என் மலர்
நீங்கள் தேடியது "AC"
- பாம்பு பிடிக்கும் வாலிபர் வந்து ஏசிக்குள் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தார்.
- ஏ.சி.யில் பாம்பு புகுந்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது என்று கடையின் உரிமையாளர் கூறினார்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி பஸ் நிலையத்தின் அருகே மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.
இந்த கடையில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை கடையில் அதன் உரிமையாளர் வேலை செய்து கொண்டிருந்தார்.
ஏசியை இயக்குவதற்காக சுவிட்ச் போடுவதற்காக சென்றார். அப்போது கடையில் பணியாற்றும் ஊழியர்கள் பாம்பு ஒன்று ஏசியில் இருந்து வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் கடையில் இருந்து அனைவரும் கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்தனர்.
இதுகுறித்து பாம்பு பிடிக்கும் இளைஞருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வாலிபர் அங்கு வந்து ஏசிக்குள் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தார். பிடிப்பட்ட பாம்பை வனப்பகுதியில் விட்டார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏ.சி.யில் பாம்பு புகுந்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது என்று கடையின் உரிமையாளர் கூறினார்.
எந்தெந்த நேரத்தில் கார் ஏசியை எவ்வாறு இயக்குவது குறித்த சில வழிகாட்டு முறைகளை தொடர்ந்து பார்ப்போம்.
கோடைக் காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும் போது கார் ஏ.சி. பயன்படுத்துவதில் கவனம் தேவை. வெயிலில் நீண்ட நேரம் நிறுத்தியிருந்த காரை ஸ்டார்ட் செய்தவுடன் ஏ.சி.யை ஆன் செய்தால், உடனே ஜன்னல் கதவுகளை மூடக்கூடாது. காரினுள் இருக்கும் வெப்பம் வெளியேறும் வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.

ஏனெனில் காரில் உள்ள பிளாஸ்டிக் பாகங்கள் ‘பென்சீன்’ எனப்படும் நஞ்சை உமிழ்கின்றன. இது புற்று நோயை ஏற்படுத்தக்கூடியது. இதனால் ஏ.சி.யை ஆன் செய்து காரினுள் இருக்கும் வெப்பக்காற்று வெளியேறும் வரை காத்திருந்து, பிறகு ஜன்னலை மூடி பயணத்தைத் தொடரலாம்.
இதேபோல நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரில் ஏ.சி.யை போட்டு தூங்கக்கூடாது. ஏனெனில் கார் என்ஜின் ஓடும்போது கார்பன் மோனாக்ஸைடு வெளியேறும். இது காருக்குள் பரவி உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.
மேனுவல் ஏசி காராக இருந்தால், ஏசி மெஷினை ஆன் செய்தவுடன் விசிறியின் வேகத்தை அதிகமாக வைக்கவும். அதேவேளையில், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதி இருந்தால் ஆரம்பத்தில் ஃபேன் வேகத்தை குறைவாக வைப்பது நல்லது. பின்னர், ஃபேன் வேகத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவும். #automobile
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரவை விட செலவு கூடுதலாக உள்ளதால் அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. சேவை நோக்குடன் இயக்கப்படுவதால் நஷ்டம் தவிர்க்க முடியாததாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன.
இதற்கிடையே தனியாருக்கு இணையாக நவீனங்கள் புகுத்தப்படாமல் இருப்பதும் போக்குவரத்து கழக நஷ்டத்துக்கு காரணியாக உள்ளது. தனியார் மூலம் படுக்கை வசதியுடன் குளு, குளு ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசு போக்குவரத்து கழகம் மூலம் படுக்கை வசதியுடன் கூடிய பஸ் இயக்கப்பட்டு பின்னர் அது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மீண்டும் தற்போது படுக்கை வசதியுடன் கூடிய குளு,குளு ஏ.சி. பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழு மூச்சாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் 2,000 புதிய பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.
அதில் 100 பஸ்கள் படுக்கை வசதியுடன் 3 வகையாக தயாராகின்றன. முழுக்க முழுக்க ஏ.சி. மற்றும் படுக்கை வசதியுடன் ஒரு வகையும், கீழே சாய்வாக உட்காரும் சீட்டுகள், மேலே படுக்கை வசதியுடன் இன்னொரு வகையும், படுக்கை வசதி மற்றும் கழிப்பறை வசதியுடன் மற்றொரு வகையும் என 100 பஸ்கள் விதவிதமாக தயாராகின்றன. இவை அனைத்தும் நவீன முறையில் வடிவமைக்கப்படுகிறது.

படுக்கை வசதி, ஏ.சி. வசதியுடன் தயாராகும் பஸ்கள், சாதாரண பஸ்கள் அனைத்தும் இன்னும் 3 மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதுவும் நிச்சயம் நிறைவேறும். தனியாருக்கு இணையாக இல்லாமல் அதையும் மிஞ்சும் வகையில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #MRVijayabaskar #DeluxeBus