search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் இருந்து 2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: அமைச்சர் சிவசங்கர்
    X

    சென்னையில் இருந்து 2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: அமைச்சர் சிவசங்கர்

    • இன்று சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 1,943 சிறப்புப் பஸ்களும் இயக்கப்படுகிறது.
    • சிறப்புப் பஸ்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 103 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை :

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்றிரவு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    12-ந்தேதி சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், 586 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டு 1 லட்சத்து 34 ஆயிரத்து 300 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு 1,220 பஸ்கள் இயக்கப்பட்டு 61 ஆயிரத்து 225 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு 7 மணி நிலவரப்படி, தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களில் 1,544 பஸ்களும், 1,855 சிறப்புப் பஸ்களில் 904 பஸ்களும் இயக்கப்பட்டு 1 லட்சத்து 32 ஆயிரத்து 192 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஆக மொத்தம் 2 நாட்களில் (நேற்று இரவு 7 மணி நிலவரம்) சென்னையில் இருந்து 5 ஆயிரத்து 134 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    14-ந்தேதி (இன்று) சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 1,943 சிறப்புப் பஸ்களும் இயக்கப்படுகிறது. சிறப்புப் பஸ்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 103 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு வாயிலாக ரூ.10 கோடியே 3 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    காணும் பொங்கலை முன்னிட்டு 17-ந்தேதி அன்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், பெசன்ட் நகர் கடற்கரை, குயின்ஸ் லேண்ட் ஆகிய இடங்களுக்கு 480 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×