புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு

புனித வெள்ளியைெயாட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.மரணத்தை உணர்த்தும் ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தபடி வந்தனர்.
 புனித வெள்ளியையொட்டி கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் சிலுவை  பாதை வழிபாடு நடைபெற்ற காட்சி.இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
 புனித வெள்ளியையொட்டி கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு நடைபெற்ற காட்சி.இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Published on

கடலூர்:

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.இதை நினைவு கூறும் வகையில் இன்று புனித வெள்ளியைெயாட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயம், புனித எபிபெனி சி.எஸ்.ஐ. தேவாலயத்திலும், மணவெளி அக்கினி எழுப்பு தல் தேவாலயத்திலும், ஆற்காடு லூத்தரன் திருச்ச பையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. பங்கு தந்தை தலைமையில் இந்த சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.

அப்போது கிறிஸ்தவர்கள் பாட்டுப்பாடியும், கிறிஸ்து பாடு மரணத்தை உணர்த்தும் ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தபடி வந்தனர். அதேபோல் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.கிறிஸ்தவ தேவாலயத்தில் மும்மணிநேர தியான ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பா திரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம் மேல்பட் டாம்பாக்கம் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவால யங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் ஏராள மான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சிலுவையில் அறையப் பட்ட 3–-வது நாளில் ஏசு உயிர்த்தெழுந்தார். இதை நினைவு கூறும் வகையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி அன்று அதிகாலையில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களி லும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com