். கல்லீரல் செயல்பாட்டினை ஊக்குவித்து உடலில் சேரும். நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும்.

    கமலி ஸ்ரீபால்


     

    * சரும ஆரோக்கியம் கூடும், முதுமை கட்டுப்படும், கரும் புள்ளிகள் நன்கு குறையும்.

    உடல் எடை கட்டுப்பாடு- எலுமிச்சை நீர் குடிப்பதால் பசி உணர்வு கட்டுப்படும். அதிக கலோரி உணவுகள் தவிர்க்க உதவுகின்றது.

    சீரக நீர்- ஒரு டீஸ்பூன் சீரகத்தினை நன்கு கழுவி 2 டம்ளர் நீரில் இரவு முழுவதும் நன்கு ஊற வைக்கவும். காலையில் இதனை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

    சீரகத்தின் மருத்துவத்தன்மை- சீரகம் ஒரு கார்மினேட்டிவ் வாயுவை வெளியேற்றும் என ஆயுர்வேதம் கூறுகின்றது.

    * சீரக நீர் குடிப்பதால் வயிற்றில் தேங்கிய வாயு வெளியேறி வயிற்று வலி, வீக்கம் குறைகின்றது.

    * ரத்த சர்க்கரை கட்டுப்பாடுடன் இருக்க உதவுகிறது- சீரகம் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றது. நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் ஆலோசனை பெற்று குடிக்கலாம்.

    * ரத்த சோகை தடுப்புக்கு உதவுகிறது. சீரகத்தில் இரும்பு சத்து உள்ளது. தொடர்ந்து சீரக நீர் குடிப்பது ஹீமோகுளோபின் அளவை உயர்த்த உதவும்.

    * மகப்பேறு கால நன்மைகள்- பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களுக்கு சீரக நீர் பால் சுரப்பை அதிகரிக்கவும், உடல் சோர்வை குறைக்கவும் பயன்படுகின்றது.

    * உடல் அழற்சி குறைப்பு ஏற்படும். மூட்டு வலி, உடல் வலிகளை குறைக்க உதவுகின்றது.

    கொத்தமல்லி நீர்- தனியா விதைகளை கழுவி, நன்கு ஊற வைத்து பின் கொதிக்க வைத்து வடிக்கட்டி குடிக்கலாம்.

    * சீரணத்திற்கு உதவுகின்றது. இதில் உள்ள என்சைகள் அஜீரணத்தை சீர் செய்யும். வயிறு உப்பிசம், வாயு நீங்கும். ஆரோக்கியமான குடல் உருவாகும்.

    * ரத்தத்தில் உயர் சர்க்கரை ஏற்றத்தினை கட்டுப்படுத்தும்.

    * நச்சுகளை நீக்கும்- கல்லீரல், சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும்.

     

    * சரும ஆரோக்கியம்- சரும தடிப்பு, பரு, சிகப்பு திட்டுகள் நீங்கும்.

    * வைட்டமின் ஏ, சி, கே. சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டும். சிறுநீர் போக்கில் எரிச்சலுக்கு துணை மருந்தாக உதவும்.

    * உடலில் அதிக நீர் தேங்காது இருக்கச் செய்யும்.

    * வயிறு உப்பிசம், சதை பிடிப்புகள் நீங்கும்.

    உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று பிறகு எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்களும் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.

    வெந்தய நீர்- வெந்தயம் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து நன்கு கழுவி ஒரு கிளாஸ் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் குடிக்கவும். பொதுவில் அனைவருமே மருத்துவர் ஆலோசனை பெற்று இதனை எடுத்துக் கொள்வது அவசியம்.

    * வயிறு உப்பிசம், மலச்சிக்கல் நீங்கும்.

    * சர்க்கரை நோய் பிரிவு 2 பாதிப்பு உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுப்படும்.

    மாத்திரை, ஊசி என எடுத்துக் கொள்பவர்கள், சாதாரண உடல் நலத்துடன் இருப்பவர்கள் இரு பிரிவுமே சர்க்கரை ரத்தத்தில் அதிக அளவு குறையாமல் இருக்க மருத்துவர் ஆலோசனை அவசியம் பெற வேண்டும்.

