டேட்டா மலிவானது என்பதற்காக இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் - மாணவர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கல்வி ஒரு சுமையாக இருக்கக்கூடாது, அனைவரும் முழுமையாக ஈடுபட வேண்டும்.பணத்திற்காக கேமிங்கில் ஈடுபடுபவர்கள் அழிவையே சந்திப்பார்கள்.
டேட்டா மலிவானது என்பதற்காக இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் - மாணவர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
Published on

புதுடெல்லியில் நடைபெற்ற 'பரிக்ஷா பே சர்ச்சா 2026' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டில் டேட்டா மலிவானது என்பதற்காக இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களின் வாழ்க்கை மற்றும் கல்வித் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி ஒரு சுமையாக இருக்கக்கூடாது, அனைவரும் முழுமையாக ஈடுபட வேண்டும். ஏனெனில் அரை மனதுடன் கல்வி வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றாது.

நமது இலக்கு அடையக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் எளிதில் அடையக்கூடியதாக இருக்கக்கூடாது. முதலில் மனதை அடக்குங்கள். பின்னர் மனதை இணைக்கவும். பின்னர் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்களில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் இதை செய்தால், எப்போதும் வெற்றியாளராக இருப்பதை காண்பீர்கள்.

உங்களுக்கு கேமிங்கில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் டேட்டா மலிவானது என்பதால் நேரத்தை கடத்துவதற்காக அதில் ஈடுபடாதீர்கள். பணத்திற்காக கேமிங்கில் ஈடுபடுபவர்கள் அழிவையே சந்திப்பார்கள். நாட்டில் சூதாட்டத்தை ஊக்குவிக்கக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நான் ஒரு சட்டத்தை இயற்றி உள்ளேன்.

இருப்பினும், விளையாட்டு என்பது ஒரு திறமையாக இருக்கலாம். ஏனெனில் அதற்கு வேகமும் விழிப்புணர்வும் தேவை. மேலும் அதை சுய வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com