ஹரியானா ரெயிலில் 2 அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி இணைப்பு

ஏப்ரல் 5 முதல் 26 வரை இரண்டு அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது. கோவை- ஹிசார் (22476) அதிவிரைவு ரெயில் வாரம் தோறும் சனிக்கிழமை இயக்கப்படுகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

ஹரியானா மாநிலம் ஹிசார் - கோவை இடையேயான அதிவிரைவு ெரயிலில் 2 அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுவதாக தெற்கு ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ெரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஹரியானா மாநிலம் ஹிசார் - கோவை (22475) அதிவிரைவு ரெயில், வாரம் தோறும் புதன்கிழமை இயக்கப்படுகிறது. ஏப்ரல் 5 முதல் 26 வரை இரண்டு அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது. மறுமார்க்கத்தில் கோவை- ஹிசார் (22476) அதிவிரைவு ரெயில் வாரம் தோறும் சனிக்கிழமை இயக்கப்படுகிறது. ஏப்ரல் 8 முதல் 29 வரை இரண்டு அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com