    * கொழுப்பு சத்தினைக் குறைக்கும். இருதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

    * மூட்டு வலி குறையும் என ஆயுர்வேதம் குறிப்பிடுகின்றது.

    * ஹார்மோன் சீராக இயங்க உதவும். மாதவிடாய் கால பிரச்சினைகள், மாத விலக்கு நிற்கும் கால பிரச்சினைகளை குறைக்க உதவும்.

    * சருமம், முடி ஊட்டம் பெறும்.

    கருவேப்பிலை சாறு- நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் கருவேப்பிலை ஒரு மூலிகை என்றே ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் குறிப்பிடுகின்றனர். இதனை சாறாக எடுத்துக் கொள்ளும் போது சிறந்த மருத்துவ பலன்களைப் பெறுகின்றோம். சர்க்கரை நோய், செரிமானக் கோளாறு, முடி உதிர்வு போன்றவைகளுக்கு கருவேப்பிலை சாறு சிறந்த பயன் அளிக்கின்றது.

    புதிய பறித்த கருவேப்பிலையினை சிறிதளவு நீர் விட்டு அரைத்து வடிகட்டி சுமார் 20 மி.லி. அளவு எடுத்துக் கொள்வது வீட்டு வைத்தியமாக பரிந்துரைக்கப்படுகின்றது.

    கருவேப்பிலை சாறு இன்சுலின் சுரப்பதனையும், அதன் செயல் திறனையும் மேம்படுத்த உதவுகின்றது. இதனால் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவுகின்றது. நீரிழிவு நோயாளிகள் இதனை துணை மருந்தாக பயன்படுத்தலாம்.

    'செரிமானத்தினை மேம்படுத்தும்- அஜீரணம், வயிறு வீக்கம், வாந்தி உணர்வு போன்றவை குறைய உதவுகின்றது. கல்லீரல் செயல்பாட்டினை ஊக்குவித்து பித்த சுரப்பை போக்குகின்றது.

    கருவேப்பிலையில் உள்ள இரும்புசத்து மற்றும் போலிக் அமிலம் ஹீமோகுேளாபின் அளவை உயர்த்த உதவுகின்றன. முடி ஆரோக்கியத்திற்கு, முடிவேர் வலுப்படுதலுக்கு கருவேப்பிலை சாறு உதவுகின்றது. உடலில் தேவையில்லாத கொழுப்பு நீங்குகின்றது. கல்லீரலை பாதுகாக்கின்றது. மதுபானம் அல்லது மருந்துகளால் ஏற்படும் கல்லீரல் அலற்சியை குறைக்க உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி கூடுகின்றது.

    கவனிக்க வேண்டியவை:

    கருவேப்பிலை சாறு அதிகம் எடுத்துக் கொண்டால் வயிற்று எரிச்சல் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இதனை தவிர்ப்பது நல்லது. இது மருந்தல்ல. சிகிச்சை முறையாக பயன்படுத்தக் கூடாது. இந்த தகவல்கள் ஆதாரத்துடன் சேகரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன.

    புதினா சாறு: இது நம் நாட்டு சமையலில் அதிகம் இடம் பெறுவது தான். இருப்பினும் சாறு குடிக்கும் பொழுது இதன் பலன்கள் கூடுதலாக இருக்கும். 30 மிலி அளவு சாற்றினை எடுத்துக் கொள்ளலாம். புதினாவில் உள்ள முக்கிய ஊட்ட சத்துக்கள்: வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஈ சத்து நிறைந்தது. இரும்பு சத்து, கால்சியம், மெந்தால் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகமாக உள்ளன.

