என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எம்.பி. நவாஸ்கனியின் மகன் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் மு.க.ஸ்டாலின்
- நவாஸ்கனியின் மகன் அப்சர் - ரீஷ்மான் அப்ரா ஆகியோரது திருமண விழா மகாபலிபுரத்தில் நடைபெற்றது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனியின் மகன் அப்சர் - ரீஷ்மான் அப்ரா ஆகியோரது திருமண விழா மகாபலிபுரத்தில் நடைபெற்றது.
இந்த விலழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்வின்போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் திரு. கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story