search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koyambedu"

    • பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்
    • இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

    புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணமலை. திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி. நகார்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28/03/2024 (வியாழக் கிழமை) அன்று 605 பேருந்துகளும் 29/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 300 பேருந்துகளும். 30/03/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம்.
    • எந்த ஆம்னி பேருந்தும் இயங்கக்கூடாது.

    சென்னை கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில் ஆம்னி பேருந்து பணிமனைகளை பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கோயம்பேடு மட்டுமின்றி போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தும் இயங்கக்கூடாது.

    ஆன்லைன் மற்றும் மொபைல் செயலிகளில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி, இறக்க வேறு இடங்களை குறிப்பிடக்கூடாது. 

    • சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி.
    • பயணிகள் மட்டுமின்றி தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பேருந்து முனையத்திலிருந்துதான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது.

    மனுவில், பயணிகள் மட்டுமின்றி தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றம் முன் வந்தது. இதில், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    மேலும் இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையர், நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சென்னை மாநகரில் தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
    • பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோயம்பேட்டில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட விருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

    கோயம்பேடு பஸ் நிலையத்தின் மொத்தப்பரப்பு 36 ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் 6.8 ஏக்கர், கோயம்பேடு சந்தைப் பூங்கா 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர் நிலம் கிடைக்கும். அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.13,200 கோடி ஆகும்.


    இது அபுதாபி நிறுவனம் தமிழகத்தில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ.3500 கோடி முதலீட்டை விட 4 மடங்கு அதிகம் ஆகும். இவ்வளவு அதிக மதிப்புள்ள மக்களுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடி யாது. மாறாக அந்த நிலத்தை பூங்காவாக மாற்றுவதே சரியாகும்.

    சென்னை மாநகரில் தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய்கள், அதீத உடல்பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் உடலுழைப்பு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் பூங்காக்கள் தேவை.

    எனவே, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், சந்தைப் பூங்கா, கூடுதல் நிலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

     இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை கோயம்பேட்டில் குறுங்காலீஸ்வரர் ஆலயம் உள்ளது.
    • இங்கு பல ரிஷிகள் முக்தி அடைந்துள்ளனர்.

    சென்னை கோயம்பேட்டில் குறுங்காலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது பழமையான ஒன்றாகும். ராம-ராவண யுத்தத்திற்குப் பின், சீதை, ராமனை பிரி்துக் காட்டுக்குச்சென்றாள். அங்கு அவளுக்கு லவ, குசன் பிறந்தனர். அவர்கள் பெரியவர்கள் ஆகி, வால்மீகி முனிவரோடு, தென்னாடு வந்த போது, கோயம்பேடு வந்தனர்.

    இது கோசலபுரி, கோனசநகர், கோயம்பீடு எனப்பட்டது. கோ-பசு, அயம், இரும்பு, பீடு வலிமை, பசுக்களை இரும்பு கவசம்போல் வலிமையுடன் காக்கும் இடம் இது என்பதால் இப்பெயர் அமைந்தது. இங்கு இருந்த ஆதரவற்ற பசுக்களை லவ, குசர்கள், வால்மீகி உத்தரவுப்படி காப்பாற்றியதாக சொல்லப்படுகிறது.

    இங்கு பல ரிஷிகள் முக்தி அடைந்துள்ளனர். ஒரு சமயம் நந்தியின் கர்வமும், இங்கு தான் அடக்கப்பட்டது. இவரது அனுமதி பெற்றுத்தான் சிவனை தரிசிக்க வேண்டும். லவ, குசர்கள் தம் தந்தை, ராமருடன் போரிட்டதால் பித்ரு சாபம் பெற்றனர். இதனால் அவர்கள் இருவரும் இங்கு வந்து தங்கி 12 வருட காலம் பிரதோஷ பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.

    இவர்கள் ஆரம்பித்தது தான் முதல் பிரதோஷ பூஜை. இங்கு ஒரு பிரதோஷம் பார்த்தால் 1000 பிரதோஷம் பார்த்த பலன் உண்டு. இங்கு பிரதோஷம் மிக விசேஷம். இங்குள்ளது போல வடக்கு பார்த்த சிவனையும், மூக்கணாங்கயிறு போட்ட நந்தியையும் வேறு எங்கும் பார்க்க முடியாது.

