search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாடு முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை முதல் 4500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழ்நாடு முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை முதல் 4500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • நாளையும், நாளை மறுநாளும் வழக்கமான பஸ்களுடன் திருவண்ணாமலைக்கு 4500 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    நாளையும், நாளை மறுநாளும் திருவண்ணாமலைக்கு 4500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நாளை நள்ளிரவு முதல் நாளை மறுநாள் வரை பவுர்ணமி தொடர்கிறது.

    பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இன்று முதல் திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆயிரம் கூடுதல் பஸ்களை இயக்கவும், சென்னை, கும்பகோணம், சேலம், கோவை, மதுரை போக்குவரத்து கழகங்களின் வாயிலாக 1500 கூடுதல் பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி நாளையும், நாளை மறுநாளும் வழக்கமான பஸ்களுடன் திருவண்ணாமலைக்கு 4500 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் சென்னை கோயம்பேடு மற்றும் தாம்பரத்தில் இருந்தும் விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், தருமபுரி, ஓசூர், திருச்சி, புதுச்சேரி, கடலூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் இயக்கப்பட உள்ளன.

    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு கோயம்பேடு, தாம்பரம் பஸ் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர் கோவிலில் நடக்கும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து, வரும் 4, 5-ந் தேதிகளில், மெமு வகை குறுகிய தூர பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    வேலூரில் இருந்து வரும் 4, 5-ந் தேதிகளில் இரவு 9.50 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் அதே நாளில் இரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு செல்லும்.

    திருவண்ணாமலையில் இருந்து வரும் 5, 6-ந் தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில் அதே நாளில் அதிகாலை 5.35 வேலூர் செல்லும். இந்த ரெயில்கள் வாணியம்பாடி, ஆரணி ரோடு, போளூர் வழியாக இயக்கப்படும்.

    விழுப்புரத்தில் இருந்து வரும் 5-ந் தேதி காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாளில் காலை 11 மணிக்கு திருவண்ணா மலைக்கு செல்லும்.

    திருவண்ணாமலையில் இருந்து வரும் 5-ந்தேதி மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாளில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

    விழுப்புரத்தில் இருந்து வரும் 4, 5-ந் தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாளில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலைக்கு செல்லும்.

    திருவண்ணாமலையில் இருந்து வரும் 5, 6-ந் தேதிகளில் அதிகாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாளில் காலை 5 மணிக்கு விழுப்புரம் செல்லும்.

    Next Story
    ×