என் மலர்
நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள் கூட்டம்"
- ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கிறார்கள்.
- பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள்
ஏற்காடு:
ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டு தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கிறார்கள்.
குறிப்பாக வார விடுமுறை நாட்கள், தொடர் அரசு விடுமுறை நாட்களில் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். தற்போது சுதந்திர தின விழாவையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள். மேலும் படகு இல்லத்தில் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால் படகு குழாம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதேபோல் அண்ணாபூங்கா, லேடீஸ் சீட் மற்றும் காட்சி முனைகளில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகிறார்கள்.
பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன் மற்றும் பஸ்களில் ஏற்காட்டுக்கு வந்ததால் மலைப்பாதை முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஏற்காடு ரவுண்டானா மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கொடிவேரியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி வருகிறது.
இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.
மேலும் முக்கிய தினங்கள் மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 105 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கொடிவேரி உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தொடர் விடுமுறையை யொட்டி நேற்று மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதே போல் கொடிவேரி தடுப்பணைக்கு பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். காலையில் நேரத்திலேயே மக்கள் கூட்டம் கூட்டமாக அதிகளவில் வர தொடங்கினர்.
ஆனால் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் கொடிவேரி தடுப்பணை பகுதியில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணபட்டது.
இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.
இதையொட்டி கொடிவேரி பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தடுப்பணையில் குளிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் குளிக்க வேண்டும் என்று எச்சரித்து கண்காணித்தனர்.
குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணை யின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பணை செய்யப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.
இதை தொடர்ந்து இன்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதனால் கொடிவேரி பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- கொடைக்கானலில் தொடர் மழை பெய்வதால் குளுமையான கால நிலை நிலவி வருகிறது.
- இன்று வார விடுமுறை என்பதால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கொடைக்கானல்:
இயற்கை எழில் கொஞ்சும் அழகும், கண்ணைக் கவரும் மலை முகடுகளும், தலையை முட்டும் மேகக் கூட்டங்களும் இருப்பதால் கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்று அழைப்பர். வருடம் முழுவதும் இங்கு இதமான சீதோஷ்ணம் நிலவுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
தற்போது கொடைக்கானலில் தொடர் மழை பெய்வதால் குளுமையான கால நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, பியர் சோழா அருவி போன்ற அருவிகளை கண்டு ரசித்து அருகில் நின்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இன்று வார விடுமுறை என்பதால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ் வாக், மன்னவனூர், சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும், சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ச்சியடைந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இனி வரும் காலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