    நன்மைகள்: புதினா சாறு, செரிமானத்தினை மேம்படுத்தும். அஜீரணம், வயிற்று எரிச்சல், வாந்தி உணர்வு இவற்றினை குறைக்கும். அசிடிடி குறையும். கல்லீரல் செயல் பாட்டினை மேம்படுத்தும். மூக்கடைப்பு, சளி, இருமல் குறைக்கும். இதனால் சுவாசம் எளிதாகும். தலைவலி, மனஅழுத்தம், சோர்வு, இவற்றினைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

    கவனிக்க வேண்டியவை: அதிக அளவில் குடித்தால் வயிற்று எரிச்சல் ஏற்படும். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்த்து விடலாம். கர்ப்பிணி பெண்களும் தவிர்த்து விடலாம். நீண்ட நாள் நோயாளிகள் மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மோர்: மோர் என்பது தயிரை நீருடன் கலந்து வெண்ணெய் பிரித்து தயாரிக்கப்படும். பாரம்பரிய தயிரை விடவும் கூட மோர் நன்மை கொண்டது. மோர் குறைந்த கொழுப்பு, நிறைந்த கலோரி சத்து கொண்டது. நன்மை தரும் புரோபயாடிக் பாக்டிரீயா கொண்டது. கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி12, பி2, மற்றும் சிறிது புரதம் கொண்டது. குடல்நலம் காக்கப்படுகின்றது. அஜீரணம், வயிற்று வீக்கம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகள் குறைக்கின்றன. சோர்வு, நீர் இழப்பு தடுக்கப்படுகின்றது. அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் குறைகின்றது. மோரில் உள்ள கால்சியம் எலும்பு வலிமை பெற மற்றும் எலும்பு தளர்வு தடுப்பு ஆகியவற்றிற்கு உதவுகின்றன. பசியை கட்டுப்படுத்தவும் சர்க்கரை பானங்களுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

    கவனிக்க வேண்டியவை: சிலருக்கு சளி அதிகரிப்பு, மூக்கடைப்பு ஏற்படலாம். வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஏற்படலாம். இரவு நேரத்தில் மோர் தவிர்க்க வேண்டும். அதிகமாக மோர் குடித்தால் வயிறு கனத்த உணர்வு. குடல் இயக்கம் பாதிப்பு ஏற்படலாம். உப்பு அதிகம் இருந்தால் தாதுச் சமநிலை பாதிப்பு ஏற்படலாம். காய்ச்சல் மற்றும் குடல் தொற்று உள்ள போது மோரை தவிர்க்க வேண்டும். மோர் புதிய தயிரில் தயாரித்து நல்ல அளவில் நீர் சேர்க்க வேண்டும். இஞ்சி, சீரகம், கருவேப்பிலை சேர்த்து பகலில் அருந்தலாம். இப்படி பல விதங்களில் உடலை, குடலை பராமரிக்க முடியும். எளிமையான இந்த பானங்களை அருந்தலாமே.

    • கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 150 டன் மாம்பழங்கள் வருகின்றன.
    • தரம் குறைந்த மாம்பழங்கள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.

    சென்னை:

    முக்கனிகளில் முதன்மையானதும், பழங்களின் அரசன் என்றும் போற்றப்படும் மாம்பழம் சீசன் களைகட்டத் தொடங்கி உள்ளது. கோடை காலம் என்றாலே மாம்பழம் சீசன் அதிகரித்து விற்பனை அமோகமாக காணப்படும். அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழ விற்பனை விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

    மாம்பழம் சீசன் கோடையில் அதிகரித்தாலும், ஜனவரி மாதம் முதலே சேலத்தில் இருந்து மல்கோவா, அல்போன்சா, இமாம்பசா, களப்பாடி போன்ற மாம்பழங்கள் வரத்து தொடங்கிவிடும். அடுத்தபடியாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கேரளாவில் இருந்து பங்கனப் பள்ளி, செந்தூரா போன்ற மாம்பழங்கள் வரத்து அதிகரித்து விடும்.

    அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், தென்காசி, தேனி, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இருந்து நாட்டு மாம்பழங்கள் வரத் தொடங்கிவிடும். இதனால் சீசன் களைகட்டும்.

    மே மாதத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து மல்லிகா, ருமானி, ஜவாரி மாம்பழங்கள் வரத் தொடங்கும். அப்போது மாம்பழங்கள் வரத்து அதிகரித்து மாம்பழங்களின் விலை இன்னும் குறையும். ஜூன், ஜூலை மாதம் வரை மாம்பழம் சீசன் நீட்டிக்கும்.

