என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு
    X

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையும் காட்சி சித்தரித்து காட்டப்பட்டது.

    வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு

    • சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு நடந்தது.
    • இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் சார்பில் புனித வெள்ளி வழிபாடு நடந்தது. ஆலய பங்குதந்தை பாஸ்கர் டேவிட் தலைமை வகித்தார். தொன்போஸ்கோ ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் தாளாளர் ஆரோக்கியம், பள்ளி முதல்வர் ஆல்பிரட், நிர்வாகிகள் சார்லஸ், பிரபு, ரோஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கீழ ஈரால் பங்குத்தந்தை அலெக்ஸ் கலந்து கொண்டார்.

    சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாதா ஆலய தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் பரலோகராஜ், முன்னாள் தலைவர்கள் ஜெயராஜ், அந்தோணிராஜ், முன்னாள் செயலாளர்கள காமராஜ், அருள் பால்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×