என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "good friday"

    • தன் படைப்புகள் எல்லாவற்றையும் அனுபவிக்க, மனிதனைப் படைத்தார்.
    • கடவுள், மனிதர்களை நல்வழிப்படுத்த இறைவாக்கினர்களை அனுப்பினார்.

    உலகம் எங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள், சிலுவையில் அறையப்பட்டு இயேசு மரித்த நாளை புனித வெள்ளி (இன்று) யாக அனுசரிக்கிறார்கள். இந்த நேரத்தில் இயேசு யார்? அவர் எதற்காக தன் உயிரைக் கொடுத்தார்? அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அடிப்படையான காரணத்தைப் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.


    இறைவன் இந்த உலகைப் படைத்தார். தன் படைப்புகள் எல்லாவற்றையும் அனுபவிக்க, மனிதனைப் படைத்தார். அந்த மனிதனை, தன் சாயலில் இருக்கும்படியாகவே உருவாக்கினார். ஆனால் மனிதனோ, இறைவன் செய்த நன்மைகளை மறந்து வழிதவறிச் சென்றான்.

    இதை அறிந்த கடவுள், அவனை நல்வழிப்படுத்த இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்கள் சொன்னதையும், மனிதர்கள் கேட்கவில்லை. எனவே கடவுள் தம் ஒரே மகனான இயேசுவை பூமிக்கு அனுப்பினார். இதனையே ``கடவுள் தம் ஒரே மகனையே அனுப்பும் அளவுக்கு உலகின் மீது அன்பு கூர்ந்தார்" என்று விவிலியத்தில் வாசிக்கிறோம்.

    மனிதர்களை நல்வழிக்கு திருப்பும் இந்த திட்டப்படி, இயேசுவானவர் கன்னி மரியாளின் வயிற்றில் தூய ஆவியால் கருவுற்றார். பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். நாசரேத்தில் வளர்ந்து பொதுப்பணி செய்தார். அதுவும் தேவையில் இருக்கும் மக்களைத் தேடிச் சென்று உதவினார். 'சிறைபட்டோர் விடுதலை அடையவும், பார்வையற்றோர் பார்வை பெறவும்' தன்னை அர்ப்பணித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றார். சட்டத்தை தூக்கிப் பிடித்த யூத சமூகத்தினரிடம், மனிதத்தை மையப்படுத்தும்படி வலியுறுத்தினார். அதனால் யூதர்களின் பெரும் எதிரியாக சித்தரிக்கப்பட்டார்.

    தன்னோடு இருந்த சீடர் ஒருவரால், காட்டிக் கொடுக்கப்பட்டார். அதற்கு முன்பாக இயேசு, தன்னுடைய சீடர்களின் பாதங்களை கழுவினார். இதன் மூலம் 'பணிவிடை பெறுபவன் அல்ல.. பணிவிடை புரிபவனே தலைவன்' என்ற தத்துவத்தை முன்னிறுத்தினார்.

    இயேசுவை கைது செய்தவர்கள், அவர் தலையில் முள் கிரீடம் சூட்டி, சிலுவையை சுமக்க வைத்தனர். அப்போது பல அருவருக்கத்தக்க செயல்களைச் செய்து, இயேசுவை துன்புறுத்தினர்.

    ஆனால் இயேசு, அவை அனைத்தையும் கோபம் கொள்ளாது ஏற்றுக்கொண்டதுடன், "தந்தையே.. இவர்களை மன்னியும்" என்று தன்னை துன்புறுத்தியவர்களுக்காக இறைவனிடம் மன்றாடினார். இயேசு, தன்னுடைய உச்சக்கட்ட அன்பை வெளிப்படுத்திய தருணம் இது.

    பிலாத்து என்பவன் இயேசுவிடம் , "அப்படியானால் நீ அரசன்தானோ?" என்று கேட்டான். அதற்கு இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன். இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்"என்று பதில் கூறினார் (யோவான்: 18:37). இவ்வாறு மக்களிடையே இருந்த ஒவ்வொரு தருணத்திலும், உண்மையை மக்களுக்கு அறிவித்தபடியே இருந்தவர் இயேசுபிரான்.

    அன்பால் மக்களை தன்வசப்படுத்தி, உண்மையின் பக்கம் நின்று, அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த இயேசு ஒரு புரட்சியாளர். அவரை பின்பற்றும் நாமும் உண்மையின் பக்கம் நிற்போம்!

