என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர்விடுமுறையால் ஏற்காட்டில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் - போக்குவரத்து நெரிசல்

    • ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கிறார்கள்.
    • பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள்

    ஏற்காடு:

    ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டு தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கிறார்கள்.

    குறிப்பாக வார விடுமுறை நாட்கள், தொடர் அரசு விடுமுறை நாட்களில் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். தற்போது சுதந்திர தின விழாவையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.

    பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள். மேலும் படகு இல்லத்தில் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால் படகு குழாம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதேபோல் அண்ணாபூங்கா, லேடீஸ் சீட் மற்றும் காட்சி முனைகளில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகிறார்கள்.

    பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன் மற்றும் பஸ்களில் ஏற்காட்டுக்கு வந்ததால் மலைப்பாதை முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஏற்காடு ரவுண்டானா மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×