    இங்குள்ள அம்பாள் தர்மசம் வர்த்தினி தனது இடது பாதத்தை முன் வைத்து அனைவரையும் வரவேற்பது போல் காட்சி தருகிறாள். சிவன் கோவிலின் முன்புள்ள 16 கால மண்டபத்தில் ஒரு தூணில் சரபேஸ்வரர் உள்ளார். இவருக்கு ராகு காலத்தில் பூஜை உண்டு.

    இவர் திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது அவரை அடக்கினார். சிவனின் 64-வடிவங்களில் ஒன்று இது. இவரை வணங்கினால் ஆபத்தில் இருந்து காப்பார். ஞாயிறு அன்று ஆயிரக்கணக்கானவர்கள் இவரை வழிபட்டு பலன் பெறுகிறார்கள். இவரை வழிபட்டால் பல குறைகள் நீங்கும்.

    • பச்சை காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது.
    • விலை பல மடங்கு அதிகரித்து இருப்பது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

    போரூர்:

    மாண்டஸ் புயல் மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் பொருட்கள் வாங்க வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வருகை பாதியாக குறைந்தது.

    இதனால் பச்சை காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. மேலும் விற்பனை ஆகாமல் 500 டன் வரை காய்கறிகள் தேக்கம் அடைந்தன.

    இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காய்கறி உற்பத்தி நடைபெற்று வரும் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாய தொழிலாளர்கள் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லவில்லை.

    இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து குறைந்துவிட்டது. இன்று தக்காளி 39 லாரிகள், வெங்காயம் 50 லாரிகள் என மொத்தம் 350 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. வரத்து குறைவு காரணமாக கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.13-க்கு விற்ற தக்காளி இன்று விலை அதிகரித்து ரூ.22-க்கும், ஒரு கிலோ ரூ.10க்கு வாங்கி செல்ல யாரும் ஆர்வம் காட்டாத பீன்ஸ் மற்றும் உஜாலா கத்தரிக்காய் ஆகிய காய்கறிகள் இன்று பல மடங்கு அதிகரித்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் ஒரு கிலோ ரூ100-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.150-க்கும், கிலோ ரூ.30-க்கு விற்ற ஊட்டி கேரட் ரூ.45-க்கும், கிலோ ரூ.20-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.40-க்கும், கிலோ ரூ.20-க்கு விற்ற அவரைக்காய் ரூ.60-க்கும், கிலோ ரூ.7-க்கு விற்ற முட்டை கோஸ் ரூ.15-க்கும், ஒரு கிலோ ரூ.15-க்கு விற்ற வெள்ளரிக்காய் ரூ.30-க்கும், ரூ.10க்கு விற்ற காலிஃபிளவர் ஒன்று ரூ.40-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

    சில்லரை விற்பனை கடைகளில் பச்சை காய்கறிகளின் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து இருப்பது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

    இதையடுத்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது :-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 39 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. தினசரி 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.

    கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் உற்பத்தியான தக்காளியை அறுவடை செய்ய விவசாய தொழிலாளர்கள் யாரும் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லவில்லை இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இனி வரும் நாட்களில் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:- தக்காளி-ரூ22, ஊட்டி கேரட்-ரூ45, ஊட்டி பீட்ரூட்-ரூ45, நைஸ் கொத்தவரங்காய்-ரூ70.

    கோயம்பேடு மேம்பாலத்தில் வியாபாரியிடம் கத்திமுனையில் ரூ.1½ லட்சம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியை சேர்ந்தவர் ரகீம் (30) அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு பர்மா பஜார் சென்றார். பின்னர் அங்கிருந்து புதிய செல்போன்கள் வாங்கி கொண்டு இரவு 11 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டி ருந்தார். கோயம்பேடு மேம்பாலம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்தபோது பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நின்றுவிட்டது.