    பகைவரையும் அன்பு செய்வோம்! அதுதான் இயேசுவின் ரத்தம் சிந்தப்பட்ட, 'புனித வெள்ளி' தினத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.

    • கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வது வாடிக்கை.
    • கிறிஸ்தவ பெருமக்கள் இப்புனித நாளில், மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவை மரணத்தையும் நினைவு கூர்ந்து உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் துக்க நாளாகும்.

    இயேசுபிரான் அனுபவித்த கஷ்டங்களையும், சிலுவையில் தன்னையே தியாகம் செய்ததை நினைவு கூர்ந்து கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வது வாடிக்கை.

    கிறிஸ்தவ பெருமக்கள் இப்புனித நாளில், மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை ஏற்று வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி அன்று, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இயேசுவும் அவரது பன்னிரெண்டு சீடர்களும் பாஸ்காவைக் கொண்டாடினர்.
    • இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், ஜீவிக்கிறார்.

    ஈஸ்டர் பண்டிகை என்பது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் கொண்டாட்டமாகும். 'ஈஸ்டர்' என்ற வார்த்தை 'ஆல்பா' என்ற லத்தீன் சொல்லில் இருந்து உருவானது. இதற்கு 'விடியல்' என்று பொருளாகும். இது ஜெர்மன் மொழியில் 'ஈஸ்டாரம்' என்றும், ஆங்கிலத்தில் 'ஈஸ்டர்' என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு 'உயிர்த்தெழுதல்' என்பது பொருளாகும்.

    இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்வதற்கு ஐரோப்பாவில் வர்ணம் பூசப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட முட்டைகளின் பயன்பாடு 13-ம் நூற்றாண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதையடுத்து, உயிர்த்தெழுதலின் அடையாளமாக முட்டை மாறியது. இயேசு கல்லறையில் இருந்து எழுந்தது போல், முட்டை ஓட்டில் இருந்து வெளிப்படும் குஞ்சு புதிய வாழ்க்கையை குறிக்கிறது.

    ஆர்த்தடாக்ஸ் பாரம்பரியத்தில், சிலுவையில் இயேசு சிந்திய ரத்தத்தின் அடையாளமாக முட்டைகளுக்கு சிவப்பு வண்ணம் பூசப்படுகிறது. இந்த முட்டையினுள் வண்ண வண்ண சாக்லெட்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் படி இருக்கும்.

    ஈஸ்டர் என்பது, 'பாஸ் ஓவர்' நிகழ்வை நினைவுகூரும் பாஸ்கா பண்டிகைக்கு ஒப்பானதாகும். இது இஸ்ரவேலர்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, எகிப்தை விட்டு புறப்படும் போது, கடவுள் எகிப்தில் இஸ்ரவேலர்களின் வீட்டு நிலைகளில் ரத்தம் பூசப்பட்ட வீடுகளை 'கடந்து சென்றதன்' நினைவாகக் கொண்டாடப்படுகிறது. இதை யூதர்கள் இன்றளவும் முக்கியமான நிகழ்வாக கொண்டாடி வருகின்றனர்.

    இயேசுவும் அவரது பன்னிரெண்டு சீடர்களும் பாஸ்காவைக் கொண்டாடினர். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, அப்பம், திராட்சை ரசத்தை சீடர்களுக்கு கொடுத்து நற்கருணை திருவிருந்து என்னும் உடன்படிக்கையை உருவாக்கிய கடைசி இரவு உணவு - பாஸ்காவின் முதல் நாளுக்கான பாரம்பரிய உணவாகும்.

    இயேசு சிலுவையில் அறையப்பட்டு, ரத்தம் சிந்தி மரித்ததை நினைவுகூரும் நிகழ்வு தான் இப்போது ஆலயத்தில் கடைப்பிடிக்கப்படும் நற்கருணை, திருவிருந்து ஆகும். இயேசுவின் உயிர்த்தெழுதல் தரும் நம்பிக்கை என்பது நம் ஒவ்வொருவருக்கும் நித்திய வாழ்வு உண்டு என்பது தான்.

    இன்றைக்கு நம் ஒவ்வொருவரையும் வாட்டிக்கொண்டிருக்கும் பயங்கள் பலவிதம். அது மரணத்தைக் குறித்த பயமாக இருக்கலாம். அல்லது வியாதியால் மரணம் வந்துவிடுமோ என்ற அச்சமாக இருக்கலாம். அல்லது எதிர்காலத்தைக் குறித்த பயமாக இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொருவரையும் பலவிதமான பயங்கள் ஆட்டிப் படைக்கிறது.

    ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். நமது பயத்தை நீக்குகிறவர் இயேசு கிறிஸ்து, அதனால் தான் வேதாகமத்தில் 365 முறை 'பயப்படாதே' என்று கூறப்பட்டுள்ளது. நமது பயத்தை அவர் சந்தோஷமாக மாற்றுகிறார் எப்படி?

    "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகலநாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்" என்றார் (மத்.28:20). அல்லேலூயா! ஆமேன்.

    இன்றைக்கு உலக வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மனிதன் வாழ்விலிருந்து மரணத்தை நோக்கி ஒடிக்கொண்டிருக்கிறான். ஆனால் இயேசு சொல்லுகிறார், மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, அது ஒரு வாசல்.

    நிலையற்ற வாழ்க்கையிலிருந்து நித்திய வாழ்க்கைக்குள்ளாக கடந்து செல்லுகிற ஒரு வாசல் என்று சொல்லுகிறார். அது எப்படி உண்மை என்பதை தன்னுடைய உயிர்த்தெழுதலினாலே அவர் நிரூபித்தார்.

    மனிதனாய் பிறந்தார், மாம்சமும் ரத்தமும் உடையவராய் வாழ்ந்தார், அவர் மகிமையின் சரீரத்தோடு எழுந்திருக்கும்போது எனக்கும் அதே நம்பிக்கை உண்டு. மறுமை ஒன்று உண்டு, அது நிச்சயம் என்கிற அந்த உண்மையை இயேசுவின் உயிர்த்தெழுதல் இந்த உலகிற்கு காட்டியது.

    இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உன்னதமான நம்பிக்கையை தருகிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தது போல நாமும் இம்மையில் மரித்தாலும், மகிமையில் நிச்சயமாக உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கை தான் அது, ஆம் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், ஜீவிக்கிறார்.

    இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் பிறருக்கு அவர் செய்த அன்பான சேவையின் முன் மாதிரியை பின்பற்றுவதன் மூலம் நாம் அவருக்கு நன்றி செலுத்தி, உயிர்த்தெழுதல் நினைவை கொண்டாடி, தேவைப்படுவோருக்கு உதவி செய்து மகிழ்ச்சியடைவோம். 

    • இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் ‘திராவிட மாடல்’ மதச்சார்பின்மையா? என்ற கேள்வியும் எழுகிறது.
    • இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசாணை வெளியிட வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.

    தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திருவிழாவான மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் மூட உத்தரவிடும் தமிழ்நாடு அரசு, அவர்களைவிடவும் பெரும்பான்மை சமயத்தினராக தமிழ்நாட்டில் வாழ்கின்ற கிறித்துவப் பெருமக்களின் கோரிக்கைக்கு சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.

    மகாவீரர் ஜெயந்திக்காக வெகுசன மக்களின் உணவு உரிமையான இறைச்சிக்கடைகளை மூடும் திமுக அரசு, புனித வெள்ளிக்காக உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? அரசின் வருமானம் ஒருநாள் தடைபடுவதைத் தவிர, மதுக்கடைகளை மூடுவதால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது? எல்லோருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசு, குறிப்பிட்ட மக்களின் சமய உணர்வுகளுக்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட சமய மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்படுவது சிறிதும் அறமற்றச்செயலாகும். இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் 'திராவிட மாடல்' மதச்சார்பின்மையா? என்ற கேள்வியும் எழுகிறது.

    ஆகவே, திமுக அரசு கிறித்துவப் பெருமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி நாளன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டுமென்றும், அதனை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசாணை வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

    • ஆயிரக்கணக்கானவர்கள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
    • போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வும் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வும் தற்போது நடைபெற்று வருகிறது.

    ஏப்ரல் 24-ந்தேதி பள்ளியின் கடைசி வேலை நாளாகும். அதன் பின்னர் கோடை விடுமுறை விடப்படுகிறது. கோடை விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரிக்கிறது. சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கானவர்கள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    ரெயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பியதால் சிறப்பு ரெயில்கள் அறிவிக் கப்பட்டு வருகிறது. தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிற மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயில்கள் நிரம்பி வருகின்றன.

    சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிகள் மற்றும் கோவை, திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டன. இந்த வாரம் முதல் மே, ஜூன் மாதம் வரை பெரும்பாலான ரெயில்களில் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருச்செந்தூர், திருச்சி, ராமேஸ்வரம், பெங்களூர், மைசூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

    இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழ் புத்தாண்டு தினம் அரசு விடுமுறையாகும். 12, 13-ந் தேதி (சனி, ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து தமிழ் புத்தாண்டு தினம் வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

    இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குகிறது. அரசு விரைவு போக் குவரத்துக் கழகம் 1000 பஸ்களை முழு அளவில் இயக்க திட்டமிட்டுள்ளன.

    இதே போல வருகிற 18-ந்தேதி புனிதவெள்ளி அரசு விடுமுறையாகும். அதனோடு சேர்ந்து 19, 20 ஆகிய நாட்களும் தொடர் விடுமுறையாக இருப்பதால் முன்பதிவு அதிகரித்துள்ளது.

    சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டன. காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள்ளதால் கூட்ட நெரிசலை குறைக்க கோடைகால சிறப்பு ரெயில் இன்னும் கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஆம்னி பஸ்களிலும் முன் பதிவு விறுவிறுப்பாக உள்ளது. கோடை காலத்தில் குளிர்சாதன வசதியுள்ள பஸ், ரெயில்களில் மக்கள் செல்ல விரும்புவதால் துரந்தோ, வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் ஜூன் மாதம் வரை நிரம்பி உள்ளன.

    • புனித வெள்ளியைெயாட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
    • மரணத்தை உணர்த்தும் ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தபடி வந்தனர்.

    கடலூர்:

    ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.இதை நினைவு கூறும் வகையில் இன்று புனித வெள்ளியைெயாட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயம், புனித எபிபெனி சி.எஸ்.ஐ. தேவாலயத்திலும், மணவெளி அக்கினி எழுப்பு தல் தேவாலயத்திலும், ஆற்காடு லூத்தரன் திருச்ச பையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. பங்கு தந்தை தலைமையில் இந்த சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.

    அப்போது கிறிஸ்தவர்கள் பாட்டுப்பாடியும், கிறிஸ்து பாடு மரணத்தை உணர்த்தும் ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தபடி வந்தனர். அதேபோல் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.கிறிஸ்தவ தேவாலயத்தில் மும்மணிநேர தியான ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பா திரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம் மேல்பட் டாம்பாக்கம் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவால யங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் ஏராள மான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சிலுவையில் அறையப் பட்ட 3–-வது நாளில் ஏசு உயிர்த்தெழுந்தார். இதை நினைவு கூறும் வகையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி அன்று அதிகாலையில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களி லும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

    • தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
    • கத்தோலிக்க தேவால யங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

    நெல்லை:

    இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நி னைவூட்டும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் மேற்கொள்வா ர்கள். தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்தவாரம் குருத்தோலை ஞாயிறு நடைபெற்றது.

    இந்நிலையில் பெரிய வியாழனான நேற்று பாதம் கழுவுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாள் புனித வெள்ளியாக கருத்தப்படுகிறது.

    இன்று புனித வெள்ளியை யொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் சிலுவை ப்பாதை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பாளையங்கோட்டையில் உள்ள தென்னிந்திய திருச்சபை தேவாலயங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மும்மணி ஆராதனை என்ற பிரார்த்தனையில் கிறிஸ்த வர்கள் உபவாசத்து டன் பங்கேற்றனர். கத்தோலிக்க தேவால யங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

    பாளை தூய சவேரியார் தேவாலயம் சார்பில் சிலுவைப்பாதை வழிபாடு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதேபோல் சீவலப்பேரி, பேட்டை , திசையன்விளை, ராதாபுரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவலாயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஈஸ்டர் பண்டிகை நாளை மறுநாள்( ஞாயிற்றுக்கிழமை) கொண்டா டப்படுகிறது. இதனையொட்டி நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு கத்தோலிக்க ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரா ர்த்தனை நடைபெறுகிறது.

    இதேபோல் சி.எஸ்.ஐ. ஆலயங்களில் நாளை மறுநாள் அதிகாலை ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனையும், திருவிருந்து ஆராதனையும் நடைபெறு கிறது. ஈஸ்டர் பண்டிகையை யொட்டி நாளை இரவு 11.30 மணிக்கு தூய சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது.

    • வாடிகன் நகரில் கடுங்குளிர் நிலவி வருகிறது.
    • இதனால் புனித வெள்ளி நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் பங்கேற்கவில்லை.

    வாடிகன்:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கத்தோலிக்க மதத் தலைமையகமான வாடிகன் நகரில் போப் தலைமையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.

    போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

    இந்நிலையில், வாடிகனில் கடுங்குளிர் நிலவுவதால் போப் பிரான்சிஸ் புனித வெள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என வாடிகன் செய்தி தொடர்பாளர் மெட்டா புருனி தெரிவித்தார். ஆனாலும் வழக்கமான பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன.

    • சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு நடந்தது.
    • இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் சார்பில் புனித வெள்ளி வழிபாடு நடந்தது. ஆலய பங்குதந்தை பாஸ்கர் டேவிட் தலைமை வகித்தார். தொன்போஸ்கோ ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் தாளாளர் ஆரோக்கியம், பள்ளி முதல்வர் ஆல்பிரட், நிர்வாகிகள் சார்லஸ், பிரபு, ரோஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கீழ ஈரால் பங்குத்தந்தை அலெக்ஸ் கலந்து கொண்டார்.

    சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாதா ஆலய தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் பரலோகராஜ், முன்னாள் தலைவர்கள் ஜெயராஜ், அந்தோணிராஜ், முன்னாள் செயலாளர்கள காமராஜ், அருள் பால்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது.
    • கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள்.

    சென்னை:

    கிறிஸ்தவர்களின் தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது. இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இந்த காலத்தை தவக் காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்று கூறுவது உண்டு.

    40 நாட்கள் கிறிஸ்தவர் கள் நோன்பு இருந்து தம்மை தாமே வெறுத்து தங்களுக்கு பிடித்த காரியங்களை தவிர்த்து ஆண்டவனை தியானிப்பார்கள். உண்ணும் உணவு, உடைகள் போன்ற அலங்காரங்களை தவிர்த்து பிறருக்கு உதவி செய்து ஆன்மீக வலிமையை இக்காலக் கட்டத்தில் பெறுவார்கள்.

    தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இது யூதர்களின் பாரம்பரியம். காலப்போக்கில் அனைத்து திருச்சபைகளும் `சாம்பல் புதன்' நாளை பின்பற்றி வருகிறார்கள்.

    குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மக்கள் ஓலையினால் ஆன சிலுவையை எரித்து அதன் சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் கிழமை வருகிற 14-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் காலையிலும் மாலையிலும் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

    அதனைதொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வழிபாடு நடைபெறும். இயேசு உபவாசம் இருந்த தபசுக் காலத்தில் கிறிஸ்தவர்கள் கஷ்ட நாட்களாக கருதி அனைத்து வழிபாடுகளிலும் எளிமையாக பங்கேற்பார்கள். ஏழைகளுக்கு உதவி செய்யும் தியாக நாட்களாக இவை பின்பற்றப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்படும் அந்த நாட்களை நினைவு கூர்ந்து புனிதவாரம் அனுசரிக்கப்படுகிறது. பெரிய வியாழன், புனித வெள்ளியை தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்ச் மாதம் 31-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    • மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர்.
    • கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை பவனி நடை பெற்றது.

    சென்னை:

    இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்து வந்த காலத்தை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசு ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையின் மீது பவனியாக அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது குருத்தோலை களை பிடித்தவாறு ஜெருசேலம் மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர். அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை பவனி நடை பெற்றது.

    சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளில் சிலுவையை செய்து கையில் பிடித்தவாறு கிறிஸ்தவர்கள் ஆலயத்தை சுற்றியும், தெருக்கள், வீதிகளிலும், பவனியாக சென்றனர்.

    சென்னையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள், தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) ஆலயங்கள், மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்தே, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.

    சென்னை சாந்தோம் பேராலயம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், மாதவரம் புனித அந்தோணியார் ஆலயம், சின்னமலை தேவாலயம், கத்தீட்ரல் பேராலயம், புதுப்பேட்டை புனித அந்தோ ணியார் ஆலயம் உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆல யங்களிலும் இன்று குருத்தோலை பவனி நடந்தது.

     குருத்தோலை பவனியில் சென்ற கிறிஸ்தவர்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்ற பாடலை பாடியபடி சென்ற னர். பின்னர் ஆலயங்களில் பேராயர்கள், பாதிரியர்கள், போதகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

    • பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்
    • இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

    புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணமலை. திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி. நகார்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28/03/2024 (வியாழக் கிழமை) அன்று 605 பேருந்துகளும் 29/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 300 பேருந்துகளும். 30/03/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ×