search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vegetable prices"

    • மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகள் வரத்து குறைய தொடங்கியுள்ளது.
    • மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளிகள் 4 ஆயிரம் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ .சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மொத்த வியாபாரம், சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது.

    இங்கு சத்தியமங்கலம், தாளவாடி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பெங்களூர், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் வரத்தாகி வருகின்றன.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகள் வரத்து குறைய தொடங்கியுள்ளது.

    இன்று ஈரோடு வ .உ. சி. பூங்கா மார்க்கெட்டிற்கு காய்கறி வழக்கத்தை விட காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று மார்க்கெட்டில் காய்கறி விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது.

    அதே நேரம் தக்காளிகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் விலை கிலோ ரூ.8 முதல் 10-க்கு விற்கப்பட்டு வருகிறது. இன்று வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-

    கத்தரிக்காய்-70-80, வெண்டைக்காய்-15, கேரட்-60, பீன்ஸ்-90,, முள்ளங்கி- 25, பீட்ரூட்- 50, உருளைக்கிழங்கு-40, சொரக்காய்-15, முட்டைக்கோஸ்-40, மொர க்காய்-30, கொத்தவரங்காய் -40, பட்டாஅவரை-30, கருப்புஅவரை-80, காலிப்ளவர்-40, பீர்க்க ங்காய்-40, பாவக்காய்-40, பொடலங்காய்-45, தக்காளி-8-10, முருங்கைக்காய்-40, பச்சை மிளகாய்-60, இஞ்சி-60.

    பொதுவாக ஈரோடு வ. உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளிகள் 4 ஆயிரம் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன. தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளதால் 8 ஈயிரம் பெட்டிகள் வரத்தாகி வருகிறது.

    இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ. 12 வரை ரகத்திற்கு தகுந்தாற்போல் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிக அளவில் தக்காளிகள் வரத்தாகி வருவதால் விற்பனையாகாமல் அழுகி அதனை குப்பையில் வியாபாரிகள் போட்டு வருகின்றனர். 

    பக்ரீத் மற்றும் முகூர்த்தநாள் எதிரொலியாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை நீண்ட நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு கேரளாவிற்கும், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

    கேரளாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக குறைந்த அளவு காய்கறிகளே அனுப்பி வைக்கப்பட்டன. தினசரி 80 லாரிகளில் கேரளாவிற்கு காய்கறிகள் செல்லும். ஆனால் கடந்த ஒரு வாரமாக 25 லாரிகளில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக காய்கறிகளின் ஆர்டர்களும் குறைந்தது. இதனால் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் கிடைத்த விலைக்கு காய்கறிகளை விற்று சென்றனர்.

    தற்போது கேரளாவில் மழை முற்றிலும் நின்றுவிட்டதால் நேற்று முதல் வழக்கம்போல் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் நாளை பக்ரீத் பண்டிகை வருவதாலும் அடுத்து 2 நாட்கள் முகூர்த்த நாளாக இருப்பதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.

    எனவே கடந்த ஒரு வாரமாக தேங்கி கிடந்த காய்கறிகளுக்கும் கூடுதல் விலை கிடைத்துள்ளது.

    கிலோ ரூ.17-க்கு விற்ற வெண்டை ரூ.40-க்கும், சின்ன வெங்காயம் ரூ.45, பல்லாரி ரூ.30, தேங்காய் ரூ.45, இஞ்சி ரூ.120, பூண்டு ரூ.120, கத்தரிக்காய் ஒரு பை ரூ.450, தக்காளி ஒரு பெட்டி ரூ.150, புதினா ரூ.50, மல்லி ரூ.30, எலுமிச்சை ரூ.30, பீட்ரூட் ரூ.15, பீன்ஸ் ரூ.40, முருங்கைக்காய் ரூ.18, பச்சை மிளகாய் ரூ.50 என கொள்முதல் செய்யப்பட்டது.

    பெரும்பாலான காய்கறிகளின் விலை 2 மடங்கு அதிகரித்தது. இதனால் விவசாயிகளிடமும் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு நிலமை சீரடைந்துள்ளதால் கேரளாவிற்கும் அதிக அளவு காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கடந்த 12 நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் டீசல் விலை 3 ரூபாய் 20 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #petroldiesel
    சேலம்:

    இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்புக்கு ஏற்ப பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது.

    இதனால் படிப்படியாக டீசல் விலை உயர்ந்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் 72.70 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 12 நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் டீசல் விலை 3 ரூபாய் 20 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இதில் முடிவு ஏற்படாவிட்டால் லாரி வாடகை மேலும் உயர்த்தப்பட்டு காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது- டீசல் விலை உயர்வால் லாரி தொழில் நாளுக்கு நாள் நசுங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வாடகை உயர்த்தி நிர்ணயிக்கப்படவில்லை. தினமும் டீசல் விலை உயர்வால் சரியாக வாடகை நிர்ணயம் செய்ய முடியவில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் தினமும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

    லாரிகள் அதிகமாக உள்ள நிலையில் லோடு கிடைக்காததால் ஓட்டம் இல்லாமல் ஏராளமான லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் பல ஆயிரம் லாரிகள் பழைய இரும்பு விலைக்கு விற்கப்படுகிறது.



    டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் பிரிமியம் 21 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. டோல்கேட் கட்டணம் அதிகரிக்கப்பட்டதுடன் நீண்ட நேரம் காத்து நின்று செலுத்த வேண்டி உள்ளது.

    இதனை தவிர்க்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்கசாவடி கட்டணத்தை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20-ந் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் தொடங்குகிறது.

    இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் கீழ் உள்ள நான்கரை லட்சம் லாரிகளும் பங்கேற்கும். இதனால் சரக்கு போக்குவரத்து முடங்கும் நிலை உள்ளது. இதில் லாரி உரிமையாளர்களுக்கு சாதகமாக முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #petroldiesel

    ×