என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி"

    • திருப்பதியில் 66,530 பேர் தரிசனம் செய்தனர்.
    • தரிசனத்திற்கு வந்த குழந்தைகள் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை என்பதால் நேற்று மாலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.

    இதனால் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டகை முழுவதும் நிரம்பியது.

    பக்தர்கள் ஷீலா தோரணம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 66,530 பேர் தரிசனம் செய்தனர். 32,478 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளிர்ந்த காற்று வீசுகிறது

    இதனால் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    • விவசாய நிலத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் சுற்றி திரிந்தது.
    • சித்தைய்யா நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. இதனைக் கண்ட அவர் யானையை விரட்ட முயற்சி செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டம், தசர குடேமை சேர்ந்தவர் சித்தைய்யா (வயது 45). இவருக்கு வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது. சித்தைய்யா விவசாய நிலத்துக்கு சென்றார்.

    இவரது விவசாய நிலத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் சுற்றி திரிந்தது.

    சித்தையா விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தபோது கூட்டத்தில் இருந்து யானை ஒன்று பிரிந்து வந்தது. சித்தைய்யா நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. இதனைக் கண்ட அவர் யானையை விரட்ட முயற்சி செய்தார்.

    இதில் ஆத்திரமடைந்த யானை சித்தய்யாவை துரத்தியது. யானை விரட்டுவதை அறிந்த அவர் அதனிடமிருந்து தப்பித்து ஓடினார். விடாமல் துரத்திய யானை சித்தைய்யாவை தூக்கி போட்டு காலால் மிதித்து கொன்றது. வனத்துறையினர் அவருடைய உடலை மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் அறிவித்தார்.

    • குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும்.
    • டிக்கெட்டுகள் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இம்மாதம் 22-ந் தேதி முதல் 28 ம் தேதி வரை நடக்கும் கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை ஆகிய கட்டண சேவைகளில் மெய் நிகர் அடிப்படையில் கலந்து கொள்ள தேவையான டிக்கெட்டுகள் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

    மெய்நிகர் அடிப்படையிலான கட்டண சேவைகளில் பங்குபெறும் பக்தர்களுக்கு மற்றொரு நாளில் ஏழுமலையானை நேரடியாக தரிசிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

    இதேபோல் இம்மாதம் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அபிஷேகம் ஆகிய கட்டண சேவைகளில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள் இன்று காலை 10 மணி முதல் 10 ம் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தான வெப் சைட் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    பதிவு செய்த பக்தர்கரின் பெயர்கள் குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும்.

    மேலும் இம்மாதம் 22 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நடக்க இருக்கும் கட்டண சேவைகளில் நேரடியாக பங்கு பெற விரும்பும் பக்தர்கள் இன்று பகல் 12 மணி முதல் தேவையான டிக்கெட்டுகளை www.tirupatibalaji.gov.in என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • லட்டு விவகாரம் பக்தர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
    • லட்டு விவகாரத்தை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளார்.

    திருப்பதி:

    திருப்பதி லட்டு தயாரிக்க ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த கலப்பட நெய்யை பயன்படுத்தியதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.

    லட்டு விவகாரம் பக்தர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளதாக அறிவித்து இருந்தார்.

    அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதனால் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி வருகையை தற்காலிகமாக ஒத்தி வைத்தார்.

    இது குறித்து ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:-

    ஆந்திராவில் பேய்கள் ராஜ்ஜியம் நடந்து வருகிறது. லட்டு விவகாரத்தில் பா.ஜ.க. கண்ணை மூடிக்கொண்டுள்ளது.

    ஒருபுறம் போலீசார் எங்கள் கட்சிக்காரர்கள் மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டி நோட்டீஸ் அனுப்புகின்றனர். இன்னொரு பக்கம் சந்திரபாபு நாயுடு தனது தவறுகளை மறைக்க அண்டை மாநில பா.ஜ.க.வினரை கொண்டு வந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்குகிறார்.


    இது தவறான செயல். ஏழுமலையானை மதிக்கும் மற்றும் நேசிக்கும் நான் அங்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அங்கு செல்ல விரும்பவில்லை.

    அதனால் எனது சுற்றுப்பயணத்தை ஒத்தி வைக்கிறேன். திருப்பதி செல்லும் பயண தேதியை பின்னர் அறிவிக்கிறேன்.

    100 நாள் ஆட்சியில் நடந்த தோல்விகளை திசை திருப்பவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவும் லட்டு விவகாரத்தை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடந்த வாரம் கடிதம் எழுதினார். இதற்கு எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் லட்டு விவகாரத்தில் பா.ஜ.க கண்ணை மூடிக் கொண்டுள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி கூறியிருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காட்டு யானைகள் கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்தது.
    • கிராம மக்கள் பட்டாசுகளை வெடித்தும், மேளம் அடித்தும் யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சந்திரகிரி மண்டலம், கந்துலவாரி பள்ளியை சேர்ந்தவர் ராகேஷ் சவுத்ரி. இவர் தெலுங்கு தேசம் கட்சியின் அப்பகுதி இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்தார்.

    மேலும் கந்துல வாரி பள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் இருந்தார். இவருக்கு வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று சின்ன ராமபுரம் மற்றும் கொங்கரவாரிப்பள்ளி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்தது. அப்பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு, வாழை, நெல், தென்னை, மா உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தது.

    நேற்று இரவு யானைகள் கூட்டம் விளைநிலங்களில் புகுந்து நாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் ராகேஷ் சவுத்ரிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ராகேஷ் சவுத்ரி விவசாய நிலத்தில் இருந்த யானைகள் கூட்டத்தை விரட்ட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த யானைகள் கூட்டம் ராகேஷ் சவுதிரியை துரத்தியது.

    ராகேஷ் சவுத்ரி யானைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக அலறி கூச்சலிட்டபடி ஓடினார். ஆனால் ஆக்ரோஷமாக இருந்த யானைகள் கூட்டம் விடாமல் துரத்தி வந்து காலால் மிதித்து கொன்றது.

    இதனை கண்ட கிராம மக்கள் பட்டாசுகளை வெடித்தும், மேளம் அடித்தும் யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் ராகேஷ் சவுத்ரி பிணத்தை மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தெலுங்கு தேசம் எம்எல்ஏ புலிவர்த்தி ஞானி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    ×