என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navas Kani MP"

    • நவாஸ்கனியின் மகன் அப்சர் - ரீஷ்மான் அப்ரா ஆகியோரது திருமண விழா மகாபலிபுரத்தில் நடைபெற்றது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

    ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனியின் மகன் அப்சர் - ரீஷ்மான் அப்ரா ஆகியோரது திருமண விழா மகாபலிபுரத்தில் நடைபெற்றது.

    இந்த விலழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

    இந்நிகழ்வின்போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் திரு. கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நவாஸ் கனி எம்.பி. விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது, அவர் வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் கோபமடைந்த நவாஸ் கனி எம்.பி., இது குறித்து கலெக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கலெக்டர் விஷ்ணு சந்திரன் தள்ளிவிடப்பட்டார். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×