    இந்த ஆண்டு சேலம் மாவட்டப் பகுதிகளில் மாம்பழம் விளைச்சல் வழக்கத்தைவிட 10 சதவீதம் அதிகரித்து உள்ளதால் மாம்பழங்கள் வரத்து அதிகமாக காணப்படுகிறது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 150 டன் மாம்பழங்கள் வருகின்றன.

    வரும் மே, ஜூன் மாதங்களில் இந்த மாம்பழம் வரத்தானது 250 டன் முதல் 350 டன் வரை அதிகரிக்கும். முன்பெல்லாம் பெரிய லாரிகளில் வந்த மாம்பழங்கள் தற்போது டெம்போக்களில் அதிக அளவில் வருகின்றன.

    கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகும் மாம்பழங்களின் விலை நிலவரம் குறித்து மாம்பழ வியாபாரி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    அல்போன்சா மாம்பழம் மொத்தமாக கிலோ ரூ.120 -க்கும், சில்லரைக்கு கிலோ ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பங்கனப்பள்ளி கிலோ ரூ.90-க்கும் (மொத்தம்), ரூ.150-க்கும் (சில்லரை) விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போன்று செந்தூரா, இமாம்பசந்த் மாம்பழங்கள் முறையே ரூ.60, ரூ.150 மொத்தமாகவும், ரூ.80, ரூ.180-க்கு சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது முதல் ரக மாம்பழங்களின் விலை ஆகும். இதைவிட தரம் குறைந்த மாம்பழங்கள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மாம்பழங்களை உற்சாகமாக வாங்கிச் செல்கின்றனர்.

    • கோவில் நிர்வாகம் ஏற்பாடு
    • கோவிலுக்கு தினமும்ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும்வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும், பக்தர்களும்வந்துஅம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும்ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும்வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும், பக்தர்களும்வந்துஅம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். பக்தர்களின் தரிசனத்துக்காக இந்த கோவில் நடைதினமும் அதிகாலை4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுகிறது.

    அதேபோலமாலை4மணிக்குநடைதிறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்குஅடைக்கப்படுகிறது.தற்போது கோடைகாலம்என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குசாமி கும்பிட வரும் பக்தர்கள் வெயில் வெப்பத்தினால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    இதனைகருத்தில் கொண்டுகன்னியாகுமரி பகவதிஅம்மன்கோவிலுக்கு சாமிகும்பிட வரும் பக்தர்கள் வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காககோடைகாலம்முடியும்வரை தினமும்பக்தர்களுக்குமோர்தானம்வழங்க தமிழகஅரசின்இந்து சமயஅறநிலைய ஆட்சித்துறை உத்தரவிட்டுஉ ள்ளது.

    இதைத்தொடர்ந்துகுமரி மாவட்ட திருக்கோவில்களின்இணைஆணையர்ஞான சேகர்அறிவுரையின்பேரில் கன்னியாகுமரிபகவதி அம்மன் கோவில்மேலாளர் ஆனந்த்ஏற்பாட்டின்பேரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குபகல் நேரங்களில்சாமிகும்பிட வரும்பக்தர்களுக்குமோர் தானம்வழங்கப்பட்டுவருகிறது.

    இதைத்தொடர்ந்து தினமும்இந்த கோவிலுக்கு சாமிகும்பிடவரும்ஏராளமா ன பக்தர்கள் மோர்வாங்கி அருந்திவிட்டு செல்கி றார்கள்.

    இத ற்காகதினமும்10 லிட்டர்மோர்பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஏப்ரல், மே ஆகிய2மாதகாலங்களும் இந்த மோர்தான ம் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

    • குமாரபாளை யம் ஆனங்கூர் பிரிவு சாலையில் சுமை தூக்குவோர் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா நடைபெற்றது.
    • நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்கள், இளநீர் ஆகிய வற்றை விநியோகித்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. பொது மக்கள் வெப்பத்தின் தாக்கு தலில் இருந்து சமாளிக்க இளநீர், தர்பூசணி பழங்கள், குளிர்பானங்கள் ஆகிய வற்றை உண்டு வருகின்றனர்.

