மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

திருமுல்லைவாசல் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களுக்கு  மிதிவண்டிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யனாதன் வழங்கினார்.
மாணவர்களுக்கு மிதிவண்டிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யனாதன் வழங்கினார்.
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாண வர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

எம்.எல்.ஏ.க்கள் எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி), நிவேதா.எம்.முருகன் (பூம்புகார்), கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யனாதன் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசுகையில், தமிழக முதல்வர் பள்ளி கல்வித்துறைக்கு 40 ஆயிரத்து 299 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022 -23 கல்வி ஆண்டில் 52 அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் கல்விப்பயிலும் மொத்தம் 6536 மாணவ மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 14 லட்சத்து 81 ஆயிரத்து 100 மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென பூம்புகார், சீர்காழி சட்டபேரவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் விரைவில் மயிலாடுதுறை மாவட்ட த்திற்கு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதே போல் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் துறைமுகம் அமைக்க வேண்டும் என சட்டபேரவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் கலந்து கொண்டனர்.

தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com