என் மலர்
உலகம்

போப் பிரான்சிஸ்
வாடிகனில் கடுங்குளிர் - புனித வெள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்காத போப்
- வாடிகன் நகரில் கடுங்குளிர் நிலவி வருகிறது.
- இதனால் புனித வெள்ளி நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் பங்கேற்கவில்லை.
வாடிகன்:
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கத்தோலிக்க மதத் தலைமையகமான வாடிகன் நகரில் போப் தலைமையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.
போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், வாடிகனில் கடுங்குளிர் நிலவுவதால் போப் பிரான்சிஸ் புனித வெள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என வாடிகன் செய்தி தொடர்பாளர் மெட்டா புருனி தெரிவித்தார். ஆனாலும் வழக்கமான பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன.
Next Story