    கோடை வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பொதுமக்களுக்கு உதவும் வகையில், பொதுமக்கள் தாகம் தீர்க்க குமாரபாளை யம் ஆனங்கூர் பிரிவு சாலையில் சுமை தூக்குவோர் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா நடைபெற்றது.

    நகராட்சித்தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்கள், இளநீர் ஆகிய வற்றை விநியோகித்தார். இதில் சங்க நிர்வாகிகள், கவுன்சிலர் ஜேம்ஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • கடற்கரையில் மாலை நேரங்களில் இதமான குளிர் காற்று வீசுகிறது.
    • சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    தமிழ் புத்தாண்டை முன்னிட் டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டியும் கன்னியாகுமரியில் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான இறுதி ஆண்டு பொதுத்தேர்வு முடிவடைத் துள்ளதை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த வண்ண மாக உள்ளனர்.

    முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். அவர்கள் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். அதன் பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவி லில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறை யில் நீண்ட வரிசையில் காத்தி ருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    மாலை நேரங்களில் கடற்க ரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்க ரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ண மாக உள்ளனர். இதில் ஏராள மான சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இத னால் விடுமுறை நாளானஇன்று சுற்றுலா தலங்கள் களை கட்டிஉள் ளது. இந்த சுற்றுலா தலங் களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரைப் பகுதி யில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்புகுழும போலீ சாரும் தீவிர கண் காணிப்பு பணியில்ஈடுபட்டு வந்தனர்.

    • ஏழு குளங்களில் பெரிய குளம் 11.55 அடி நீர்மட்ட உயரமும், 70.56 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவும் உடையதாகும்.
    • அடுத்த ஆண்டுக்கு அரசு உத்தரவு அடிப்படையில் நீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உடுமலை:

    திருமூர்த்தி அணையிலிருந்து தளி வாய்க்கால் வாயிலாக ஏழு குளம் மற்றும் வலையபாளையம் குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக நேரடியாக 2,700 ஏக்கர் நிலங்களும், சுற்றுப்புற கிராமங்களின் நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளது.

    ஏழு குளங்களில் பெரிய குளம் 11.55 அடி நீர்மட்ட உயரமும், 70.56 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு உடையதாகும். இக்குளத்தில் 9.60 அடி நீர் மட்டமும், 57.10 மில்லியன் கன அடி நீர் இருப்பும் உள்ளது.

    செங்குளம் 10 அடி நீர் மட்ட உயரமும், 12.74 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவும் கொண்டதாகும். இதில் 8.30 அடி நீர் மட்டமும், 9.76 மில்லியன் கன அடி நீர் இருப்பும் உள்ளது. ஒட்டுக்குளம் 10 அடி நீர் மட்ட உயரம், 14.11 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு உடையதாகும். இங்கு 9.20 அடி நீர் மட்டமும், 10.80 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.செட்டிகுளம் 7.5 நீர் மட்ட உயரம், 7.93 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். இங்கு 6.70 அடி நீர் மட்டமும், 6.14 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

    தினைக்குளம் 9.25 அடி நீர் மட்ட உயரம், நீர் கொள்ளளவு 7.23 மில்லியன் கன அடியாகும். இங்கு 8.80 அடி நீர் மட்டமும், 6.92 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கரிசல் குளம் 7.65 அடி நீர் மட்டம், 2.92 மில்லியன் கன அடி நீர் இருப்பு கொண்டது. இங்கு 7.50 அடி நீர் மட்டமும், 2.90 மில்லியன் கன அடி நீர் இருப்பும் உள்ளது. அம்மாபட்டி குளம் 4.50 அடி நீர் மட்டம், 1.76 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு உடையதாகும். 3.50 அடி நீர் மட்டமும், 1.60 மில்லியன் கன அடி நீர் இருப்பும் காணப்படுகிறது.வலையபாளையம் குளம் 10.33 அடி நீர் மட்டமும், நீர் கொள்ளளவு 7.63 மில்லியன் கன அடி உடையதாகும். இங்கு 4.10 அடி நீர் மட்டமும், 3.09 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த ஆகஸ்டு முதல் விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில் நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கு அரசு உத்தரவு அடிப்படையில் நீர் வழங்கப்படும் என்றனர். 

    • சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
    • கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் Sk23 படத்தில் நடித்து வருகிறார். கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் துரைசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார்.

    நடிப்பது மட்டுமல்லாமல் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.

    சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் அடுத்ததாக எஸ்.கே ப்ரொடக்ஷன் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    'குரங்கு பெடல்' படத்தை அடுத்து எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குரங்கு பெடல் திரைப்படத்தில் காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்
    • இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் Sk23 படத்தில் நடித்து வருகிறார். கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் துரைசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார்.

    நடிப்பது மட்டுமல்லாமல் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.

    சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் அடுத்ததாக எஸ்.கே ப்ரொடக்ஷன் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    'குரங்கு பெடல்' படத்தை அடுத்து எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் இப்படம் மே 3 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அப்படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன் பதிவிட்டுள்ளார். அதில், "1980களின் ஒரு கோடைக்காலம். உங்கள் குழந்தைப்பருவத்துக்கு சைக்கிளின் வழி அழைத்துச்செல்ல மே 3ஆம் தேதி திரையரங்கத்துக்கு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கி இருப்பதால், பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது.
    • நேற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு சென்னை தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குனர் நேற்று அறிவுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில் தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கி இருப்பதால், பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்தவகையில் நேற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கும்படி, இணை இயக்குனர்களுக்கு, தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

    • பிற மாவட்டங்களில் மழை பெய்வதால் சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.
    • சென்னை எழும்பூர், சேத்துபட்டு, அரும்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேருள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    கடந்த சில நாட்களாகவே சென்னையில் மந்தமான வானிலையும் , பிற மாவட்டங்களில் மழை பெய்வதால் சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சென்னையில் பல்வேறு இடங்களில் கோடை மழை கொட்டி தீர்த்தது.

    சென்னை எழும்பூர், சேத்துபட்டு, அரும்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேருள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கோடை வெயிலில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு இந்த கோடை மழை ஒருவித மன நிம்மதியை கொடுத்துள்ளது. காலை 7 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    • டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அங்கு இருக்கும் டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • இதனால் பூங்காவின் நிர்வாகம் அங்கு இருக்கும் 1300 விலங்குகளுக்கும் வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    இந்தாண்டு கோடைக்காலம் மிகவும் கொடுமையாக இருக்கிறது. மக்கள் வெயிலில் வாடி வதங்குகின்றனர். மனிதர்களாலே இந்த வெயிலின் சூட்டை தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாயில்லா ஜீவங்கள் என்ன அவஸ்தை படுகின்றனர் என்பதை சொல்லவா வேண்டும்.

    டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அங்கு இருக்கும் டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்காவின் நிர்வாகம் அங்கு இருக்கும் 1300 விலங்குகளுக்கும் வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    கோடை வெப்பத்தில் இருந்து தப்பிபதற்கு ஃப்ரூட் ஐஸ் பால், ஐஸ் கிரீம்உணவாக தருகின்றனர் தண்ணீரை சிபிரிங்க்லர் முறையில் விலங்குகள் மீது தெளிக்கின்றனர். விலங்களுக்கு சாப்பாட்டு அளவை குறைத்து நீர்சத்து மிகுந்த உணவுகளையும் , நீர் நிறைந்த ஆகாரத்தையும் கொடுக்கின்றனர்.

     

    ஒவ்வொரு விலங்களுக்கு ஏற்றார்போல இந்த பணிகளை செய்து வருகின்றனர். விலங்குகள் இருக்கும் இடத்தில் ஏர் கூலர்கல்களும் வைத்துள்ளனர்.

    • இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.
    • சமீபத்தில் 'குரங்கு பெடல்' படத்தை எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்

    நடிப்பது மட்டுமல்லாமல் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.

    சமீபத்தில் 'குரங்கு பெடல்' படத்தை  எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படம் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் குரங்கு பெடல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா ஒடிடி தளம் வாங்கியுள்ளது. இப்படம் வரும் ஜூன்14 முதல் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×