என் மலர்
நீங்கள் தேடியது "சுப முகூர்த்தம்"
- விடுமுறை நாள் என்பதால் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
- கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. மேலும் சுபமுகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணங்களும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுப முகூர்த்த தின நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வார்கள். மேலும் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் டிட்வா புயல் மற்றும் தொடர் மழை பெய்து வந்ததால், வழக்கத்தை விட சற்று குறைவான பக்தர்களே கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
- கவுரி பஞ்சாகத்தில் விஷம், ரோகம், சோரம் நேரங்களில் இருக்கக் கூடாது.
- யாருக்காக நாம் நேரம் தேர்ந்தெடுக்கிறோமோ, அவர்களுக்கு அன்றைய தினம் சந்திராஷ்டமமாக இருக்கக்கூடாது.
1. அன்றைய தினம் கரிநாளாக இருக்கக்கூடாது.
2. திதியில் அஷ்டமி, நவமி திதிகளை தவிர்க்கவும்.
3. யோகம், மரணயோக நேரமாக இல்லாமல் சித்த, அமிர்த யோகமாக இருக்கட்டும்.
4. ஹோரைகளில் சூரியன், செவ்வாய், சனி ஹோரைகளை தவிர்க்கவும்.
5. ராகுகாலம், எமகண்டம் நேரம் தவிர்க்கவும்.
6. கவுரி பஞ்சாகத்தில் விஷம், ரோகம், சோரம் நேரங்களில் இருக்கக் கூடாது.
7. யாருக்காக நாம் நேரம் தேர்ந்தெடுக்கிறோமோ, அவர்களுக்கு அன்றைய தினம் சந்திராஷ்டமம் தினமாக இருக்கக்கூடாது.