    இதையடுத்து ரகீம் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரகீம் வைத்து இருந்த கைப்பையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    அதில் ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.2.20 லட்சம் மதிப்புள்ள 5 விலை உயர்ந்த செல்போன்கள் இருந்தன. இது குறித்து ரகீம் கோயம்பேடு பஸ்நிலைய போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா.இவர் ஆட்டோவில் மிளகாய்தூள் விநியோகம் செய்து வருகிறார். இவர் திருவள்ளூர் மணவாள நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைக்கு மிளகாய்தூள்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கே வந்த மர்ம நபர் இளையராஜா மீது எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய பொடியை தூவினார். அந்த எரிச்சலில் இளையராஜா திரும்பிய போது மர்ம வாலிபர் ஆட்டோவில் இருந்த ரூ.44 ஆயிரத்து 400 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டார். இது தொடர்பாக மணவாளநகர் போலீசில் இளையராஜா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் கண்டக்டர் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையை சேர்ந்தவர் கோபி (40). இவர் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனக்கு கொடுக்கப்பட்ட பயணிகள் டிக்கெட் காணாமல் போனதாக அதிகாரிகளிடமும்,பஸ் நிலைய போலீசிலும் கோபி புகார் அளித்தார். இதன் காரணமாக போக்குவரத்து அதிகாரிகள் கோபிக்கு பணி வழங்க வில்லை.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு அறையில் இருந்த கோபி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் கோபியை பரிசோதனை செய்த போது கோபி இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணி வழங்கப்படாததால் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த கோபி மாரடைப்பால் உயிரிழந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் போக்குவரத்து ஊழியர்களிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    டிபி சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் அருணா. இவர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து அருணாவை பார்ப்பதற்காக அவரது மாமா சுந்தரம், அத்தை சரோஜா ஆகியோர் சென்னை வந்தனர்.

    நேற்று இரவு சொந்த ஊர் திரும்ப கோயம்பேடு பஸ் நிலையம் வந்த சுந்தரம், சரோஜா இருவரும் போளூர் செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர். அப்போதுஜன்னல் ஓரத்தில் வைத்திருந்த அவரது கைப்பை மாயமானது. அதிலிருந்த 10சவரன் நகை, ஏ.டி.எம். கார்டு மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சுந்தரம் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோயம்பேட்டில் பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பாரிமுனையில் இருந்து வடபழனி நோக்கி நேற்று மாலை மாநகர பஸ் (எண்.15எப்) வந்தது. கோயம்பேடு பஸ் நிலையத்துக்குள் பஸ் வந்தபோது படிகட்டில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை கண்டக்டர் தனசிங் இறங்குமாறு கூறினார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் கண்டக்டர் தனசிங் பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதனை அறிந்த மாநகர பஸ் டிரைவர்கள்-கண்டக்டர்கள் பஸ்சை ஓட்டாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்களை மீண்டும் இயக்க செய்தனர்.

    இதற்கிடையே கண்டக்டரை தாக்கியதாக சிந்தாதிரிப்பேட்டையில் தங்கி ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்த செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர்.

    கோயம்பேட்டில் மாநகர பஸ்சில் பெண்ணிடம் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    போரூர்:

    ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் சோனாச்சலம். இவரது மனைவி தங்க புஷ்பம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களுரில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று சென்னை திரும்பினார்.

    பின்னர் அவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஆவடி செல்லும் மாநகர பஸ்சில் (எண்.77) அமர்ந்தார். பஸ் புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும் தங்கபுஷ்பம் தனது கைப்பையை பார்த்த போது, அது கிழிந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் 13 பவுன் நகை இருந்தது.

    மர்ம நபர்கள் பையை பிளேடால் கிழித்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோயம்பேட்டில் வழிப்பறி கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கோயம்பேடு நூறடி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் கத்தி, செல்போன்கள் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் கோயம் பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி, செல்போன் பறிப்பு மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஆதம், நெற்குன்றத்தைச் சேர்ந்த விக்னேஷ், பிரவீன் ராஜேஷ், பாலாஜி, மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வா மற்றும் 18வயது சிறுவன் ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள்கள், கத்தி, 12 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    ×