search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசாணை வெளியானதால் மாணவிகள் மகிழ்ச்சி
    X

    அரசாணை வெளியானதால் மாணவிகள் மகிழ்ச்சி

    • அரசாணை வெளியானதால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • விடுதிக்கான இடங்களை தேர்வு செய்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி, பெருநாழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    மாணவிகளின் நலன் கருதி சீர்மரபினர் மாணவிகள் விடுதி தொடங்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தேவர் கல்லூரி நிர்வாகம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாணவிகள் விடுதிக்கான இடங்களை தேர்வு செய்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார். கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவுக் கல்லூரியில் படிக்கும் 100 மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் புதிதாக விடுதி கட்டிடம் கட்ட கடந்த 9-ந் தேதி அரசாணை வெளியானது.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகம், மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×