search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    ஏசி இல்லாமலும் வீட்டை குளுமையாக்கலாம்!
    X

    ஏசி இல்லாமலும் வீட்டை குளுமையாக்கலாம்!

    • வெயில் நேரத்தில் வெளியே செல்ல முடியாது.
    • வீட்டிலேயே இருக்கலாம் என்றாலும் புழுக்கம் தாள முடியவில்லை.

    இந்த கத்திரி வெயில் காலம் அனைவரையும் வதைத்து வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வெயில் மாலை வரை மக்களை திணறடிக்கிறது.

    வெயில் நேரத்தில் வெளியே செல்ல முடியாது. வீட்டிலேயே இருக்கலாம் என்றாலும் புழுக்கம் தாள முடியவில்லை. ஏ.சி. வாங்கும் அளவுக்கு வசதி உள்ளவர்கள் அதன்மூலம் இளைப்பாறுகிறார்கள். ஆனால் ஏ.சி. வாங்க முடியாதவர்களின் பாடு திண்டாட்டம் தான். சரி ஏ.சி. இல்லாட்மல் வீட்டை குளுமையாக வைத்திருக்க முடியாதா என்றால் நிச்சயமாக முடியும். அதற்கான வழிகள் இதோ....

    ஏ.சி. இல்லாத வீடுகளில் மின்விசிறி இருக்கும். மின் விசிறியை பயன்படுத்தி அறையை குளிரவைக்க முடியும். மின் விசிறியிலும் கூரையை ஒட்டி உள்ள சீலிங் ஃபேனை விட டேபிள் ஃபேன் அதிக குளிர்ந்த காற்றைத் தரும்.

    இந்த மின்விசிறிகள் மட்டுமின்றி, எக்சாஸ்ட் மின் விசிறிகளையும் பயன்படுத்தலாம். சமையலறை போன்ற வெப்பமான இடங்களில் இருந்து வெப்பத்தை வெளியேற்ற இவை உதவும். ஏ.சி.இல்லாமல் அறையை ஓரளவு குளுமையாக வைத்திருக்க எக்சாஸ்ட் ஃபேன்கள் கைகொடுக்கும்.

    திரைச்சீலைகள் மூலம், சூரியக் கதிர்கள் நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்கலாம் . வெளிர்நிற திரைச்சீலைகளை பயன்படுத்துவது சூரிய ஒளியால் ஏற்படும் வெப்பத்தை சுமார் 40 சதவீதம் அளவுக்கு குறைக்க உதவும். வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் வண்ண ஜன்னல் கண்ணாடிகளும் ஓரளவுக்கு அறையின் வெப்பநிலை உயர்வதைத் தடுக்க உதவும்.

    இயற்கையான காற்றோட்டத்துக்கான வழிகளைச் செய்யலாம். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில். குளிர்ந்த காற்று வீட்டுக்குள் வரும் வகையில் ஜன்னல்களைத் திறந்துவைக்கலாம். ஒரே நேரத்தில் பல ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறப்பதன் மூலம் காற்றோட்டத்துக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் கதவு, ஜன்னல்களை திறந்துவைக்கும் போது. பாதுகாப்பு விஷயத்திலும் கவனமாக இருங்கள்.

    அறையில் குளிர்ந்த நீரைத் தெளித்து பிறகு மின் விசிறியை ஓடவிடுங்கள். அப்போது தரையில் தெளிக்கப்பட்ட நீர் ஆவியாகி, அறைக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். இது கோடை காலத்தில் உஷ்ணத்தை வெல்ல ஏ.சி. இல்லாவிட்டாலும், கொஞ்சம் செலவு செய்ய முடியும் என்றால், ஏர் கூலர் ஒன்றை வாங்கலாம்.

    சிறிய இடங்களிலும் இதை பயன்படுத்த முடியும். விரைவாக குளிர்ச்சியைக் கொடுப்பதில் இது சிறப்பாக செயல்படும். தற்போது சிறிய, குறைந்த விலையிலான ஏர் கூலர்கள் கிடைக்கின்றன.

    அறையில் சில அழகுத் தாவரங்களை வைத்து வளர்க்கலாம். அவை வீட்டை குளிர்விக்க உதவுகின்றன. ஏனெனில் அவை சுவாசிக்கும்போது சுற்றியுள்ள காற்றைக் குளிர்விக்கின்றன, சுத்திகரிக்கவும் செய்கின்றன. நாம் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனையும் கொடுக்கின்றன.

    வீட்டைச் சுற்றிலும் இடம் இருந்தால் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம்.

    பொதுவாக, அதிக வெப்பத்தை உமிழும் எதையும் செய்யாமல் இருப்பதும் அறை வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். வீட்டில் குண்டு பல்புகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து எல்.ஈ.டி. விளக்குகளை பயன்படுத்தலாம். இதுபோன்ற செயல்கள் மூலம், வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து. குளுமையாக வைத்திருக்கலாம்.

    Next Story
    ×